திறமைக்கான வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்

0
full

நாம் நடந்து போற ரோடுகள்ல ஏதாவது ஓவியங்கள பார்த்தா அதிகபட்சம் நின்னு 2 செகண்ட் பார்த்துட்டு கையில அல்லது பையில இருக்கிற சில்லறைய தடவி தடவி எடுத்து ஓவியத்துமேல போட்டுட்டு போவோம்…அப்படி ஓவியங்கள் வரையிறவங்கள தெரிஞ்சுக்கலாமா என்ற ஆர்வத்தில தேடல தொடங்கினோம்…

குமார்…யாருப்பா குமாரு என்ற கேள்வி குரல் கேட்டுக்கிட்டே இருக்க, க்ளுவ மட்டும் வச்சு விடைய தேட ஆரம்பிச்சோம்.

30வருஷத்துக்கு முன்னாடி வேலை தேடி சென்னைல இருந்து திருச்சி வந்தாரு. எல்லாரும் வேலைதேடி சென்னை தான் போவோம் ஆனா சென்னைல வேலை இல்லாம திருச்சி வரது அப்போ புதுசுதான்.
குமாருக்கு நல்லா தைக்ககூட தெரியும். தன்னோட ஒரே மகளுக்கு எப்போவாவது டிரஸ் தைச்சு கொடுப்பார்.

poster

வாரம் முழுக்க இங்கே தான் இருப்பாரு,பணம் கிடைக்கிறப்போலாம் கோயம்புத்தூர்க்கு கிழம்பிடுவாரு.இன்னம் கொஞ்சம் நேரம் காத்திருந்தா அவர பார்க்கலாம் என்ற அக்கம்பக்கத்தினர் பேச்சைக்கேட்டு குமார பார்க்க காத்திருந்தோம்.

திருச்சில இருக்கிற புகழ்பெற்ற சர்ச்தான் ‘‘தூய லூர்து அன்னை ஆலயம்’’ இதன் முன்னாடி அடிக்கடி பல அழகு ஓவியங்கள நாம பார்க்கமுடியும். பலரோட பாராட்டுக்களையும், சூப்பர் என்று சொல்லிச்செல்லுபவர்களின் செல்ஃபி புகைப்படங்களையும் பெற்றது அந்த ஓவியங்கள். அத வரைகிறவர்தான் ‘‘குமார்’’.

59 வயதான குமாரை பார்த்தவுடன் நாம் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மாறின. மெல்ல பேச ஆரம்பித்ததும், நீங்க தேடிவந்த குமார் நான் தான். சொந்தஊர் சென்னை. எனக்கு தம்பி, தங்கைகள் இருக்காங்க.
தையல் தான் என் குடும்பத்தொழில் நானும் நல்லா தைப்பேன். நான் 2-ம் வகுப்பு படிக்கும்போது ஒருவித வண்டு கடியால எனக்கு இந்தநிலைமை ஏற்பட்டுச்சு. அதுக்கப்புறம் நான் ஸ்கூல் போல, பல மருத்துவம் பாத்தேன் ஆனா சரியாகல. வளர வளர வீட்டுக்கு பாரமா இருக்ககூடாதுன்னு வீட்டவிட்டு 30 வருஷத்துக்கு முன்னாடியே திருச்சி வந்துட்டேன்.

half 2

எனக்கு திருமணம் ஆகி ஒரு பொண்ணு இருக்கு என் மனைவி தவறிட்டாங்க. ஆனாலும் இப்பவும் சென்னை போய்ட்டுதான் வருவேன், என் மகள பார்க்க.

என் மகளுக்கு நான் இங்கு இப்படி ரோட்டில் வரைந்து தர்மம் வாங்கும் நிலைமை தெரியாது. அவள பொருத்தவர அப்பா சம்பாதிக்கிறார் அவ்வளவுதான். நான் திருச்சி வந்த புதுசுல பல இடங்கள்ல வேலைத் தேடினேன். நான் ஒரு தொழுநோயாளி என்பதனால எனக்கு வேலை கிடைக்கல.

அப்போ ஓவியம் வரையிற ஒருத்தர சந்திச்சேன். அவர்கிட்ட என்னோட வரையும் ஆசையில கத்துதரீங்கலான்னு கேட்டேன், அதுக்கு அவர் அதெல்லாம் சின்ன வயசுலேயிருந்து கத்துக்கிட்டாதான் வரும், இப்போ கத்துக்கமுடியாதுன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் நானே முயற்சி பண்ணி நிறைய படங்கள வரைஞ்சு பார்த்து கத்துக்கிட்டேன். தேவாலயத்தோட வாசல்ல நான் படங்கள் வரைவேன். நிறைய பேர் பார்த்துட்டு பாராட்டிட்டு போட்டோ எடுத்துப்பாங்க. பத்திரிகைக்காரங்களும் போட்டோ எடுத்துட்டு என்ன பத்தி விசாரிச்சிட்டுதான் போறாங்க.

என்னப்பத்தி விவரம் தெரிஞ்சவங்க, ஏதாவது விழா நடந்தா கோலங்களுக்கு பதிலா புராணக்காட்சிகள வரைய கூப்புடுவாங்க.நானும் போய் என்னால முடிஞ்ச வரை தத்ரூபமா வரைஞ்சு கொடுத்துட்டு வருவேன். அதுல எனக்கு 250 ரூபாய் கிடைக்கும். ஒரு மாசத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல சம்பாதிச்சு அதுலேயே சாப்பிட்டுப்பேன். என் மகளையும் பார்த்துக்கிறேன்.

எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவள் தான். அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கைய அமைச்சுக் கொடுத்துட்டாபோதும். ஆண்டவனோட துணையில தேவாலயத்தோட அருகிலேயே இருக்கேன். என்னோட திறமையை பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைச்சா நல்லாயிருக்கும்.
திருச்சி ஜோசப் கல்லூரி அருகில குமார் வரைகிற ஓவியங்களுக்கு எப்பவுமே தனிமவுசுதான்.

half 1

Leave A Reply

Your email address will not be published.