பிபிசி என் கனவு -சாதனை பெண்மணி ‘ஷெர்லி தீபக்’

0
gif 1

இன்னைக்கு மீடியா ஃபில்டுல பெண்கள் நிறைய பேர் அசத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா, 1998-ல மீடியாவைப் பற்றி பரவலான அபிப்ராயம் இல்லாத நேரத்திலேயே, ‘மீடியா தான் என்னோட லட்சியம்னு’ சென்னைக்கு போய் படிச்சி, இன்னைக்கு ஒரு சக்ஸல்ஃபுல் பெண்மணியாக மீடியாத் துறையில் அசத்தி வருகிறார் திருச்சியைச் சேர்ந்த‘ஷெர்லி தீபக்’…

ப்ரொபசர், கன்சல்டண்ட், டிசைனர், ஈவண்ட் மேனேஜர் என பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘ஷெர்லி தீபக்’ அவர்களை மழைக்குப் பிறகான ஒரு மதிய வெயிலில் சந்தித்து பேசினோம்.
உங்களைப் பற்றி?
என்னோட பேர் ‘ஷெர்லி தீபக்’. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சி தான், என்னோட அம்மா லில்லி, அப்பா லாரன்ஸ். ரெண்டு பேருமே டீச்சர்ஸ். என்னோட வீட்டுக்காரர் பேர் தீபக் லாசரஸ். பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கார். எனக்கு ரெண்டு பசங்க. பொண்ணு பேர் தியா, 11-வது படிச்சிக்கிட்டு இருக்கா. பையன் அதித்யா 8-வது படிச்சிக்கிட்டு இருக்கார். நான் மீடியா படிச்சிட்டு ப்ரொபசர், கன்சல்டண்ட், டிசைனர், ஈவண்ட் மேனேஜர்ன்னு மட்டுமில்லாம ஒரு ‘குட் மதர்’ ஆகவும் இருக்கேன். வாழ்க்கை ரொம்ப சிறப்பா, மகிழ்ச்சியா போய்க்கிட்டு இருக்கு.

மீடியா ஆர்வம் எப்படி வந்தது?
நான் 6-வது படிக்குற சமயத்துல இருந்தே பிபிசி நியூஸ் பார்ப்பேன். பிபிசியில போய் நியூஸ் வாசிக்கணும்கிறது தான் என்னோட ஆசை, கனவு எல்லாமே!.. அந்த டைம்ல ஜர்னலிசம், கம்யூனிகேஷன் பத்தி பெரிய வியூ இல்லை. அந்த சமயத்துல தான் திருச்சியில கேபிள் வந்தது. அதுல ஒரு சேனல் பிபிசி நியூஸ் வரும். அதுல காலையில ‘ஏசியா டுடே’ன்னு ஒரு நியூஸ் வரும். அந்த நியூஸை பார்த்துட்டு தான் நான் ஸ்கூலுக்கே போவேன். அப்போதே எனக்கு மீடியா தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்.

gif 3

நான் 12-வது முடிச்சதும் எல்லா பேரண்ட்ஸ் மாதிரி தான் என்னோட அம்மா, அப்பாவும் நான் டாக்டரோ இல்லை இன்ஜினியரிங்கோ படிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. எனக்கு அந்த டைம்ல சயின்ஸ் மேல விருப்பம் இல்லை. அந்த பீரியட்ல கம்யூட்டர் சயின்ஸ் கொஞ்சம் பேமஸ். ஏங்க அம்மா அப்பாவும் அதே நெனப்புல காவேரி காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்க்க முடிவு பண்ணிட்டாங்க. “என்னை தயவு செஞ்சு கட்டாயப்படுத்தாதீங்க! எனக்கு பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கணும்னு ஆசை”ன்னு சொன்னேன்.

ஏன்னா எனக்கு சின்ன வயசுலயே பிபிசி நியூஸ், இங்கிலீஷ் புக்ஸ் படிக்குறதுன்னு ஆங்கிலம் மேல ஒரு தீராத காதல்.
பி.ஏ இங்கிலீஷ் படிச்சதும் எம்.ஏ இங்கிலீஷ் படிக்கலை. எனக்கு ஜர்னலிசம், கம்யூனிகேஷன் படிக்கணும்னு ஆசைன்னு வீட்ல சொன்னேன். அந்த டைம்ல நான் எம்.ஏ.மாஸ் கம்யூனிகேஷன் அப்ளை செஞ்சிருந்தேன் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில. மொத்தம் 24 சீட் தான். நிறைய பேர் எக்ஸாம் எழுதுனாங்க. அதுல நான் செலக்ட் ஆகிட்டேன்.வீட்டைவிட்டு சென்னையில போய் ஹாஸ்டல்ல தங்கி படிக்கணும்னு சொல்லவும் வீட்ல கொஞ்சம் யோசிச்சு தான் அனுப்புனாங்க. ஏன்னா, நான் யூஜி வரைக்கும் கேர்ல்ஸ் ஸ்கூல், காலேஜ்ல தான் படிச்சேன். கோ-எஜூகேஷன், சென்னைன்னு வீட்ல ஆரம்பத்துல ரொம்ப தயங்குனாங்க. எப்படியோ வீட்ல பேசி புரியவச்சி சென்னைல 2000-ல பிஜி மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சேன்.

புத்தக வாசிப்பதற்கான ஆர்வம் எப்படி வந்தது?
நான் சின்ன வயசுல இருந்தே புக் அதிகமா படிப்பேன். எங்க வீட்டு பக்கத்துல ஒரு பாய் பொட்டிக்கடை வச்சிருந்தார். அவர்கிட்ட மாயாவி காமிக்ஸ் வாங்கி படிச்சிட்டு கொடுத்துடுவேன். அப்படி தான் புக் படிக்க ஆரம்பிச்சேன். நான் காலேஜ் போனதும் எனக்கு நாவல் படிக்கணும்ங்கிற ஆசை அதிகமா இருந்துச்சி. அப்போ என்னோட ப்ரொபஷர் சாந்தி பாலையா கிட்ட போய், “எனக்கு புக்ஸ் படிக்கணும்னு ஆசை இருக்கு”ன்னு சொன்னேன். முதல்ல நான் சொல்ற புக்கை படின்னு ஆர்தர் கொனான் டாயிலோட, ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ புக் கொடுத்தாங்க. அப்புறம் ஹோலிகிராஸ் லைப்ரரியில நிறைய புக் எடுத்து படிக்க புத்தகம் எனக்கு வாழ்க்கையைப் பத்தின ஒரு புரிதலைக் கொடுத்துச்சி.

பிபிசி நியூஸ் வாசிக்கணும்னு ஆசைப்பட்ட நீங்க, ப்ரொபசர் ஆனது எப்படி?
நான் பிஜி முடிச்சி வீட்டுக்கு வந்த 10 நாள்லயே எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. நம்ம என்னவோ நெனச்சோம். மீடியா படிச்சிட்டு திருச்சியில என்ன பண்றதுன்னு எனக்கு ஒரே யோசனை. அந்த டைம்ல ஹோலிகிராஸ் காலேஜ்ல பிரின்சிபலாக இருந்த சிஸ்டர் ரோஸி என்னை கூப்பிட்டு, ‘ஹோலிகிராஸ்ல விஸ்காம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நீ கம்யூனிகேஷன் படிச்சிருக்க. நீ வந்து வொர்க் பண்ணு’ன்னு சொன்னாங்க.

அப்போ எனக்கு குழந்தை பொறந்து ரெண்டு மாசம் தான் ஆச்சு. எனக்கு தேவையான நேரத்துல லீவ் கொடுக்குறதுல இருந்து, எனக்கு என்கரேஜ்மெண்ட் கொடுத்து எனக்கு ரோஸி சிஸ்டர் ரொம்ப சப்போர்ட்டிவ் ஆக இருந்தாங்க. எங்க வீட்லயும் ‘நீ தைரியமா செய்’ன்னு பயங்கரமாக சப்போர்ட் பண்ணாங்க. அப்படித்தான் நான் 2002-ல ஹோலிகிராஸ்ல ப்ரொபசராக சேர்ந்தேன். 2014 வரைக்கும் அங்க வொர்க் பண்ணேன். அதுல 2006-ல இருந்து 2012 வரைக்கும் நான் அங்க ஹெச்.ஓ.டி ஆகவும் இருந்தேன்.

ப்ரொபசராக, ஹெச்.ஓ.டியாக ஹோலிகிராஸ்ல வேலை பார்த்த அனுபவம்?
2006-ல சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில ‘அண்ணா எஃப்.எம்’ ஆரம்பிச்சாங்க. இந்தியாவோட முதல் கம்யூனிட்டி ரேடியோ அது தான். அதை பார்த்துட்டு வர என்னோட பிரின்சிபல் என்னை கூட்டிட்டு போனாங்க. அவங்களோட வழிகாட்டுதலின்படி நாங்க, ‘ஹோலிகிராஸ் கம்யூனிட்டி ரேடியோ’ன்னு ஒரு எஃப்.எம். ஆரம்பிச்சோம். அதுக்கு என்னை இன்சார்ஜ்-ஆக போட்டாங்க. 2006-ல இருந்து நான் வெளிய வர வரைக்கும் அதை நான் தான் பாத்துக்கிட்டேன். அந்த டைம்ல கவர்ன்மெண்ட்டோட 3 மேஜர் ப்ராஜெக்ட் எங்களுக்கு கிடைச்சது. அதுமட்டுமில்லாம, நானே ஏற்பாடு செஞ்சி ஹோலிகிராஸ்ல ‘பிலிம் பெஸ்டிவல்ஸ்’ நடத்தினேன்.

பசங்களுக்கு சமூகப் பொறுப்பை கொண்டு வரணும்னு ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு தீம்ல விளம்பரம் ஷீட் பண்ணோம். அப்படி முதல்ல ‘ஒபே டிராஃபிக் ரூல்ஸ்’ன்னு பெரிய லெவல்ல அட்வர்டைஸ்மெண்ட்டை நாங்களே ஷூட் பண்ணி, டிவிக்கு எல்லாம் கொடுத்தோம்.

gif 4

பிபிசி கனவு என்னாச்சி?
திருச்சி வந்துட்டு கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ஊருக்குள்ளயே ஒரு காலேஜ், சாயங்காலம் வந்தா குழந்தைங்களை பார்த்துக்கலாம்னு ஒரு ரெகுலர் மதர் எப்படி யோசிப்பாங்களோ அந்த மாதிரி நான் ஆகிட்டேன்.

இப்போ என்ன பண்றீங்க?
இப்போ நான் ‘சென்கா’, m4c (மீ்டியா ஃபார் மீடியா கம்யூனிட்டி பவுண்டேஷன், நியூடெல்லி)-ல கன்சல்டன்ட் ஆகவும் ‘காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா’-ல இன்டர்னேஷனல் கன்சல்டண்ட் ஆகவும் இருக்கேன். ஹோலிகிராஸ் காலேஜ்ல கன்சல்டன்ஸி பண்றேன். பிஷப் ஹுபர் காலேஜ்ல பி.ஜி ஸ்டூடண்ட்ஸ்க்கு ஜர்னலிஷம் எடுக்குறேன். அதுமட்டுமில்லாம டிசைனர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட்ன்னு ரொம்ப பிஸியா இருக்கேன்…

உங்க குடும்பத்துல சப்போர்ட் எப்படி?
ரோட்டரி இண்டர்நேஷனல்ல இருந்து ஒரு குரூப் ஸ்டடி எக்ஸ்சேஞ்சுக்காக டீச்சர்ஸை அமெரிக்கா அனுப்புனாங்க. அதாவது இங்க உள்ள ஆட்கள் அங்க போய் அவங்களோட எஜூகேஷனல் சிஸ்டத்தை பார்க்கிறதும், அந்த ஆட்கள் இங்க வந்து நம்மோட எஜூகேஷனல் சிஸ்டத்தை பார்த்துட்டு போய் ரிப்போர்ட் கொடுக்குறது தான் அதோட சாரம்சம். அதுல நான் செலக்ட் ஆகி அமெரிக்கா போனேன். ஒரு மாசம் அங்க இருக்கணும். அது என்னோட முதல் வெளி நாட்டு பயணம். அதுவரைக்கும் நான் இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டுக்கும் போனது கிடையாது. அப்போ எனக்கு 2-வது குழந்தையும் பிறந்துடுச்சி. குழந்தைங்களை விட்டுட்டு எப்படி ஒரு மாசம் போறது, என்னால முடியாது, நான் போகலைன்னு என்னோட வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன். ஆனா அவரோ, ‘இது ஒரு நல்ல வாய்ப்பு. எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். குழந்தைங்களை நாங்க பாத்துக்குறோம்’னு எங்க வீட்டுக்காரர், என்னோட அம்மா, அப்பா, என்னோட மாமியார் சொல்லி என்கரேஜ் பண்ணி என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சாங்க. இன்னைக்கும் என்னோட வீட்டுக்காரர், என்னோட குழந்தைங்க, அம்மா, அப்பா, என்னோட மாமியார் சோபியா என எல்லாரும் ரொம்ப சப்போர்ட்டாக இருக்காங்க.

அதுமட்டுமில்லாம, டாக்டர் ஸ்ரீதர் என்னோட வாழ்க்கையில் மிக முக்கியமானவர். அவர் தான் அண்ணா எஃப்.எம்-ஐ முதன் முதலா ஸ்டார்ட் செஞ்சார். அவர் தான் எங்க ரேடியோ ஸ்டேஷனையும் திறந்து வச்சார். அவர் ‘சென்கா’ என்னும் அமைப்போட டைரக்டர் . அவர் என்னோட வொர்க்கை பார்த்துட்டு எனக்கு நிறைய உதவி செய்தார்.

ப்ரொபசர் மட்டுமில்லாம, கன்சல்டன்சி, டிசைனிங், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் ஆர்வம் எப்படி வந்தது?
2014-ல ஹோலிகிராஸ்ல இருந்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன். எனக்கு டீச்சிங் மேல ஆசையே கிடையாது. என்னைக்குமே நான் டீச்சராகவோ, புரொபஷர் ஆகவோ ஆகணும்னு ஆசைப்பட்டது கிடையாது. அதே புக், அதையே திரும்பத் திரும்ப சொல்லித் தர்றதுன்னு எனக்கு ஒருகட்டத்துல போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. ஆக்சுவலி நான் கொஞ்சம் கிரியேட்டிவ் பர்சன். 2014-ல் நான் வேலையை விட்டதுக்கு அப்புறம் முழு நேரமாக கன்சல்டன்சியை கையில எடுத்தேன். அதுமட்டுமல்ல, ‘டச் டோன்ஸ் ஈவண்ட்ஸ்’ ங்குற கம்பெனியை ஆரம்பிச்சி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்ய ஆரம்பிச்சேன்.

அதுமட்டுமில்லாம போட்டோஷாப் மூலமாக நானே பிளையர்ஸ், ப்ரவ்ச்சர்ஸ், இன்விடேஷன்ஸ் டிசைன் பண்றேன். எதையாவது கிரியேட்டிவ் ஆக செய்யணும்னு ஆசைப்பட்டு விளையாட்டாக ஆரம்பிச்சது இன்னைக்கு சூப்பரா போய்க்கிட்டு இருக்குது. ஹோலிகிராஸ்ல செஞ்ச 3 மேஜர் ப்ராஜெக்ட் வொர்க் தான் என்னை கன்சல்டன்சிக்கு கூட்டிட்டு போச்சு. அப்புறம் இந்த டிஸைனிங் எல்லாம் எனக்கு ஆர்வத்தினால நானே கத்துக்கிட்டேன்.

புத்தகம் வாசிக்குற பழக்கம் எவ்வளவு முக்கியம்?
எல்லாருமே புத்தகம் படிக்குற பழக்கத்தை ஏற்படுத்திக்கணும். என் புள்ளைங்களுக்கு சின்ன வயசுல இருந்து விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுத்ததை விட புத்தகத்தை தான் அதிகமா வாங்கிக் கொடுத்திருக்கேன். விஸ்காம், மீடியா படிக்குற பசங்களே நியூஸ் பேப்பர் படிக்குறதில்லை. சின்ன வயசுல இருந்து எனக்கு நியூஸ் கேட்டு பழக்கப்பட்டதால அதோட முக்கியத்துவம் என்னன்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களோட குழந்தைகளை நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்லியும், புத்தகங்கள் வாசிக்கச் சொல்லியும் பழக்கப் படுத்தணும்.

பெண்களுக்கு மீடியா பீல்ட் ஒத்துவராது என்ற பார்வை இருக்கே?
காலேஜ்ல அட்மிஷன் போட வர்ற பொண்ணுங்க எல்லாம் தெளிவாக இருப்பாங்க. ஆனா, அவங்க பெத்தவங்களை தான் நம்ம சொல்லி புரிய வைக்க வேண்டியிருக்கும். விஸ்காம் படிக்கப் போனா புள்ளை நடிக்கப் போயிடும்ங்கிற மன நிலை வந்திடுது. நான் சமீபத்துல பூனாவுக்கு போனப்ப அந்த பிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல நிறைய பொண்ணுங்க படிக்குறாங்க. பெண்களாலயும் மீடியாவுல சாதிக்க முடியும்னு இன்னைக்கு நிறைய பேர் தங்களோட திறமையை காட்டிக்கிட்டு இருக்காங்க.

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கு?
நமக்கு ஒரு விஷயம் நடக்குற வரைக்கும் அதைப்பத்தி பெருசா தெரியாது. பக்கத்துவீட்லயோ, இல்ல சொந்தக்காரங்க வீட்லயோ எதாவது சம்பவங்கள் நடக்குறப்ப கூட யாருக்கோங்குற மன நிலையில் நாம கடந்து போயிடுறோம். வெளியூர் போறப்ப நான் ரொம்ப அலர்ட்டாக இருப்பேன். பெண்கள் நிறைய கத்துக்கணும். யாரையும் சார்ந்து இருக்காத வகையில் தங்களை வளர்த்துக்கணும். பெண்கள் இன்னைக்கு சமூக வளைத்தளங்களில் தங்களைப் பற்றிய வெளிப்படையான தகவல்களை ஷேர் பண்ணக் கூடாது.

அதை சரியாக, கவனமாக கையாளணும். யாரையுமே நம்ப முடியாத சூழ்நிலை இன்னைக்கு உருவாகிடுச்சி. இன்னைக்கு உள்ள பெண்கள் கொஞ்சம் கவனமாகவே இருக்கணும்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.