மன உளைச்சலே நோய்களின் மூல காரணி

0
D1

மன உளைச்சல் என்பது ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் மாறுபடும். அந்த அந்த வயதில் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பிரச்சனைகளை கையாள தெரியாமல் அதனை பெரிய பிரச்சனையாக நினைத்து தங்களை தாங்களே வருத்திகொள்ளும் நபா்களின் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.

மனதளவில் நம்மை தகுதியானவா்களாக மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் புத்தகங்களை அதிகளவில் படிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள், உளவியல் நிபுணா்கள், தத்துவ ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

புத்தகங்களின் பக்கங்களை திருப்பி பார்க்க கூட நேரம் இல்லாமல் வாழுபவா்கள், யாருடனும் அமர்ந்து பேச நேரமில்லாதவா்கள், வாழ்க்கையை திட்டமிடல் என்ற பெயரில் ஓய்வில்லாமல் உழைப்பவா்கள், இவா்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்ற நிலை மாறி இன்று பள்ளிக்கு செல்லும் மாணவா்களுக்கு கூட பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா்.

D2

குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவா்க்கு தான் அதிகளவில் வாழ்க்கை மீதான புரிதல் இல்லாமல் நாள் முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு பிரச்சனைகள் குறித்து தனக்கு தானே சரிசெய்ய நினைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியாக தன்னை தானே தண்டித்து கொள்ளுதல், மன நோயாளியாக மாறுதல், இருதய நோயால் பாதிக்கப்படுதல், என பல வியாதிகள் உருவாக காரணமாக அமைந்துவிடுகின்றனா். மனஅழுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த தகவல் மிகவும் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. திடீர் மரணத்திற்கும், திடீர் தற்கொலை எண்ணத்திற்கும், பலவித வியாதிகளுக்கும் மூலக் காரணமாக விளங்குவது மனஉளைச்சலே என்று மருத்துவ ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல அரசு துறைகளில் பணிபுரிவோர் வாழ்க்கை திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

N2

வீடு கட்ட வேண்டும், ப்ளாட் வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வீட்டில் நவீன வீட்டு உபயோக பொருட்கள் இருக்க வேண்டும், பெண்ணுக்கு நல்ல இடத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதால், மேற்கூறியவற்றை நிறைவேற்ற பிஎஃப் லோன், தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் என்று பல கடன்களை வாங்கி, அதை திருப்ப செலுத்துவதற்காக அதிக நேரம் உழைப்பது, மாதாமாதம் கடன் கட்ட வேண்டும் என்ற பதற்றம் மற்றும் அளவுக்கு அதிகமாக கடன் சுமை ஆகியவை மனஉளைச்சலுக்கு காரணமாகிறது. மனஉளைச்சல் யாருக்கு ஏற்படுகிறது… எந்த வயதினருக்கு ஏற்படுகிறது. ஏன் ஏற்படுகிறது. மனஉளைச்சல் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, எவ்வாறு மனஉளைச்சலிலிருந்து விடுபடலாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர் அலீம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மனஉளைச்சல் எல்லா வயதினருக்கும் ஏற்படுது.. ஆண், பெண், மூன்றாம் பாலினம், மாணவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள், முதியோர்கள் என எல்லா வயதினருக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. மனஉளைச்சலே பல நோய்களுக்கு மூலகாரணமாகவும், நோய்களை அதிகப்படுத்தும் காரணியாகவும் விளங்குகிறது. பக்கவாதம், நீரழிவு நோய், இரத்த அழுத்தம், தீராத தலைவலி, ஆஸ்துமா, இருதய கோளாறு மற்றும் உடலில் பல பாகங்கள் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது.

மேலும் கல்வித்திறன் குறைவது, முடிவெடுக்கும் திறன் குறைவது, ஞாபக மறதி, பதற்றம், சோர்வு, கர்ப்பம் தரித்தலில் தோல்வி, உடலுறவில் பிரச்சினை, வேலையில் கவனமின்மை, அதிக கோபம், தனித்திருத்தல் என பலவித விளைவுகள் பலருக்கு ஏற்படுகிறது. இதுபோக, பலர் அதிக நேரம் அலைபேசியில் செலவிடுவதும், “இன்டெர்நெட்” ல் அதிகநேரம் உபயோகிப்பதும், அதிகமாக புகைபிடிப்பது, மது அருந்துவது, அதிக நேரம் விழித்திருப்பது என்பது போல பல காரியங்களில் மனஉளைச்சல் காரணமாக ஈடுபடுகிறார்கள்.

மனஉளைச்சல் காரணமாக மாணவர்கள் முரட்டுத்தனமாக இருப்பதும், குற்ற செயல்களில் ஈடுபடுவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும், மேலும் தற்கொலை எண்ணத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். மனஉளைச்சலிலிருந்து விடுபட்டால் மட்டுமே நோய் வீரியத்திலிருந்து விடுபட முடியும். மனஉளைச்சலை குறைத்தால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்…

-லோகநாத்

N3

Leave A Reply

Your email address will not be published.