சித்தாந்தச் செம்மல் ஜே.எம்.நல்லுசாமி பிள்ளை

திருச்சியின் அடையாளங்கள் -42

0
Full Page

சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு சைவ நெறியாளர்களாக வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜே.எம்.நல்லுசாமிபிள்ளை அவர்கள்.
திருச்சிராப்பள்ளியில் மாணிக்கம்பிள்ளையின் மகனாக 24.11.1864 அன்று பிறந்தவர் நல்லுசாமி சென்னையில் சட்டகல்வி பயின்று 1887 இல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். 1893 இல் வடஆற்காடு திருப்பத்தூரில் ஜில்லா முன்சீப்பாக நியமனம் பெற்றார். சைவத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்ட பிள்ளையவர்கள் இளமையில் திரிசிரபுரத்து நாகநாதசாமி கோயிலில் “சைவசித்தாந்த சமாஜம்” ஒன்றை நிறுவினார்.


நூற்றாண்டை கண்ட “திரிசிரபுர சைவ சித்தாந்த சபை” உருவாக இவரும் ஒரு காரணமாக விளங்கினார். சைவநெறி பரப்ப 1897 இல் “சித்தாந்த தீபிகை” என்ற தமிழ் மாத இதழை “Light Of Truth or Siddhanta Deepika” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டார். சைவ சித்தாந்த நூல்களான சிவஞான போதம், உண்மை விளக்கம், திருமூலர் திருமந்திரம் போன்ற பல போதம், உண்மை விளக்கம், திருமூலர் திருமந்திரம் போன்ற பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நாகை வேதாசலம்,(மறைமலை அடிகள்) டாக்டர் ஜி.யு.போப்பின் நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர். தத்துவ அறிஞர் மேக்ஸ்முல்லர் இவரது அறிவுப் புலமையைப் பெருமையுடன் பாராட்டியுள்ளார்.

Half page

அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வீர உரையாற்றி இந்தியா திருப்பிய சுவாமி விவேகானந்தருக்குப் பிள்ளை அவர்கள் சென்னையில் சைவசித்தாந்த மெய்ப்பொருள்களை விளக்கி விவேகானந்தரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார். அன்னிபெசன்ட் அம்மையார், Y.M.C.A இந்திய பொதுக் காரியதரிசி J.N.Farquhar போன்ற அறிஞர்களுடன் இவர் சமய சமூகப் பணிபற்றி விவாதித்துள்ளார்.

1906-இல் இலங்கையிலும்,1907-இல் சிதம்பரத்திலும்,1908-இல் நாகப்பட்டினத்திலும், 1909-இல் திருச்சிராப்பள்ளியிலும், 1910-இல் இராமநாதபுரத்திலும், 1911-இல் சென்னையிலும், 1912-இல் காஞ்சிபுரத்திலும் தொடந்து சைவ சமய மாநாடுகளை நல்லுசாமி பிள்ளை முன்னின்று நடத்தியுள்ளார். சைவ மாநாடுகளை தவிர பிள்ளை அவர்கள் கிறிஸ்துவத் தத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற கிறிஸ்துவ குருமார்களை வைத்து சைவசித்தாந்தத்தின் மேன்மையை விளக்கி கருத்தரங்கினை நடத்தியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி, மதுரை, சென்னை மற்றும் கல்கத்தா போன்ற பகுதிகளில் பல சமயக் கூட்டங்களில் சைவசித்தாந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சிறந்த அறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இதழாசிரியராகவும், சிவநெறிப்பெரியவராகவும் வாழ்ந்த ஜே.எம்.நல்லுசாமிபிள்ளை அவர்கள் 11.8.1920 அன்று காலமானார்.

இவரது மகன் ஜே.என்.ராமநாதன் அவர்கள் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக வாழ்ந்தவர். திருச்சிராப்பள்ளியில் முதன்முதல் அரிஜனங்களின் ஆலயப்பிரவேசத்திற்கு முன்னோடியாக போராடியவர். 1927 இல் இவர் மலைக்கோட்டை கோவிலுக்குள் அரிஜனங்களோடு நுழையும் போது தாக்கப்பட்டு காயமடைந்தார். மிகச் சிறுவயதிலேயே இவர் காலமானார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.