நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது இதயராகம் – டாக்டர்.ஐ.எம்.அப்பாஸ்கான்

0
Business trichy

‘‘இது ரயின்போ FM 102.1-ல் இதயராகம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் ஐ.எம்.அப்பாஸ்கானுடன்…’’ என்ற குரலை நாம் வீட்டிலோ டீக்கடையிலோ அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போதோ கேட்டிருப்போம், இந்த பரிச்சயமான குரலை… அந்த குரலுக்கு சொந்தக்காரரான டாக்டர். ஐ.எம்.அப்பாஸ்கானுடன் நேர்காணல்…

உங்களை பற்றி?
என் அப்பா இப்ராகிம் அரசு ஊழியர். அம்மா மகபுத்ஸன் இல்லத்தரசி. இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்கா, எங்கள் வீட்டின் கடைக்குட்டி நான் தான். எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியும் நான் தான். ஜமால் முகமது கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஆல் இந்தியா ரேடியோவில் பகுதிநேர அறிவிப்பாளாராக 17 வருடமாக ‘வசந்த அழைப்பு’, ‘இதய ராகம்’ நிகழ்ச்சியை வழங்கிவருகிறேன். பல தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி பற்றி?
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை திருச்சி தேசியக்கல்லூரி பள்ளியில் படித்தேன். அப்பாவிடம் மிகபெரிய போராட்டத்தை நடத்திய பிறகுதான், என்னை கல்லூரி செல்ல அனுமதித்தார். பி.காம் முதல் பி.ஹச்டி வரை ஜமால் முகமது கல்லூரியில் தான் படித்தேன்.

Image

உங்களது ஆர்.ஜே பயணம் தொடங்கியது எப்படி?
தட்டச்சு பணிக்காக 2002ல் பகுதிநேரமாக வேலைக்குச் சேர்ந்தேன். காலை 8.30 முதல் 1.45 வரை கல்லூரியிலும் மதியம் 2 மணி முதல் 7 மணி வரை ரேடியோவிலும் வேலை முடித்துவிட்டு விட்டுக்கு வந்து என்னுடைய கல்விக்காக மீதி நேரத்தை செலவிடுவேன். விடுமுறை நாட்களில் சத்திரம் பஸ் ஸ்டான்டில் உள்ள கடைகளுக்குச் செல்வேன். அங்கு ஒரு கடையில் 2,000 நோட்டீஸை தெப்பக்குளத்தின் வாயிலில் நின்று நாள் முழுக்க தர வேண்டும். அப்படி கொடுத்தால் நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் தருவார்கள்.

இவ்வாறாக என்னுடைய நாட்கள் நகர்ந்தது. அப்போது தான் எனக்குத்தேன்றியது ‘நாம் ஏன் ஆர்.ஜேவாக முயற்சி செய்யக்கூடாது’ என்று, நான் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்தும் கூட பலமுறை முயற்சி செய்தும் நான் ஆர்.ஜேவாக தேர்வாகவில்லை.

Rashinee album

2003ஆம் ஆண்டு வாணி சான்றிதழ் வகுப்பிற்காக தேர்வாகி, பின்பு பகுதி நேர செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தேன். அந்தகாலகட்டத்தில் தான் நான் எவ்வாறு வார்த்தைகளை உச்சரிப்பது? நிகழ்ச்சிகளை எவ்வாறு வடிவமைத்து தொகுத்து வழங்குவது? எவ்வாறு ரேடியோவில் நளினமாக பேசுவது? என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். பிறகு பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தேன்.

உங்களுடைய முதல் சம்பளம்?
நான் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தபோது எனக்கு மாதம் 540 ரூபாய் சம்பளம், இப்போது எனது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 1,300 ரூபாய் சம்பளம். காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

உங்களுக்கு இந்த வேலை எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது?
என்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபவம். நான் மக்களிடம் நல்ல கருத்துக்களையும், விழிப்புணர்வையும் விதைக்கிறேன் எனும் போது தினமும் மனதில் புது வித மகிழ்ச்சி உண்டாகும். தினமும் நான் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து மிகவும் ஆர்வமாக செல்வேன். ஆயிரக்கணக்கான் மக்களின் சொந்தம் எனக்கு இருப்பது போல் ஓர் உணர்வு எனக்கு இருக்கும்,இதனால் எனக்கு எந்த ஒரு இடர்பாடும் இன்றி மன நிம்மதியோடு வேலைபார்க்கிறேன்.

ஆல் இந்தியா ரேடியோவில் பணிக்கு சேர நினைக்கும் மாணவர்களுக்கு நீங்கள் கூற நினைப்பது?
நேயர்களுக்கு மட்டும் தான் ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும், ஏனென்றால் ஆல் இந்தியா ரேடியோவில் மட்டும் தான் அறிவிப்பாளர்கள் தேவை என்ற செய்தி ஒளிபரப்பப்படும். யார் நேயர்களாக இருந்து தினமும் ரேடியோ கேட்கிறார்களோ அவர்களால் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும். நல்ல தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் கொண்டவர்கள் நேர்காணலில் கலந்து கொள்வதன் மூலமாக எளிதாக அறிவிப்பாளராக பணிபுரிய முடியும்.

நீங்கள் ஆசிரியப்பணியை தேர்வு செய்த காரணம்? மாணவர்களுக்கும் உங்களுக்குமான நெருக்கம் எப்படிப்பட்டது?
‘ஆசிரியப்பணி அறப்பணி, அதற்கு முழுதாய் உன்னை அர்ப்பணி’ என்பார்கள், அதைப்போல தான் நான் என்னுடைய வாழ்வை ஆசிரியப்பணியில் கழிக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக ஆசிரியப்பணி ஆற்றி வருகிறேன். என்னிடம் படித்த மாணவர்கள் பலர் தற்போது அரசு அதிகாரிகளாகவும், சமூகம் சார்ந்த வேலையிலும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே என்னை வீடு தேடி வந்து பார்த்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசுவார்கள்.

இரண்டு பணிகளில் எதில் உங்களது விருப்பம் அதிகம்?
மாணவர்களிடம் ஒற்றுமையை வளர்ப்பதும் நல்ல கருத்துக்களை அவர்களிடம் விதைப்பதும் தான் எனது மிகப்பெரிய குறிக்கோள். அதைவிட மிகப்பெரிய மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவுமில்லை. ஆர்.ஜே பணியை விட அதிகமாக நான் ஆசிரியப்பணியை தான் விரும்புகிறேன்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.