பிறந்த நட்சத்திர பலன்கள்

0
1 full

ஜோதிடத்தில் பெண்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கவர்ச்சி, சுத்தம், கனிவு ஆகிய குணங்களை கொண்டவர்கள். கடவுள் பக்தி நிறந்த இவர்களுக்கு காதல் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

பரணி: பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆடம்பரம் அழகை விரும்ப மாட்டார்கள். நியாயத்திற்காக சண்டைகளை விரும்புவார்கள். ஆனால் இவர்கள் ஒருசில விடயங்களை மனதில் வைத்து தக்க நேரத்தில் உணர வைப்பார்கள்.

2 full

கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கொள்கைப் பிடிப்பற்றவர். உரிமைக் கோபம் அதிகம் இருக்கும். நியாயத்திற்காக சண்டை போடுபவர்கள். நேர்மையற்ற சுற்றத்தை வெறுப்பவர்கள். யாரும் இவர்களை ஏமாற்ற முடியாது.

ரோகிணி: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் செல்வம் படைத்தவர்கள். அழகானவர்களாக திக்ழவார்கள். இவர்கள் வயது மூத்தவர்களை மதிக்க தெரிந்தவர்கள்.

மிருகசீரிஷம்: மிருகசிரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுகாதாரமானவர்களாகவும், அழகானவர்களாகவும் திகழ்வார்கள். இவர்கள் ஆடை, ஆபரணம் யோகம் பெற்றவர்கள்.

திருவாதிரை: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குரோத குணமும், நய வஞ்சகமும் இல்லாதவர்கள். ஆத்திரம் மிக்கவராக இருப்பதால் முகத்திற்கு முன் பேசிவிடும் குணத்தை கொண்டவர்கள்.

புனர்பூசம்: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பண்பானவர்கள், அடக்க மானவர்கள். இவர்கள் சுய கவுரவம் படைத்ததால், அழகு, லட்சணம் மிக்க கணவரைப் விரும்புவார்கள்.

பூசம்: பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். இவர்கள் தோற்றத்திலும் மிகவும் அழகானவர்களாக திகழ்வார்கள்.

ஆயில்யம்: ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழுது சாதிப்பவர்கள். கோபத்தில் கடும் வார்த்தைகளை அள்ளி வீசுபவர் யாரையும் நம்பமட்டார்கள். ரகசியத்திஅ பாதுகாக்கத் தெரியாத வெளிப்படையானவர்கள்.

மகம்: மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். இவர்கள் அனைவரிடமும் பாசம் காட்டும் நபராக திகழ்வார்கள்.

பூரம்: பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சந்தோஷம், செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பார்கள். இவர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும் திகழ்வார்கள்.

உத்திரம்: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மகிழ்சியை விரும்புவார்கள் இவர்கள் ஒழுக்கமானவர்கள். அதனால் தவறு செய்ய விரும்ப மாட்டார்கள்.

அஸ்தம்: அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். இவர்கள் நுண்கலை வல்லுநர்களாக திகழ்வார்கள்.

சித்திரை: சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அதனால் இவர்கள் அழகானவர்களாக தோற்றமளிப்பார்கள்.

சுவாதி: சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். இவர்கள் எதிர்ப்பை வெல்லும் குணத்தை கொண்டவர்கள்.

விசாகம்: விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

அனுஷம்: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவராக திகழ்வார்கள்.

கேட்டை: கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சத்திய நெறி காப்பவர்கள். இவர்கள் சந்தோஷமாக சுற்றத்தாரை நேசிப்பவராக இருப்பார்கள்.

மூலம்: மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகாகவும், சுத்தமானவராகவும் இருப்பார்கள். ஆனால் அதிகம் கோபம் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் பிடிக்காதவர்களிடம் அதிக வெறுப்பை காட்டுவார்கள்.

பூராடம்: பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குடும்பத்தில் சிறந்தவராக திகழ்வார்கள்.
அதனால் இவர்கள் அதிகார அந்தஸ்து கொண்டவராக இருப்பார்கள்.

உத்திராடம்: உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகளாக திகழ்வார்கள்.

திருவோணம்: திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிறருக்குச் சேவை செய்பவர்கள். மிகுந்த இரக்க குணம் கொண்ட இவர்கள் நம்பிக்கை, நேர்மை மிக்கவராக இருப்பார்கள்.

அவிட்டம்: அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். இவர்கள் பெருந்தன்மை, கருணை, நேர்மை ஆகிய குணங்களை கொண்டவர்கள்.

சதயம்: சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். அனைவரிடமும் கலகலப்பாக பழகுவார்கள்.

பூரட்டாதி: பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். இவர்கள் கல்வி மற்றும் கலைகளில் வல்லவராக இருப்பார்கள்.

உத்திரட்டாதி: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பாசம், அறிவு ஆற்றல் மிக்கவர்கள். ஆனால் இவர்கள் உண்மையை மட்டுமே விரும்புவார்கள்.

ரேவதி: ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து சம்பிரதாயங்களை மதிப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் இவர்கள் நேசம் மிக்கவராக இருப்பார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.