மத்தவங்களோட நெகட்டிவ்; எங்களோட பாஸிட்டிவ்

0

நாம கற்பனையில மிதக்கிற டிசைன்கள்ல யாராவது டிப் டாப்பா செய்து இதுதானே நீ எதிர்பார்த்ததுன்னு நம்ம கிட்டயே கையில நீட்டினா எப்படி இருக்கும்???

புரியலைன்னு புருவம் உயர்த்துரவங்களுக்கு இதோ ஒருத்தர அறிமுகம் செய்றோம். அவர் பெயர் பிரதீப். நாம அன்னாந்து பார்க்கிற பேனர்களாகட்டும் அல்லது நம்மள ஆச்சரியப்பட வைக்கிற கார்ப்பரேட் கிஃப்ட்ஸ் ஆகட்டும், எப்படியா இத்தினோன்டு பிட் நோட்டிஸ்ல இப்படிலாம் டிசைன் போட்டுருக்கானுங்கன்னு கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறாரு கிக்ஸ்டார்ட் பிரதீப்.

என் அப்பா அருண்குமார் ரயில்வேல இருந்தாங்க. அம்மா பத்மினி. நான் MBA படிச்சிட்டு,சென்னைல உள்ள ஒரு காலேஜ்ல டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். சின்ன வயசுல இருந்தே தனித்துவம் என்ற வார்த்த மேல ஈர்ப்பு இருந்தது.என் வீட்டில யாருக்கும் பிஸினஸ் பிடிக்காது,ஆனா எனக்கு பிஸினஸ் தான் பிடிக்கும்.நான் டிசைனிங் கோர்ஸ் முடிச்சிட்டு வீட்டில சிஸ்டம்ல ஏதாவது டிசைன்ஸ் பண்ணிட்டு இருப்பேன்.என் மனைவி பெயர் நஸ்ரின். நாங்க லவ்மேரேஜ், மணிரத்னம் படங்கள்ல வரதுபோல என் வாழ்க்கைலயும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கு.

‌சந்தா 1

2012ல எங்களுக்கு திருமணம் நடந்துச்சு.அதே வருஷம் தான் கிக்ஸ்டார்ட் என்ற இந்த ஆபிஸ்ச மனைவியோட சப்போர்ட்ல ஆரம்பிச்சேன்.ஸ்டார்ட் பண்ணப்போ ஒரே ஒரு டேபிள், சிஸ்டம், ஒரு உதவியாளர் வைச்சி தான் ஆரம்பிச்சேன். எல்லா வேலையையும் நானே பார்த்தேன். செய்கிற வேலைய திருப்தியா செய்து கொடுக்கனும்ன்னு நினைப்பேன்.

ஆரம்பத்தில ஆபிஸ நடத்தவே ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அப்படி நஷ்டத்தில இருக்கும்போதும் என் ஆபிஸ்ல தைரியமா வேலைப்பார்க்க வந்தவங்க தான் என் கூட வேலைப்பார்க்கிற பிரியா. நிறைய புதுபுது ஐடியா கொடுப்பாங்க.

கிராஃபிக் டிசைன்ஸ், வெஃப் டிசைன்ஸ், ஆபிஸ் அக்கெளன்ட்ஸ் மேனேஜ்மெண்ட் என எல்லா வேலையும் பார்ப்பாங்க.
திறமையானவங்க.

சந்தா 2


இப்போ இந்த கிக்ஸ்டார்ட் ஆபிஸ்ல என்னோட சேர்த்து 10 பேர் வேலை செய்றோம்.இப்போ 5வருஷம் நல்லபடியா முடிச்சு 6வது வருஷத்தில அடியெடுத்து வைச்சிருக்கோம்.என் மனைவி தான் இப்போ ஆபிஸ் அக்கெளன்ட்ஸ் வேலையும் வர தகவல்களை செக் பண்ணுரதுன்னு உதவியா இருக்காங்க.

கிக்ஸ்டார்ட்ட பொறுத்தவர லோகோ கிரியேசன்ஸ், பிஸினஸ் கார்ட், பிரோவ்ச்சர்ஸ் (Brochures), காபி மக் பிரிண்டிங், டிசர்ட் பிரிண்டிங், ஐடி கார்ட், கார்ப்பரேட் கிஃப்ட்ஸ், விளம்பர பலகைகள், பேனர்கள், LED போர்ட்ன்னு நிறைய டிசைன் வேலைகள் பார்த்து கொடுக்கிறோம்.அதுபோக அவுட்டோர் மீடியா, வெப் சொல்யூசன்ஸ், ஈவண்ட் பிளானிங், நியூஸ்பேப்பர் விளம்பரங்கள்ன்னு எல்லாவித வேலைகளும் செய்து கொடுக்கிறோம்.

உங்கள் வெற்றிக்கு காரணம் ?
நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்…அப்படி பண்ணேன் , இப்படி பண்ணேன்னுல்லாம் செல்ல எதுவும் இல்ல. எந்த ஒரு வேலையா இருந்தாலும் தேடிவந்த கஸ்டமர அவுங்க எதிர்பார்த்து வந்த கற்பனைக்கு மேல எங்களோட கிரியேட்டிவயும் சேர்த்து செய்ற வேலைய திருப்தியா செய்கிறது தான்.

ஒரு பிரியாணி சுவையா வரதுக்கு எதை காரணம் சொல்ல? அதுல போடுற அரிசியவா, இல்ல மசாலா,வெங்காயத்தயா இப்படி கேட்டா எதையும் தனியா சொல்லிட முடியாது.எல்லாம் சேர்ந்து பக்குவத்தோட ரெடி பண்ணும் போது தான் பக்கத்துவீட்டுகாரனுக்கும் பசி எடுக்கும்.
அதுபோல தான் டீம் வொர்க். என் டீம்ல இருக்குற ஒவ்வொருத்தரும் நல்ல திறமையானவங்க. இது இரண்டும் தான் முன்னேற்றத்துக்கு வழி… அதுதான் வெற்றி.அதுபோக நிறைய பேர்க்கிட்ட இருந்துவந்த நெகடிவ் பாயிண்ட்ஸ் தான்.

நம்ம ஆரம்பித்த ஒரு தொழில பத்தி நம்மள சுத்தியிருக்கும் சிலர் நம்மள மட்டம் தட்டியோ (அ) நெகடிவ் வார்த்தைகள் பேசும்போது அது எப்படி வெற்றிக்கு வழியாகும் ?
ஆமா, அதுவும் ஒரு வழிதான்.
இப்ப கூட என் வீட்டில என்ன ‘‘ஏன்டா இந்த வீண் வேலையலாம் – ஒரு வேலையாவே பார்த்துக்கிட்டு இருக்கன்னு திட்டுவாங்க’’.

என் மாதிரியே இருக்கிற கான்சப்ட் டிசைனர்ஸ்… ஒருத்தவங்க இன்னொருத்தவங்க மேல சொல்லுற குறைகள அவுங்கள பிஸினஸ்ல முன்னேறவிடாம தடுக்குறதா நினைச்சிக்கிட்டு குறை சொல்லுவாங்க.
ஆனா எனக்கு அதுவே உல்டாவா நடக்கும்… அந்த பிரதீப் கிக்ஸ்டார்ட் நல்லாவே டிசைன்ஸ் பண்ணமாட்டாங்களா? அது எப்படி! சரி, போய் ஒரு தடவ அவுங்கள்ட நம்ம வேலைய கொடுத்துதான் பார்ப்போமேன்னு என்ன தேடி கஸ்டமர்ஸ் வருவாங்க. கஸ்டமர் சொல்லபோற ‘‘சூப்பர்’’ என்ற வார்த்தைக்காக நாங்க வேலை செய்றோம். இப்போ எங்கள்ட குறைந்தபட்சம் 70 கஸ்டமர்ஸ் இருக்காங்க. இண்ட்ரஸ்ட் இருந்தா ஈசியா இந்த துறையில கால் பதிக்கலாம்.
– ரா.நிருபன்

Leave A Reply

Your email address will not be published.