அனைவராலும் மதிக்கப்பட்டவர் அருட்தந்தை சேவியர் ஹெராட்

திருச்சியின் அடையாளங்கள் -48

0
Full Page

திருச்சிராப்பள்ளியில் கல்விபணியாற்றி வரும் தூயவளனார்கல்லூரியின் வரலாற்றில் அரிய சாதனைகள் செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர்அருட்தந்தை சேவியர்ஹெராட்.

1894ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர் யேசுசபையின் அங்கத்தினராக 1932ஆம் ஆண்டில் தூயவளனார் கல்லூரியில் தனது பணியை தொடர்ந்தார்.கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் துணைமுதல்வராகவும் அருட்தந்தை ஜெரோம் தலைடாவிற்கு பிறகு கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.


கிளைவ்ஸ் விடுதியின் காப்பாளராக பணியாற்றி மாணவர்களோடு ஒன்றிணைந்து அவர்களுக்கு நல்வழிகாட்டியவர். கல்லூரி மாணவர்களாலும் பெற்றோர்களாலும் நகரில் உள்ள பெருமக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

Half page

அருட்தந்தை ஹெராட் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள்ஆட்சிமன்றக் குழுவில் பணியாற்றியுள்ளார்.
உலகப்புகழ் வாய்ந்த துணைவேந்தர் டாக்டர்ஏ.லெட்சுமணசாமி முதலியாருக்கு உற்ற நண்பராகவும் பல்கலைகழக நடைமுறைகளைச் செம்மையாக நடத்திடவும் அவருக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் 6 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார்.

கண்டிப்புமிக்க முதல்வராகவும், கருணையுள்ள விடுதிகாப்பாளராகவும், நகரமக்களுக்கு நல்லநண்பராகவும் வாழ்ந்த அருட்தந்தை ஹெராட் அவர்கள் இந்தநகரிலேயே மறைந்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.