ரோடு தான் எங்க வீடு…

0
Business trichy

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் – எப்படியோ அதுபோல தான் திருச்சியும்!

வாழ்க்கைல நமக்குன்னு ஒரு அட்ரஸ் வேணும்னு நினைக்கிறோம் ஆனா, அதுக்கூட வேணான்னு வாழுற மக்கள் நம்மள சுத்தியிருக்காங்கனு பலருக்கும் தெரியுறது இல்ல. பெற்றோர்கள ஒதுக்கி தள்ளிட்டு வீட்ட விட்டு வெளியவர இளைஞர்கள்,பெற்றபிள்ளைகளால கைவிடப்பட்ட பெற்றோர்கள், குடும்பத்தால வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள்,வேற வேற ஊர்கள்ல இருந்து பிழைப்புகாகவோ இல்ல, குடும்பத்த இழந்தோ வந்தவங்களாம் என்ன ஆகுராங்கனு ஒரு நிமிசம் நினைச்சுப்பார்த்தா மனசு வலிக்கும்.

திருச்சியோட முக்கிய பகுதிகள் -ன்னு சொல்லப்படுற தினமும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதிகளா இருக்கிற திருச்சி ரயில்வே ஜங்ஷன், அமெரிக்கன் மருத்துவமனை, உறையூர், ஸ்ரீரங்கம்,மாம்பழச்சாலை, பாலக்கரை,மேலப்புத்தூர் – இந்த சுத்துவட்டாரத்துக்குள்ள மட்டும் குறைஞ்சது 500 பேர் கிட்ட இருக்காங்க.இவுங்க எல்லாரும் வெட்டியா இல்ல,பிச்சை எடுக்கல -தனக்குன்னு ஒரு வேலைய கைல வைச்சிருக்காங்க.சில பேர் மட்டுமே பிச்சை எடுக்கிறாங்க.

loan point

குப்பைகள பொறுக்குறாங்க, சின்ன சின்ன கடைகள்,காய்கறி மார்கெட் மாதிரியான இடங்கள்ல தினக்கூலிகளாக வேலைக்கு போறாங்க.
இப்ப நம்ம சிட்டிக்குள்ள தண்ணீர் பாக்கெட்டுகள், பயன்படுத்திட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள்ன்னு கீழ கிடக்குற பிளாஸ்டிக் குப்பைகள இவங்க எடுத்து எடைக்கு போடுறதுன்னால ஊரும் சுத்தமாகுது இவங்க கைல காசும் கிடைக்கிறது.

nammalvar


இவங்க அன்றாட தேவைகளுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன பண்ணுவாங்க உடுத்தகூடிய உடைக்கு எங்க போவாங்கன்ற கேள்விய நாம் இவர்களிடம் கேட்டோம்.

ஒரு நாள் இரவு கணக்கெடுப்புக்குள்ள வந்தவங்களே 420 பேர்னா (புதிய கணக்கெடுப்பு 2016-17) அடுத்த அடுத்த நாட்கள் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிச்சுக்கிட்டே தான் போகுமே தவிர குறையாது.

எனக்கு தெரிஞ்சு இங்க எங்ககூட ராத்திரி தூங்குறவுங்க எல்லாருமே ஒரு 45வயசுள்ளவங்களாத் தான் இருக்கோம்,இதுல என்ன கொடுமன்னா இரண்டு பொண்டாட்டி கட்டினவனும் இங்கதான் இருக்கான்.

இந்த இடத்துல தூங்கிட்டு காலைல ஸ்ரீரங்கம் மலைக்கோட்டை- மாதிரி கோவில்கள்ல போடுற அன்னதானத்த சாப்பிட்டுபோம், கிடைக்கிற வேலைய பார்த்துக்குவோம். அப்புறம் தர்கா,சர்சகள்ல கொடுக்குற சாப்பாட வாங்கிப்போம். இது தான் எங்க வயித்த கழுவ எங்களுக்கு இருக்கிற ஒரே வழி.

மத்தப்படி போட்டுக்க காவேரில தர்பணம் பண்றவங்க ஆத்தோட விடுற துணிகள எடுத்துக்குறோம் ” என்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து மற்றொருவர் “இப்ப காவிரில மழை பெய்ஞ்சு தண்ணீர் இருக்கு ஆனா,காவேரி ஆத்துல தண்ணீர் சுத்தமா இல்லன்னா நாங்க குளிக்க குடிக்க –ன்னு எல்லாமே கஷ்டமா போயிரும்.சாக்கட தண்ணீர் ஆத்துல வரப்போலாம் வேற வழியில்லாம அதுல குளிச்சிக்க வேண்டிருக்கு.

web designer

அப்போலாம் குளிக்ககூட பிடிக்கிறது இல்ல.முகத்த மட்டுமே கழிவிப்போம். ஆனால் எங்களை பார்த்தா அருவருப்பு படுவாங்க .இருந்தாலும் நாங்க அதலாம் பார்க்குறதில்ல.

காலைல இருந்து ராத்திரிவர அங்கயிங்கன்னு வேலை பார்த்துட்டு ராத்திரி 9 மணிக்கு மேல தான் இங்க வந்து படுக்குறோம்.அடிக்கடி போலீஸ் தொல்லை வேற இருக்கும்.இங்க படுக்க கூடாது போங்க ! போங்கன்னு விரட்டி விடுவாங்க.

நாங்க வேற எங்கயாவது போய் படுத்துப்போம்.நா ரொம்ப வருசமா ரோட்ல இல்ல பாலத்துக்கு கீழ படுத்து தூங்கிக்கிட்டு இருக்கேன்.தினமும் புது ஆளுங்ககூட வந்து ரோட்டோரத்துல தூங்குறாங்க.வரவங்க திண்டுக்கல்,கேரளா,வடநாட்டு பசங்களகூட அடிக்கடி இங்க தூங்குரத பார்த்திருக்கேன்.வயசுல சின்ன பசங்கள கூட சில சமயம் பார்க்கிறதுண்டு,விதி யாரத்தான் விட்டுச்சு ! என்றார் கண்ணீருடன் ஒரு முதியவர்.

புதிதாக அரசு தரப்பில் ஹோலி கிராஸ் கல்லூரியின் அருகில் கட்டிடம் கட்டி கொடுத்திருக்காங்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?
புதுகட்டடம் கட்டி 7மாசம் ஆகுது எங்களுக்கு அது எப்படி என்னன்னு வெவரமெல்லாம் தெரில,சிலர் வரலாம் தங்கலாம்.சாப்பாடு,படுக்குற வசதி எல்லாம் இருக்குன்னு சொல்லுறாங்க .ஆனா பெருசா ஒன்னும் தோணல.ரோட்டோரம் தங்குறப்ப யாரும் என்னைய கேள்விகேட்க முடியாது. கஷ்டத்துல இருந்தாலும் நிம்மதியா தூங்குவோம்.

எல்லார்க்கும் இடம் பத்துமான்னு தெரியில,அங்க போலீஸ் தொல்லயெல்லாம் கெடையாது…ஆனா எங்கள ஏதாச்சும் சொல்லி தொறத்திவிட்டா நாங்க திரும்ப இங்க தான் வரணும்.அதனால நாங்க மொதல்ல அங்கெல்லாம் போகல. .ஆனா அப்புறம் 2, 3 மாசம் கழிச்சுத்தான் அந்த ஹோம் நல்லா இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டோம்” என்கிறார்கள் ரோட்டோர வாசிகள்.

ஹோமின் தற்போதைய( 2018 ) நிலைமை குறித்து அறிய நாம் ஹோமிற்கே சென்றோம். நிலைமை குறித்து மேனேஜர் ஜெகநாதன் கூறியதாவது,,,
ஆரம்பிக்கும் போது தொடர்ந்து சில பிரச்சனைகள் வந்தது.ரோட்டில் உறங்குவது ஒரு சுதந்திரம் என நினைத்துக்கொள்ளும் அப்படிப்பட்டவர்களின் மனநிலையை மாற்றி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தே வரவழைப்போம். ஏதாவது ஒரு அடையாளத்தை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.

ஹோமில் ஆண்,பெண் என இருபாலரும் தங்குவதால் குடி,போதை பழக்கம் கொண்ட மாற்றவே முடியாதவர்களை இங்கு தங்க வைப்பதில்லை.எங்களால் இயன்றவரை மருத்துவ உதவியும் செய்கிறோம்.ஹோம் பராமரிப்பு, கழிப்பறை வசதி,குடிக்க நீர் வசதி, தங்கியிருக்கும் அனைவருக்கும் சமையல் என அனைத்தையும் கவனிக்க அரசு சார்பில் இங்கு ஆட்கள் உண்டு. தற்போது எங்கள் முயற்சியால் 70க்கும் மேற்பட்டோரை இங்கு இணைத்துள்ளோம். இதில் பாதி பேர் வெளியில் வேலைக்கு சென்று திரும்புபவர்கள். சிலர் இங்கே முழுநேரமும் இருப்பவர்கள்.

இது குறித்த மேலும் கூடுதல் தகவல்களை நமக்களித்த சமூக சேவகர் திவாகர் – 2014 ம் ஆண்டு தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி, ஒரு ஆண்டிற்கு 60,000 திருமணம் ஆன இந்திய ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதில்21% பேர் குடும்பப் பிரச்சனை தாங்காமல்தான் செத்துப்போகிறார்கள். 45 வயதிற்கு மேல் தற்கொலை செய்துகொள்கிற ஆண்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம். தற்கொலை முடிவை எடுக்காமல் தப்பியவர்கள் நிலைதான் நீங்கள் பார்த்த ரோட்டோர வாசிகள்.ஆனால் இந்த இல்லம் மழை,வெயில்,பனி காலங்களில் இவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.ஆனால் இவர்களுக்கு இதில் முரண்பாடு இருக்க தான் செய்கிறது என்றார் சமூக சேவகர் திவாகர் .

அன்னதானத்தை சாப்பிட்டு வேலை பார்க்கிறவங்களும், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு சும்மா இருப்பவர்களும், இருக்கதானே செய்றாங்க !

சமூக சேவகர் திவாகர். தொடர்பு- 9688155208
சேவை ஹோம் மேனேஜர் ஜெகநாதன் – 8508294586
படங்கள்: ஜெகே ரா.நிருபன்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.