அண்ணாவின் நூல்களை அச்சிட்ட திராவிடப்பண்ணை முத்து கிருஷ்ணன்

திருச்சியின் அடையாளங்கள் -43

0
1 full

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திராவிட இயக்க வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் 1923 ஆம் ஆண்டு வீராச்சாமி பொன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக மூன்று சகோதரர் மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர்.


தன் இளமைப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தவர்.
1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானவுடன் அறிஞர் அண்ணா நாவலர் நெடுஞ்செழியன் சி.பி.சிற்றரசு கலைஞர் கருணாநிதி போன்றோர் அக்காலத்தில் இவரது இல்லத்தில் தங்கிக் கட்சிப்பணியாற்றினார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள் நெருங்கிய நண்பராக விளங்கினார்.

முத்துகிருஷ்ணன் அவர்கள் தான் முதன்முதல் அறிஞர் அண்ணாவின் பல நூல்களை அச்சிட்டுத் தனது திராவிடப் பண்ணை என்ற வெளியீட்டகத்தின் முலமாக வெளியிட்டார்.அண்ணாவின் இலட்சிய வரலாறு ஆரியமாயை விடுதலைப் போர் முதலிய 3 நூல்களையும் வெளிவந்தவுடனே அரசாங்கம் தடைவிதித்தது மேலும் 1943 ல் வெளியிடப்பட்ட ஆரியமாயை என்ற நூலை எழுதியதற்ககாக 7 ஆண்டுகளுக்கு பிறகு 1950 இல் அறிஞர் அண்ணா மீதும் வெளியீட்டாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2 full

இந்நூலை வெளியிட்ட திராவிடப் பண்ணை பதிப்பகத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இவற்றினாலெல்லாம் சோர்வடையாமல் தொடர்ந்து அண்ணாவின் பதினைந்து நூல்களையும் இவர் வெளியிட்டு உள்ளார். கலைஞர் எழுதிய நாடும் நகரமும், பழக்கூடை, பூந்தோட்டம், வெள்ளிக்கிழமை, ரத்தக்கண்ணீர், நளாயினி, முத்தாரம் போன்ற நூல்களை முதன்முதல் வெளியிட்டது திராவிடப் பண்ணையோகும்.

நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய மொழிப் போராட்டம் பண்டைய கிரேக்கம் கலித்தொகையில் மூடநம்பிக்கையும் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். இம்மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் தனக்கென தனித்ததோர் இடத்தை வகித்து வந்த திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் தனது 67 வயதில் 1990 ஆம் ஆண்டில் மறைந்தார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.