பச்சமலையை கைப்பற்றிய வெள்ளைகாரன்

0
1

ஜியோமெட்ரிடா குடும்பத்தைச்
சேர்ந்த அந்துப்பூச்சிகள்
35 ஆயிரம் வகைகள் உள்ளன.
இதில் 6 குடும்பத்தைச் சேர்ந்த 1,400இனங்கள் வட அமெரிக்காவில் மட்டுமே உள்ளன.

சுமார் 25ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழக்கூடிய இத்தகைய அந்துப்பூச்சி திருச்சிக்கு வந்தது எப்படி என்பது ஆச்சரியம் மட்டுமல்ல ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
அந்துப்பூச்சி தொடர்பாக ஆராய்ச்சிக் குறிப்புகள் எதுவும் பெரியதாக இல்லை. காரணம் அந்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, தவளை உள்ளிட்ட சில இனங்கள் புறக்கணிக்கப்பட்ட உயிரினங்களாகவே கருதப்படுகின்றன. சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை ஒப்பிடும்போது இவற்றுக்குத்தரும் முக்கியத்துவம் மிகக்குறைவு.

வண்ணத்துப்பூச்சின்னாலே நமக்கு ஞாபகம் வருவது, நாம் சிறுவயதில் தேன் பூச்சி என்று சொல்லி அதைப் பிடிக்க, அதனைத் துரத்தி கொண்டே ஓடியிருப்போம். பல வர்ணங்களில் அதன் இறகுகள் பூவை விட மென்மையாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து இருப்போம்.

2

நம் கைகளில் பிடித்த சில மணி துளிகளிலேயே அதன் வர்ணங்கள் நம்முடைய விரல்களில் ஒட்டிக் கொண்டு, அது மீண்டும் பறக்க முடியாமல் துடிப்பதை நாம் பார்த்தும், ரசித்தும் இருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும், இனமும், தற்போது இல்லை சிட்டுக்குருவிகள் எப்படி அழிந்துபோனதோ அதேபோன்று இந்த வண்ணத்துப் பூச்சிகளும் அழிந்துவிட்டது. இன்னும் மிச்சம் மீதி இருக்கும் காடுகளில் மட்டுமே வண்ணத்துப் பூச்சிகளை காண முடியும்.

பொதுவாகவே வண்ணத்துப் பூச்சிகள் பல வகைகளில் உள்ளது. ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப ஒவ்வொரு வகையும் அதற்கு ஏற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தான் அந்துப்பூச்சி என்று சொல்லகூடிய ஒன்றும் ஆகும். பார்ப்பதற்கு சிறிய அளவில் உள்ள அந்த வெள்ளைகாரன் பற்றியது தான் இந்த கட்டுரை.
அந்த பூச்சி பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் போராசிரியா் ஒருவரை சந்தித்து பேசினோம்.

திருச்சி ஜோசப் கல்லூரியில் சுற்றுச்சூழல் உதவிப் பேராசிரியராக இருந்த அசோக சக்கரவர்த்தி கூறுகையில்…


அப்பா எண்ணெய் வியாபாரி. அம்மா ஹவுஸ் ஓய்ப். சிறு வயதிலிருந்தே குருகுலக்கல்வி படிக்க வேண்டும் என்பது ஆசை. படிக்கும் போதே என் துறை சார்ந்த ஆர்வம் அதிகம். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தின செய்திகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தது என்றார்.

இந்தியாவில் முதன்முறையாக திருச்சியையடுத்த துறையூரில் கிழக்கு தொடர்ச்சி மலையான பச்சைமலையில் அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட தகவலை கேட்டு வியப்பில் கண்கள் விரிந்து….யார் அந்த பூச்சியை கண்டு பிடித்தார் என்பதை ஆராயும் போது,….

ராஜஸ்தான்,கல்கத்தா போன்ற பல ஊர்களைச் சுற்றியிருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுத்தது. எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகம் என்பதால் ஆராய்ச்சியிலும், கற்பிக்கும் பணியிலும் என் வாழ்க்கை ஆரம்பித்தது என்கிறார்.

“ஸ்னோயி ஜியோமீட்டர் மாத் அதாவது எகுனோபேப்டா நிவோசாரியா எனப்படும் வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது தான் இந்த அந்துப்பூச்சி. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படும் அந்துப்பூச்சியை இந்தியாவில், தமிழகத்தில் அதுவும் திருச்சியை அடுத்து துறையூர் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள ரிசர்வ் காடுகளில் முதன்முதலில் கடந்த 2015 டிசம்பர் மாதம் கண்டுபிடித்தேன்.

அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது வெள்ளை நிறத்திலான பொருள் இயக்கமின்றி அமர்ந்திருந்ததையும், அருகில் சென்று பார்த்தபோது இந்தியாவில் வேறெந்தப்பகுதியிலும் இதுவரை கண்டறியப்படாத அரியவகை அந்துப்பூச்சி அது என்பதையும் ஆய்வின்மூலம் கண்டறிந்தேன்.
சுமார் 25ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழக்கூடிய இத்தகைய அந்துப்பூச்சி திருச்சிக்கு வந்தது எப்படி என்பது ஆச்சரியம் மட்டுமல்ல ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

அந்துப்பூச்சி தொடர்பாக ஆராய்ச்சிக் குறிப்புகள் எதுவும் பெரியதாக இல்லை. காரணம் அந்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, தவளை உள்ளிட்ட சில இனங்கள் புறக்கணிக்கப்பட்ட உயிரினங்களாகவே கருதப்படுகின்றன. சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை ஒப்பிடும்போது இவற்றுக்குத்தரும் முக்கியத்துவம் மிகக்குறைவு.

இந்த வகை அந்துப்பூச்சிகள் சராசரியாக 21 மி.மீ. முதல் 3.3 மி.மீ. வரை இறக்கையைக் கொண்டது.

இவற்றின் வரவு காலநிலை, பருவநிலையைக் கண்டறிய உதவுகின்றன. ஒரு அந்துப்பூச்சி சராசரியாக 200 முட்டைகள் வரையிடும்.இவற்றில் 50முட்டைகள் லார்வாக்களாக வளர்ந்து அந்துப்பூச்சிகளாக மாறுகின்றன. இவை இரண்டுவகை தலைமுறைகளை கொண்டவை.
முன் இறக்கை மற்றும் பின் இறக்கைகளுடன் முழுவதும் வெண்மை நிறமாக காணப்படும்.

ஜியோமெட்ரிடா குடும்பத்தைச் சேர்ந்த அந்துப்பூச்சிகள் 35 ஆயிரம் வகைகள் உள்ளன. இதில் 6குடும்பத்தைச் சேர்ந்த 1,400இனங்கள் வட அமெரிக்காவில் மட்டுமே உள்ளன. இறக்கைகளை மடித்து வைத்திருப்பது, இறக்கைகளை விரித்திருப்பது ஆகியவற்றை வைத்து இவற்றை அடையாளம் காணமுடியும். இந்த ஆய்வுகள் குறித்து கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் கழக விஞ்ஞானிகள் சுரேஷ்குமார் ஷா, புல்கோனியான் மித்ரா ஆகியோர், இந்தியாவில் இந்தவகை அந்துப்பூச்சி இதுவரை கண்டறியப்படவில்லை என சான்றளித்துள்ளனர்.

இது என் ஆய்வுகளுக்கு மேலும் ஊக்கமளித்தது தொடர்ந்து என் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். கடந்த 2017-ல் மேலும் ஒரு வகையை கண்டறிந்துள்ளேன். பொதுவாக “லெபிடோப்டிரா” – என்ற வகையைச் சேர்ந்ததுதான் வண்ணத்துப்பூச்சியும், மோத் (Moth) என்ற அந்துப்பூச்சிகளும். இந்தவகை உயிரினங்களை Ignoring Species என்று சொல்வார்கள். நாம் சிங்கம், புலி, யானை இனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவு வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், மோத்துக்களுக்கும் சுற்றுச்சூழலில் முக்கியபங்கு உண்டு.
இந்தவகை உயிரினங்களை பாலினேட்டர்ஸ்(pollinators) அதாவது மகரந்த சேர்க்கையாளர்கள் என்று கூறுவர்.

நான் அடிப்படையில் வனஉயிரின ஆராய்ச்சியாளர் (Wild life Biologist) நான் முதன்முதலில் பறவைகளையே ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன்.
பின் வண்ணத்துப்பூச்சிகள், மற்றும் மோத், (Lizards)பல்லிகள் போன்ற உயிரினங்கள் மீது ஆர்வம் வந்து ஆராய்ச்சிகள் செய்துவருகிறேன். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள வனச்சூழ்நிலை மண்டலங்களான பச்சமலை, புளியஞ்சோலை, மற்றும் ஏரிகள் போன்ற சூழ்நிலை மண்டலங்களுக்கு சென்று அடிக்கடி ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

இந்த ஆண்டுக்கான ஆராய்ச்சியில் துறையூர் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில்மோத்துகளின் (Moth) எண்ணிக்கை சற்று அதிக அளவில் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு இனங்களை (species) moth திரும்ப பதிவு செய்ய முடிந்தது. ஒன்று யுரனிடே(Uraniidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த Asian Swallow Tail Moth இதன் அறிவியல் பெயர் (Micronia aculeata) மைக்ரோனியே அக்குலேட்ட என்று பெயர். (Monkey moth )குரங்கு மோத் என்ற இனமும் இரண்டாவது முறையாக காணமுடிந்தது.

குறிப்பாக Moth and butterflies காடுகள் மட்டுமல்லாமல் எல்லா சூழ்நிலை மண்டலங்களிலும் வாழும் ஓர் உயிரினமாகும். சென்ற 2016 டிசம்பரில் Asian Swallow Tail Moth பச்சைமலையில் முதன்முதலில் இந்த இனத்தை நான் கண்டறிந்தேன்.

2017ல் திருச்சியில் Asian Swallow Tail Moth டிசம்பரில் மீண்டும் இரண்டாவது முறை பதிவு செய்தேன். மோத்துக்கள் பொதுவாக எல்லா சூழ்நிலை மண்டலங்களிலும் காணப்படும் என்பது சந்தேகமில்லை. ஆனால் எப்படி இரைச்சலான சூழ்நிலையுள்ள திருச்சியில் என்பது வியப்புக்குரியது. இவை இந்தியா, சீனா, தைவான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் lepidoptera – குறிப்பாக மோத்துக்களை பற்றிய ஆராய்ச்சி மிகவும் குறைவு ஆராய்ச்சியாளர்களும் குறைவு.
Asian swallow tail moth-க்களில் துணை இனமும் இருக்கின்றன.

இந்த மோத்தின் வால்பகுதியில் ஒரு கரும்புள்ளி காணப்படும். இந்த மோத்துக்கள் டையுர்னல் அதாவது பகல்நேரப்பொழுதில் உலாவரும் ஓர் உயிரி. பொதுவாக Moth Nocturnal Species இரவில் உலாவரும்.

வண்ணத்துப்பூச்சிகள் பகல்நேரப் பொழுதில் அதிகம் காணப்படும்.
மோத் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றுச்சூழலில் மகரந்தச்சேர்க்கை செய்வதோடு பல உயிரினங்களின் உணவாகவும் பயன்படுகிறது. உணவுச்சங்கிலியில் பெரும் பங்கு வகிக்கிறது. உதாரணமாக நாம் எப்படி உருளைக்கிழங்கை சிப்ஸ்சாக மொறு மொறுவென்று சாப்பிடுகின்றோமோ அதேபோல்தான் பறவைகளுக்கு வண்ணத்துப்பூச்சிகளும் மோத்தும். Crispy-யாக உட்கொள்கின்றன.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கொசுக்கள் உட்பட சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்கின்றன மனிதனைத்தவிர என்கிறார். மேலும் இந்தியாவில் அந்துப்பூச்சியைக் கண்டுபிடித்ததன் மூலம் அரியவகை இனங்களை கண்டறியும் என் நோக்கம் நிறைவேறிவருகின்றது ஆய்வுகள் தொடரும் என்கிறார் வன உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராச்சியாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் அசோக சக்கரவர்த்தி.
-ரா.நிருபன்.

3

Leave A Reply

Your email address will not be published.