பெரியாரின் கொள்கையோடு வாழ்ந்த பெரம்பலூர் நல்லாசிரியர்-பெரியார் குடில் ஏ.எஸ்.முத்துசாமி

0
1 full

பெரம்பலூருக்கு அருகில் உள்ள அரூரில் (ஆலத்தூர் கேட்) பிறந்த ஏ.எஸ் முத்துசாமி இளமைக் காலம் தொட்டே தந்தை பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். நூற்றுக்கணக்கான சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இருவரையும் அழைத்துப் பல கூட்டங்கள் நடத்தி அப்பகுதியிலேயே சுயமரியாதைக் கொள்கைகள் பரவிட முன்னின்றவர்.

இவரது முதல் மகளைத் திருவாரூர் கே. தங்கராசு அவர்களின் மகள் கே.டி புகழேந்திக்கு 1986 இல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையில் சீர்த்திருந்த திருமணம் செய்து வைத்தார்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை அனாதைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் நோக்கத்துடன் பாடாலூரில் பெரியார் குடில் என்ற தொண்டு நிறுவனத்தை 1972 இல் தொடங்கினார். 25 மாணவர்களோடு துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது,

2 full

இக்குடியில் தந்தை பெரியாரின் கொள்கை கோட்டுபாட்டுகள் மாணவர்களுக்குப் பெரிதும் கற்பிக்கப்படுகின்றன.
பெரியார் சிந்தனை என்ற மாத இதழையும் இவர் தொடர்ந்து இக்குடிலின் மூலமாக நடத்தி வந்தார்.

இக்குடியின் வளர்ச்சிக்கு 1937 இல் தந்தை பெரியார் 100 ரூபாய் நன்கொடை அளித்துக் குடிலின் பணிகளைப் பாராட்டியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் நடிகவேள் எம்.ஆர். இராதா நாடகம் நடத்தி குடில் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்துள்ளார்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஏ.எஸ்.முத்துசாமி பெரியாரின் கொள்கைகளுக்காகத் தாம் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தாம் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே அயராது உழைத்து 16.2.1998 அன்று சாலை விபத்தொன்றில் மரணமடைந்தார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.