சமூக விடுதலைக்காக போராடிய தீரர் சத்தியமூர்த்தி

திருச்சியின் அடையாளங்கள்

0
1 full

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்…

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் ஒருவரான சத்தியமூர்த்தி புதுக்கோட்டையில் பிறந்தவர். சுந்தர சாஸ்திரி சுப்புலட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிறந்தார். கீரனூரில் பள்ளிப்படிப்பும் முடித்தார். மாணவப் பருவத்திலே விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு தேசிய இயக்க நடவடிக்கையில் கலந்துக் கொண்டு போராடினார். வழக்கறிஞர் தொழிலைச் செய்து வந்த போதும் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

இங்கிலாந்து நாடாளுமன்றக் குழுவின் முன் விடுதலைக் கருத்துக்களை எடுத்துக்கூற, பண்டித மதன் மோகன் மாளவியா தலமையில் சென்ற தூதுக்குழுவுக்குச் சத்தியமூர்த்தி செயலாளராக சென்றார். மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக்கொண்டு 1930ஆம் ஆண்டு தடையை மீறி தேசிய கொடியை ஏற்றியதற்காக 6 மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன்பிறகு 1931-32 இல் அந்நியத் துணிக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்தி அதில் கலந்துக்கொண்டு 8 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

2 full


1934 ஆம் ஆண்டு டில்லி மத்திய சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இம்மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராகவும் இருந்தார். 1940 வரை இம்மன்றத்தில் இவர் ஆற்றிய உரைகள் பிரபலமானவை. 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். ராஜாஜி அமைச்சரவை அமைக்கக் கடுமையாக உழைத்தவர் சத்தியமூர்த்தி. 1939 ஆம் ஆண்டில் சென்னை நகர மேயராகப் பணியாற்றினார்.

அப்போது சென்னை நகரை அழகுபடுத்தும் பணியையும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் பணியினையும் மேற்கொண்டார். இவரது பணியினைப் போற்றும் வகையில் பூண்டி நீர்தேக்கத்திற்குச் சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரப் போரட்டத்தோடு சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரப் போரட்டத்தோடு நடத்தினார். சமூக விடுதலைப் போராட்டங்களையும் சத்தியமூர்த்தி நடத்தினார். 1937 இல் ஆலயப்பிரவேசத்தை சட்டமாக்கக் காரணமாக இருந்தார்.

தீரர் சத்தியமூர்த்தி சிறந்த நடிகராகவும் விளங்கினார். சென்னையில் பிரபலமான சுகுணவிலாஸ் நாடக சபா வில் இணைந்து நடித்தார். 1929 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி யைத் துவக்கக் காரணமாக இருந்தவர்களின் முக்கியமானவர் தீரர் சத்தியமூர்த்தி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் புதுக்கோட்டை மக்களுக்கும் சுயராஜ்ய உரிமை வேண்டும் என்றார். இதனால் இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் சட்டசபை ஏற்படுத்தப்பட்டது.

தனிநபர் சத்தியாகிரகப் போரட்டத்திலும், வெள்ளையனே இயக்கத்திலும் கலந்து கொண்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனால் உடல்நலம் குன்றிய நிலையிலும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு உடல்நிலை மோசமானதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலன் இல்லாமல் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி காலமானார்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.