இளமையில் பெரியார் தொண்டர்… முதுமையில் ஆன்மீகச் சொற்பொழிவாளர்…கே.எம்.பாலசுப்பிரமணியம்

0

சுயமரியாதைக் கொள்கையையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழகத்திலுள்ள ஊர்கள் தோறும் முழங்கிய திருவாசக மணி கே.எம்.பாலசுப்பிரமணியம் திருச்சியின் அடையாளம்.

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

தந்தை பெரியாரின் தொண்டராகத் தனது பொது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி தனது முதுமைப் பருவத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாளராக விளங்கிய
கே.எம்.பாலசுப்பிரமணியம் கரூரில் பிறந்தவர். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தவர்.

food


1930-40 ஆம் ஆண்டுகளில் தந்தை பெரியாருடன் இணைந்து நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகங்களில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். அக்காலக்கட்டங்களில் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழகத்திலுள்ள ஊர்கள் தோறும் சென்று மேடைகளில் முழங்கியவர்களில் கி.ஆ.பெ.விசுவநாதம் கே.எம்.பாலசுப்பிரமணியம், அறிஞர் அண்ணா ஆகிய மூவருமே முன்னோடிகள் ஆவார்கள்.

மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகச் சில காலம் இருந்துள்ளார். அரசியல் சமூகச் சீர்த்திருத்த தொண்டில் முதன்மையான ஈடுபாடு கொண்டிருந்த இவர் பின்னர் இலக்கியம் ஆன்மீகத்துறையில் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமை பெற்றிருந்ததால் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று இலக்கியம், திருவாசகம் திருக்குறள், சைவசித்தாந்தம், தமிழ், தமிழர்நாகரீகம், கலை, பண்பாடு போன்ற துறைகளில் சொற்பொழிவுகளாற்றினார்.

திருக்குறள், திருவாசகம் ஆகிய இரண்டு நூல்களையும் மிகச் சிறப்பான முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது அரசியல் சிந்தனை, மொழிப்புலமையை உணர்ந்த மத்திய அரசு தென்மண்டல ஐந்தாண்டுத் திட்டக் கண்காணிப்பாளராக இவரை நியமித்திருந்தது.

இவர் எழுதிய 30க்கும் மேற்பட்ட நூல்களில் சில: தென்னிந்திய மேதைகள், சைவசித்தாந்தம், ஆங்கிலத்தில் மாணிக்கவாசகர் மாலை, ஈங்கோய் மலை அந்தாதி, கும்மிப் பாடல்கள், தமிழிசைப் பாடல்கள், திருவாசகத்தைக் கேட்போர் உள்ளம் உருகும் வண்ணம் உரையாற்றுவதில் வல்லவராகையால் திருவாசகமணி, திருக்குறள்மணி, நாவலர் மணி போன்ற பல பட்டங்களால் இவர் சிறப்பிக்கப்பட்டார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.