சட்ட வல்லுனர், அரசியல் வித்தகர் – புதுக்கோட்டை திவான் பி.கலிபுல்லா சாஹிப்

0
1 full

சுதந்திர வேள்வியில் பங்குகொண்டு நாட்டுக்காகவும் மூஸ்லீம் மக்களுக்காகவும் தமது உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திய வீரராகவும் அரசியல் வித்தகராகவும் விளங்கியவர் கான்பகதூர் கலிபுல்லா சாஹிப் அவர்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகரில் பெரும் வணிகராக விளங்கிய ஜனாப் பிச்சை முகம்மது ராவுத்தர் அவர்களின் மகனாக 1888 இல் பிறந்தவர் கலிபுல்லா அவர்கள் இளமையிலேயே கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய இவரது ஆற்றலைக் கண்ட பெற்றோர்கள் 1913 இல் இவரை மேல் படிப்பிற்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

கான்பகதூர் கலிபுல்லா சாஹிப் வக்கீல் பட்டம் பெற்று திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் தனக்கே உரிய ஜரிகைத் தலைப்பாகையுடன் வழக்காடும் ஆற்றலைக் கண்டு வெள்ளைக்கார நீதிபதிகளும் பொதுமக்களும் பெரிதும் வியந்து பேசியுள்ளனர்.

2 full

சட்டத்துறையில் வல்லுநகராக மட்டுமில்லாது அரசியல் உலகிலும் சிறந்த வித்தகரகவும் விளங்கினார்.

1921 இல் சுதந்திரப் போரின் ஒரு அங்கமாகத் தோன்றிய கிலாபத் இயக்கத்தின் மாநாட்டினைத் திருச்சிராப்பள்ளியில் நடத்தியதில் கலிபுல்லா சாகிப் முக்கிய பங்கு வகித்தார். தொடர்ந்து இவ்வியக்கம் திருச்சிராப்பள்ளியில் வளரத் தீவிரமாகவும் உழைத்தார். கான்பகதூர் கலிபுல்லா சாஹிப் நகரமன்றத் தலைவராகவும் தாலுகாபோர்டு, ஜில்லா போர்டு அங்கத்தினராகவும் திறம்படப் பணியாற்றி நகர வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்துள்ளார்.

1938 இல் கட்டாய இந்தித் திணிப்பு தமிழகத்தில் நடந்தபோது திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தி எதிர்ப்புப் பேரணியை வழியனுப்பி வைத்து இவர் வீர உரை ஆற்றி யுள்ளார்.

1938 இல் வழக்கறிஞர் தொழிலையும், அரசியல் வாழ்வையும் ஒதுக்கிவிட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக பொறுபேற்று புதுக்கோட்டையின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பெருந்துணையாக இருந்து அப்பகுதி மக்களின் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் பெற்றவரானார்.

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசியல் இணைக்கப்பட்டதால் கலிபுல்லா சாகிப் திவான் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெற்றார். சுதந்திரப் போரிலும் அரசியலிலும் மொழிப் போரிலும் பெரும் பங்காற்றிய காண்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலமானார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.