என் கனவு விம்பிள்டன் – திருச்சி டென்னிஸ் வீரன்..

0
1

உலக நாடுகளில் எத்தனை விளையாட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் என்று தனிபட்ட விளையாட்டுகள் உண்டு. அவற்றில் பொதுவான விளையாட்டுகளை உலக அளவில் நடத்தி அதில் சிறந்த வீரா்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி அவர்களை சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வது தான் தற்போதைய கலாச்சாரம். பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கபட்ட பல விளையாட்டுகள் இன்று உலக அரங்கில் பேசப்பட்டுள்ளது.

எங்கோ உருவான பல விளையாட்டுகள் பரவலான உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. அதில் டென்னிஸ் விளையாட்டும் ஒன்று, 12ஆம் நுற்றாண்டில் வடக்கு பிரான்ஸ் நாட்டில் ஆரம்பிக்கபட்ட இந்த விளையாட்டு 16ஆம் நுற்றாண்டிற்க்கு பிறகு தான் மற்ற நாடுகளுக்கு ஊடுருவியது. உலகில் பணக்கார விளையாட் டு என்று ஒரு பட்டியல் உண்டு அதில் இந்த விளையாட்டும் அடங்கும். ஒவ்வொரு விளையாட்டுக்கு ஒரு இலக்கு உண்டு உயர்ந்த விருது, உயர்ந்த பட்டம் என்ற இலக்கை நோக்கி தான் அனைத்து விளையாட்டுகளும் சென்று கொண்டிருக்கின்றன. அதில் டென்னிஸ் விளையாட்டிற்க்கு உரிய விம்பிள்டன் பட்டம் என்ற உயரிய பரிசு உள்ளது. அதனை நோக்கிய பயணத்தில் தற்போது திருச்சியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவா் ஓடி கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவங்களை என் திருச்சி இதழ் பதிவு செய்கிறது.

திருச்சி ஆல்பா சிபிஎஸ்இ பள்ளியில் படித்துவரும் செர்வின் ஐசக்கை நேரில் சந்தித்தோம். அவர் நம்மிடம் பேசுகையில்…

2

நான் இந்த விளையாட்டிற்க்கு வந்தது ஒரு சாதாரண காரணம் தான். நான் 7வது படிக்கும் போதே 55 கிலோவிற்க்கு மேல் உடல் எடை இருந்தேன். தொடர்ந்து எடை அதிகரித்து வந்த நிலையில், என்னுடை அப்பா பல முயற்சிகளை எடுத்தார். இந்த முயற்சியிலேயே 2 வருடங்கள் கழிந்தது. உடல் எடையை குறைப்பதற்கு விளையாட்டு மட்டும் தான் தீர்வு.

எனவே, 9 ம் வகுப்பு சேர்ந்தவுடன் டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ் சாரிடம் என்னை கொண்டு வந்து சேர்த்தார். அன்று முதல் நான் பயிற்சி எடுத்து வருகிறேன்.

கடந்த நான்கு வருடங்களில் நான் 20க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் எந்த போட்டியிலும் நான் பதக்கம் வாங்கியது இல்லை. பலமுறை நான் தோற்றதை நினைத்து அழுதுள்ளேன். ஆனால் என்னுடைய அப்பா எனக்கு ஆறுதல் சொல்லி அடுத்தமுறை முயற்சிசெய் என்று சொல்வார்.

அப்பா படிக்கும் காலத்திலேயே கிரிக்கெட்டில் பல்கலைகழக வீரா், தற்போது தேசிய கல்லூரியில் இயக்குநராக உள்ளார். இருந்தாலும் அவர் பணி முடித்துவந்த உடன் என்னுடைய பயிற்சிபற்றி கேட்டு அறிந்துகொள்வார்.

முதல் 20 போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்த நான் அடுத்தடுத்து நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் இதுவரை 4 தங்கம் மற்றும் 2வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளேன். முதல் முறையாக இந்தாண்டு (2017) ஆல் இந்தியா டென்னிஸ் அகாடமி சார்பில் அக்டோபா் மாதம் கொச்சினில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்து 128 போட்டியாளா்கள் பங்கேற்றனா். அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் முதல்முறையாக தங்க பதக்கத்தை வென்றுள்ளேன். அப்போது தான் நான் உணர்ந்தேன் தோல்வியை தொடர்ந்து சந்திக்கும் போது தான் அதில் ஏற்படும் வலி நம்மை வெற்றிபெற செய்யும் என்பது எனக்கு புரிந்தது என்று புன்னகைத்தார்.

என்னுடைய கனவு டென்னிஸ் விளையாட்டில் மிக உயர்ந்த இடமான விம்பிள்டன் பட்டத்தை பெற வேண்டும் என்பது தான், கண்டிப்பாக ஒரு நாள் அந்த இடத்தை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறுகிறார்.

என்னுடைய எல்லா முயற்சிக்கும், வெற்றிக்கும் முதலில் என்னுடைய அப்பா, அடுத்தாக அம்மா, அடுத்ததாக என்னுடைய பயிற்சியாளா் தான், இந்த விளையாட்டிற்க்கு முக்கியமானது உடல் உறுதி, டெக்னிக், மன உறுதி இவை மூன்றும் இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை இந்த பதக்கம் எனக்கு உணர்த்தி உள்ளது என்று கூறுகிறார்.

அண்ணா விளையாட்டரங்கில் டென்னிஸ் விளையாட்டு பயிற்சியாளராக உள்ள சுரேஷ் பேசுகையில்… டென்னிஸ் விளையாட்டு ஒரு பணக்கார விளையாட்டு தான், ஏன் என்றால் இந்த விளையாட்டை தேர்வு செய்பவா்கள் பெரும்பாலும் நகர பகுதிகளில் உள்ளவா்கள் தான், கிராமபுறங்களில் இந்த விளையாட்டு எட்டிக்கூட பார்த்தது இல்லை.

அதற்கு காரணம் சாதாரணமாக ஒருபோட்டிக்கு செல்வ என்றாலே குறைந்தது 30ஆயிரத்திற்கும் அதிகமாக தான் செலவாகும். எனவே தான் பலர் இந்த விளையாட்டை தேடி வருவதில்லை. அரசின் சலுகைகள், அரசின் பங்களிப்பு என்பதை தாண்டி தன்னுடைய சொந்த செலவில் போட்டிகளுக்கு செல்வது உள்ளிட்ட பலவற்றை பார்த்து கொள்பவா்களால் மட்டும் தான் இதில் நிலைக்க முடியும். அதேபோல் நகர பகுதிகளில் உள்ள 50 பேருக்கு பயிற்சி அளித்தால் அதில் 3 பேரை பதக்கம் வாங்கும் அளவிற்கு தேர்வாகுவார்கள்,

ஆனால் கிராம புறங்களுக்கு இந்த விளையாட்டு சென்றால் 10 பேருக்கு பயிற்சி அளித்தால் அதில் 5 பேரை பதக்கம் வாங்க வைக்க முடியும். இந்த விளையாட்டை 8 வயது முதல் விளையாட ஆரம்பிக்கலாம். இதில் போட்டி என்பது 8 முதல் 40 வயது வரை பிரிவும், 40 வயதுக்கு மேல் (வெட்ரன்ஸ்) முதியவர்களுக்கான பிரிவும் உள்ளது. உண்மையாகவே வெறித்தனமாக முறையான பயிற்சியுடன் விளையாடினால் இந்த விளையாட்டு ஒரு வீரரை பெரிய இடத்தில் அமர வைக்கும், இந்த விளையாட்டின் தன்மை, ஆர்வம் தமிழகத்தில் உள்ளவா்களுக்கு புரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாணவா்கள் இந்த விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

மாநில விளையாட்டு போட்டிகளில் தேர்ந்துள்ள நாம் வெளிநாட்டு விளையாட்டுகளில் கைதேர்ந்தவா்களாக மாற வேண்டும். எனவே கிராமபுற இளைஞா்கள் இந்த விளையாட்டை தேர்வு செய்தால் நம்மிடம் போட்டியிட யாரும் இல்லை என்று கூறுகிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.