‘இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன்’

0
1

விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. முறையான பயிற்சியும் திட்டமிடலும் விடாமுயற்சியும் அதிகப்படியான ஊக்குவிப்புமே ஒலிம்பிக் கனவை நனவாக்க இயலும். ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்று ‘தங்க மங்கை’ என்று பெயரெடுத்த PT உஷா, ஷைனி வில்ஷன் என்று பல பெண் வீராங்கனைகள் ஆசிய, உலக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்…

‘இந்தவரிசையில் நானும் ஒரு நாள் இந்தியாவிற்காக ஓடி பதக்கம் வெல்ல வேண்டும்‘ என்ற தீராத தாகத்தோடு, பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த திருச்சி நேஷனல் கல்லூரி மாணவி சந்திரலேகாவை சந்தித்தபோது…

உங்களை பற்றி?
எனக்கு சொந்த ஊரு கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்னயும் சேர்த்து எங்க வீட்ல 4 பொண்ணுங்க. விவசாயம் தான் பண்ணிட்டு இருக்கோம்.இப்போ நான் திருச்சி நேசனல் காலேஜ்ல மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படிச்சிட்டு இருக்கேன். நான் 6 ஆம் வகுப்பில இருந்து ஒட ஆரம்மிச்சேன் என்னோட ஸ்கூல் PT மிஸ்தான் நீ நல்லா ஓடுறனு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க.

இந்த ஆர்வமும் துடிப்பும் எங்க இருந்து வந்துச்சு?
முதல்ல நல்லா படிக்கனும் மார்க் வாங்கனும்னுதான் என்னோட ஆசை. ஆர்வம் இல்லாம தான் முதல்ல நான் ஓட ஆரம்பிச்சேன் அப்பறம் அப்பா கொடுத்த தைரியத்தாலயும் ஊக்கத்தாலும் தான் எனக்கு ரன்னிங்க்-ல ஆர்வமே வந்துச்சு. அப்பாவுக்கு ஸ்போர்ட்ஸ்ல எதாவது பண்ணனும்னு ஆச, ஆனா அவரால சாதிக்க முடியாதத நான் சாதிக்கனும்னு அவரோட ஆசை, கனவு எல்லாமே.

யார் உங்களுடைய ரோல் மாடல்?
நான் நல்லா ஓடுறத பாத்து தமிழ்நாடு அரசு என்னை தேர்ந்தெடுத்து திருவண்ணாமலை விளையாட்டு விடுதிக்கு என்னை அனுப்பிவச்சாங்க
9 ஆம் வகுப்பில இருந்து 12ஆம் வகுப்பு வரை ஶ்ரீ வி.டி.எஸ் ஜேயின் பள்ளியில் படிச்சேன். அங்க அர்ச்சனா-ன்னு ஒரு அக்காவை பாத்து, எனக்கு இவங்கள மாதிரி வரனும்னு ரொம்ப ஆசைபட்டேன். அதுக்கு அப்பறம் பி.டி.உஷான்னு காலங்கள் மாற மாற என்னுடைய ரோல் மாடல்களும் மாறிட்டு வராங்க இப்ப வரைக்கும்…

2

உங்களுடைய பயிற்சியாளர் பற்றி ?
திருவண்ணாமலையில் நான் படிச்சட்டு இருக்கப்ப என்னை உருவாக்கியவர் விநாயகமூர்த்தி சார் தான். அதுக்கப்பறம் திருச்சியில சுகந்தி அன்னாவி மேடம் கிட்ட மாறினேன். அவங்க தான் என்னைய நேசனல் காலேஜ்ல சேத்துவிட்டாங்க இப்போ எனக்கு எல்லா விதத்திலேயும் நேசனல் காலேஜ் உதவியா இருக்குது. எங்களோட உடற்கல்வி இயக்குனர் பிரசன்னா பாலாஜி சார் என்னைய எப்போதுமே ஊக்க படுத்திட்டே இருப்பாரு .என்னுடைய பயிற்சியாளர்களுக்குத்தான் எல்லா வெற்றியுமே சேரும் .

என்னதான் பெண்ணுங்க சுதந்திரமா இருக்காங்கனு சொன்னாலும் இன்னமும் பெண்களை
ஒரு வட்டத்துக்குள்ள அடைக்கிறாங்க
அத எப்படி நீங்க எதிர்கொள்றீங்க ?
ஆமா, இப்போ வரை என் சொந்தகாரங்கலாம் பொண்ணுக்கு எதுக்கு விளையாட்டெல்லாம்-ன்னு திட்டுவாங்க. ஆனா என் அப்பா யார் சொல்வதையும் ஏத்துக்காம உனக்கு என்ன தோனுதோ அத செய்னு சொல்லி எனக்கு முழு ஒத்துழைப்பு தந்துட்டு இருக்காரு.

நீங்க வாங்கின முதல் பதக்கம் மற்றும்
உயரிய பதக்கம் பற்றி? உங்களுடைய
ஓட்டத்தின் நோக்கம் என்ன?
நான் 6வது படிக்கறப்போ கடலூர்ல நடந்த மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில கலந்துகிட்டப்போ நிறைய பேரு வந்திருந்தங்க. எனக்கு மனசுக்குள்ள ரொம்ப பயமா இருந்துச்சு, நாம நல்லா ஓடிருவமா? பதக்கம் வாங்கிடுவமான்னு ஆன நான் அந்த மீட்ல தங்க பதக்கம் வங்கினேன். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்துச்சு. இப்போ சமீபத்துல 2017 நவம்பர் மாதம் சீனியர் ஓபன் நேசனல் மீட் நடந்தது அதுல ஒலிம்பிக்கில கலந்துக்கிட்ட எல்லாருமே வந்தாங்க. அதுல நான் வெள்ளி பதக்கம் வாங்கினேன், அது தான் என்னுடைய உயரிய பதக்கம். இந்த போட்டிக்கு அப்பறம் எனக்கு பெரிய நம்பிக்கை வந்துருக்கு. கண்டிப்பா என்னால ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு ஒரு பதக்கம் வாங்கி தர முடியும்ன்னு நம்புறேன். அதை நோக்கிய பயணத்தில தான் இப்போ ஓடிட்டு இருக்கேன்.

அதற்கு பிறகு நீங்கள் இந்த சமூகத்திற்கு செய்ய நினைப்பது?
நிறைய மாணவர்கள் விளையாட்டுத்துறையில ஆர்வமும் திறமையும் இருந்தும் பணம் இல்லாமயும் நல்ல வழிகாட்டுதல் இல்லாமயும் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய செய்யனும்.
200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இதுவரை பல தங்க பதக்கங்களையும் வெள்ளி பதக்கங்களையும் வென்று, தன் வாழ்வில் புது வரலாறை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் திருச்சி தேசியக்கல்லூரி மாணவி சந்திரலேகாவிற்கு “ntrichy.com”மின் வாழ்த்துக்கள்.

-சுபா ராஜேந்திரன்

3

Leave A Reply

Your email address will not be published.