விளைபொருட்களை சந்தைப்படுத்தி சாதித்த தமிழ்செல்வி

0
1

இந்தியாவின் வருவாய் விவசாய உற்பத்தி மற்றும் விளைபொருட்கள் மூலம் என்று இருந்த காலம் மலையேறிவிட்டது.

தற்போது உள்ள சூழ்நிலையில், விவசாயம் செய்ய பலர் முன்வருவதில்லை. விவசாயத்தால் லாபம் இல்லை, விவசாயம் செய்ய முடியாத பலவித இடர்பாடுகள், அதுமட்டுமல்லாமல், விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டு மனைகளாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் மாறிவிட்டன.

நான் விவசாயி என்று மார் தட்டி சொல்லும் நபர்கள் வெகு குறைவு. விவசாயத்தை நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற கருத்தே பரவலாக உள்ள சூழலில், விவசாயத்தால் லாபம் ஈட்டி மகிழ்வோடு இருப்பதாக சான்றளிக்கிறார் தமிழ் செல்வி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா கொண்டயம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வியின் தற்போது ஆண்டு லாபம் மட்டும் 13 லட்சம் விவசாயம் நஷ்டமடையக் காரணமே திட்டமிடாததும், விளைபொருட்களை சந்தை படுத்தாததுமே என்கிறார்.

விவசாயம் செய்வது இக்கால கட்டத்தில் மிகவும் சிரமம் என்ற போதும், விவசாயி தோற்றுப் போவதற்கும், சோர்ந்துப் போவதற்கும் காரணம், விவசாயின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது. எனவே, விவசாயியே தன் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் எவருமின்றி கொஞ்சம் சிரமம் எடுத்தால், விவசாயம் லாபம் தரும்.

2

நிலத்தை உழுது, விதை விதைத்து, நாற்று நட்டு, களை எடுத்து, உரம் போட்டு, தண்ணீர் பாய்ச்சி, வயலில் விளைவித்து, அறுவடை செய்தவுடன், விவசாயின் கடமை முடிந்து விட்டதாக எண்ணாமல், மேற்கொண்டு முயற்சி எடுத்து சந்தை படுத்தினால், விவசாயின் உழைப்புக்கேற்ற லாபமும், மன மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று சான்றளிக்கிறார் தமிழ்செல்வி.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழ்செல்வி, இன்று ஈரோடு மாவட்டத்தில் ‘காளான் பெண்மணி’ (mushroom lady) என்று பெயரெடுக்கும் அளவுக்கு, காளான் உற்பத்தி செய்து அதை சந்தைபடுத்தியதினால், இன்று தன்னுடைய நாள் வியாபாரம் சராசரி நாள் ஒன்றுக்கு ரூ.4000/-.

துவக்கத்தில் இருந்தே சிறிய அளவு காளான் பயிர் செய்து, உற்பத்தியை இடைத்தரகர்கள் மூலம் விற்காமல், தானே நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து விற்றதின் மூலம் தினமும் ரூ.400/- கிடைத்த நிலையில், தற்போது அதிக அளவில் உற்பத்தி செய்யும் அளவுக்கு லாபம் கிடைக்க கூடியதாக இருந்ததால், தினமும் பல ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார்.

இதுமட்டுமல்லாமல், சந்தை படுத்துதலில் கிடைத்த அனுபவத்தினால், செவ்வாழை, மற்றும் தேங்காய் வியாபாரமும் செய்கிறார். 2011 ல் காளான் பயிரிட ஆரம்பித்த தமிழ்செல்வி, தன் கணவரின் உதவியோடு, எவ்வித கூலி தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தாமல், முழு நேர தொழிலாக காளான் உற்பத்தி செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியான விவசாயியாக திகழ்கிறார்.

சரியான திட்டமிடல், மிகக்குறைந்த செலவில் பயிரிடுதல், அதிக உழைப்பு, அதற்கு மேல் சிரமம் எடுத்து தானே விற்பனை செய்தல் ஆகியவையே தமிழ்செல்வியின் வெற்றிக்கு இலக்கணமாக திகழ்கிறது.

“உழவுக்கும்,விவசாயத்திற்கும் வந்தனம் செய்வோம்”.

3

Leave A Reply

Your email address will not be published.