1,00,000 கண்களுக்கு ஒளியேற்றிய திருச்சி மருத்துவர்

0
1

1,00,000 கண்களுக்கு ஒளியேற்றிய திருச்சி மருத்துவர்

‘இந்த உலகம் எவ்ளோ அழகானது’ன்னு கேட்டா எல்லார்கிட்டயும் தான் பார்த்து ரசித்ததைப் பற்றி சொல்ல, மறக்கமுடியாத கதை ஒன்றாவது இருக்கும். அப்படி இருக்க இந்த உலகத்துல தான் பார்வை இல்லாதவங்க பல லட்சம் பேர் இருங்காங்க. தான் பார்த்த இந்த உலகத்தை, பார்வையில்லாதவரும் பார்க்க வேண்டும் என நினைத்து கண்புரையால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களது வாழ்க்கைக்கு ஒளி கொடுத்திருக்கிறார் கண் அறுவை சிகிச்சை நிபுணர்
‘சிபு வர்கீஸ்’…

2

தற்போது திருச்சியில் வசித்துவரும் அவர், திருச்சி வாசன் ஐ கேர் ஹாஸ்பிட்டலில் பணியாற்றிவருகிறார். சாரல் மழை பெய்த ஒரு சாயங்கால நேரத்தில் அவரை சந்தித்து பேசினோம்.

உங்களைப் பற்றி?
எங்க அம்மா, அப்பாவோட பூர்விகம் எல்லாம் கேரளா தான். ஆனா, வேலை காரணமாக அந்தமான்ல செட்டில் ஆகிட்டாங்க. நான் பிறந்தது அந்தமான்ல தான். ப்ளஸ் டூ வரைக்கும் அங்க தான் படிச்சேன். அதுக்கப்புறம் கேரளாவுல எம்.பி.பி.எஸ். திருச்சி ஜோசப் ஐ ஹாஸ்பிட்டல்ல எம்.எஸ் முடிச்சேன். டெல்லியில நேஷனல் போர்டு, அப்புறம் லண்டன்ல எப்.ஆர்.சி.எஸ். வெளிநாடு வரைக்கும்போய் படிச்சாலும், அங்க எல்லாம் எனக்கு வேலை பார்க்க விருப்பம் வரலை. திருச்சி ஜோசப் ஐ ஹாச்பிட்டல்ல 10 வருஷம் வேலை பார்த்தேன். இப்போ வாசன் ஐ ஹாஸ்பிட்டல்க்கு வந்து 12 வருஷம் ஆச்சு. லைஃப் ரொம்ப சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு”ன்னு சுத்தத் தமிழில் பேச ஆரம்பித்தார்.

இவ்ளோ தெளிவா தமிழ் பேசுறீங்க?

(சத்தமாகச் சிரித்தவர்…) ஆக்சுவலி எனக்கு தமிழ் மட்டும் இல்லை இங்க்லீஸ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி கூட தெரியும். அதுமட்டுமில்லாம, கர்நாடகாவுல நான் அதிகமா கேம்ப் போனதால, அந்த பேஷண்ட்ஸ் கூடபேசிப் பேசியே ஒரளவுக்கு கன்னடமும் தெரியும்.

ஏன் மெடிக்கல் ஃபீல்டை செலக்ட் பண்ணீங்க?
நான் மெடிசின் படிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி இருக்கு. நான் 8-வது படிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல என்னோட அம்மா உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தாங்க. அவங்களுக்கு கொஞ்சம் வயிற்றுப்போக்கு இருந்துச்சி. ‘கொஞ்சம் ட்ரிப்ஸ் போட்டா நல்லா இருக்கும்’னு அங்க இருந்த ஸ்டாஃப் நர்ஸ்கிட்ட நான் சொன்னேன். ‘நீ மொதல்ல டாக்டராயிட்டு வா!.. அப்புறமா வந்து என்கிட்ட ஆர்டர் கொடு’ன்னாங்க. அது எனக்கு ஒரு சேலஞ்ச் மாதிரி ஆகிடுச்சி. சரி இதுக்காகவே நாம மெடிசின் படிக்கணும்னு முடிவு பண்ணேன். அதுவரை என்னோட குடும்பத்துல யாருமே மெடிக்கல் சைடுல இல்லை. ஆனா, அதுக்கப்புறம் என் ஃபேமிலி சைடுல இருந்து நிறைய டாக்டர்ஸ் வந்துட்டாங்க அது வேற விஷயம்.

‘ஐ’ ஸ்பெஷலிஸ்ட்டானது ஏன்?

நான் எம்.பி.பி.எஸ் நான்காமாண்டு படிச்சிக்கிட்டு இருக்குறப்ப தான் முதன்முதல்ல ஜ ஆப்ரேஷன் பாக்குறதுக்காக, ஐ ஆப்ரேஷன் தியேட்டர்க்குள்ள போனேன். அவ்ளோ சின்ன உறுப்புக்குள்ள நிறைய இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் யூஸ் பண்ணி சர்ஜரி பண்றதை பாக்குறப்ப எனக்கு அது பெரிய ஆச்சரியமாக இருந்துச்சி. வயிற்றுல எதாவது ஒரு ஆப்ரேஷன்னா அதை நாம ஓப்பன் பண்ணி பார்த்திடலாம். ஆனா, ஐ-ல அப்படியில்லை. மைக்ரோஸ்கோப் மூலமா அந்த இமேஜை பெருசாக்கி, அந்த இமேஜ் மேல ஆப்ரேஷன் பண்ணனும். கொஞ்சம் சிக்கலானது தான்.

ஆனா, ஐ ஆப்ரேஷன் பண்ண பேஷண்ட்ஸ்-ஐ அடுத்த நாள் ரவுண்ட்ஸ் போறப்ப பார்க்கையில் ரொம்ப வித்தியாசமான உணர்வு கிடைக்கும். வேற ஏதாவது ஒரு ஆப்ரேஷன் நடந்து அந்த பேஷண்ட்டை பார்க்க அடுத்த நாள் ரவுண்ட்ஸ் போனா, அந்த பேஷண்ட்ஸ் மயக்க நிலையில் இருப்பாங்க. செஞ்ச சர்ஜரியோட எபெக்டே அவங்களுக்கு தெரியாது. ஆனா, ஐ ஆப்ரேஷன் பண்ண ஒரு பேஷண்ட்க்கு அந்த கட்டை அவிழ்த்தவுடனே அவங்களுக்கு ஒரு எக்ஸைட்மெண்ட் இருக்கும். அந்த ‘வாவ் எபெக்டே’ எனக்கு ரொம்ப அட்ராக்டிவாக இருந்துச்சி. அதுவும் இப்ப இருக்குற டெக்னாலஜியெல்லாம் பாக்குறப்ப அடுத்த நாள் கூட வெய்ட் பண்ண வேணாம். ஆப்ரேஷன் செஞ்சு எழுந்திருச்சி வாட்ச் பாக்குறாங்க. இந்த ஃபீல் தான் எனக்கு இந்த துறையை தேர்ந்தெடுக்க வைத்தது.

மற்ற துறைகளைக் காட்டிலும் ஐ டிபார்ட்மெண்ட்டில் ஸ்பெஷல் இருக்கிறதா?

நான் முதல்ல ஊட்டி மேட்டுப்பாளையத்துல உள்ள ஒரு ஐ ஹாஸ்பிட்டல்ல தான் பிராக்டிஸ் பண்ணேன். அந்த நேரத்துல கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், மைசூர் போன்ற பல இடங்களுக்கு ஐ கேம்ப் போவோம். அந்த டைம்ல ஒரு ட்ரிப்ல குறைஞ்சது 200-300 பேர் வரைக்கும் கூட்டிட்டு வந்து ஐ ஆப்ரேஷன் செஞ்சி அவங்களை அனுப்பி வைப்போம்.

4

வேற எந்த ஃபீல்டுலயும் நாம அந்த அளவுக்கு சொஸைட்டியில எறங்கி வேலை பார்க்க முடியாது. மெடிக்கல் ஃபீல்டுல எல்லாத்துலயுமே சர்வீஸ் பண்றோம். ஆனா, கம்யூனிட்டிக்குள்ள இறங்கி மக்கள் கூட மிங்கிள் ஆகுறது ரொம்ப வித்தியாசமான ஃபீல். கேம்ப் போறது மட்டுமில்லை. அவங்க வீட்டுக்குள்ள போறது, அவங்களோட சாப்பாட்டை சாப்புடுறது, அவங்களோட லைஃப் ஸ்டைலை பாக்குறது, புது மொழின்னு எல்லாமே சுவாரஸ்யமா இருக்கும். அதனால இந்த கண் மருத்துவம் மற்ற துறைகளைக் காட்டிலும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

லண்டன்ல படிச்சிட்டு தமிழ்நாட்ல வேலை பாக்குறீங்களே?
எம்.எஸ்ங்குறது ஒரு ஸ்டேட் யுனிவர்சிட்டி எக்ஸாம் நடத்தி கொடுக்குற டிகிரி. இந்தியா லெவல்ல நமக்கு திறமை இருக்குன்னு நாம நிரூபிக்கணும்னு டெல்லியில நேஷனல் போர்டு எக்ஸாம் எழுதினேன். இன்னும் தன்னோட திறமையை வளர்த்துக்கணும்னு லண்டன்ல எப்.ஆர்.சி.எஸ் படிக்க போனேன். இவ்ளோ படிச்சிட்டு நீங்க வெளிநாட்ல வேலை பார்க்காம, இங்க வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்கன்னு? பல பேர் என்கிட்ட கேட்டிருக்காங்க.

எனக்கு இந்தியா கல்ச்சர் ரொம்ப புடிக்கும். அதுவும் எனக்கு திருச்சியை ரொம்ப புடிக்கும். எனக்கு திருச்சி மீது ஓர் தீராத காதல். ஏன்னா!…ஹெவி மெட்ரோ பிரஷர் இங்க இல்லை. சுத்தமான காற்று, காலையில எழுந்திரிச்சா இன்னமும் ஒரு கிராமத்து சூழலை இங்க பார்க்க முடியும். திருச்சியை விட்டு 5 கிலோ மீட்டர் தாண்டினா வில்லேஜ் செட்டப் வந்திடும். சொல்லப்போனா, திருச்சி ஒரு மாடர்ன் வில்லேஜ். மாடர்ன் லைப் ப்ளஸ் வில்லேஜ் லைஃப் புடிக்குறவங்களுக்கு திருச்சி ரொம்ப பெஸ்டான இடம். எனக்கு திருச்சி ரொம்ப புடிச்சிருக்கு.. கிட்டத்தட்ட 22 வருஷமா நான் திருச்சியில தான் இருக்கேன்.

ஐ கேம்ப்பில் சில ஆப்ரேஷன்களால் பார்வை போனதாக சர்ச்சைகள் எழுந்திருக்கிறதே, அது ஏன்?
கேம்ப் ஐ ஆப்ரேஷன்ல பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவது தான். உடம்பில் வேறு எந்த இடத்துல் கிறுமித்தொற்று ஏற்பட்டாலும் அதை நம்மால் சரிசெய்துவிட முடியும். ஆனால், கண்ணில் ஏதாவது கிருமித் தொற்று ஏற்பட்டால், 70-80 சதவிகிதம் அந்த கண் வீணாகிப் போன மாதிரி தான். அதை சரிசெய்வது கொஞ்சம் கஷ்டம் தான். இந்த கிருமித்தொற்றுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடிய சொல்யூஷனின் குவாலிட்டி கண்ட்ரோல் தான் காரணம். அதனால தான் ஒரே கேம்ப்ல ஆப்ரேஷன் செஞ்ச 50 பேருக்கு ஒரே நேரத்துல பிரச்சினை ஆகிடுது. அதுமட்டுமில்லாம, இந்த மாதிரியான கேம்ப்க்கு எல்லாம், எக்கனாமிக்கலா பண்ணணும். அதனால குறைந்த விலைக்கு வாங்கப்படும் பொருட்களின் குவாலிட்டி கண்ட்ரோல் எப்படியிருக்கிறது என்பதிலும் பிரச்சினையிருக்கு.

இரண்டாவது பேஷண்டோட ஸ்கின்ல இருந்து வரக் கூடிய தொற்று. கேம்ப் போதுவாக கிராமங்களில் நடத்துறோம். அங்க விவசாயிகள் தான் அதிகமாக இருப்பாங்க. அவங்க உடம்புல எப்பொழுதும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமித்தொற்றுகள் இருக்கும். அதனாலயும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
உதாரணத்துக்கு சொல்லணும்னா, நான் மேட்டுப்பாளையத்துல வேலை பாக்குறப்ப, கர்நாடகாவுல இருந்து கூட்டிட்டு வர்ற பேஷண்ட்டை மேட்டுப்பாளையத்துக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு ஆறு இருக்கும், அங்க எல்லாரையும் குளிப்பாட்டி, ஹேர்கட் பண்ணி, ட்ரஸ் எதாவது அழுக்கா இருந்தா அவங்களுக்கு நல்ல ட்ரஸ் கொடுத்து, அப்புறம் தான் ஹாஸ்பிட்டல்க்குள்ள கொண்டு வருவோம். இல்லைன்னா, ஹாஸ்பிட்டல்ல மற்ற நோயாளிங்ககளுக்கு தொற்று பரவிவிடும். இப்படி நாம தொற்று எற்படாமல் இருக்க விழிப்புணர்வுடன் தான் இருக்கோம். அதே விழிப்புணர்வு சிகிச்சை பெற்ற பேஷண்ட்டிற்கும் இருக்க வேண்டும்.

முதல் சிகிச்சையின் போது துறையை மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுத்தீர்களாமே? ஏன்?
இதுவரைக்கும் நான் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கேட்ரட் சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனா, முதல்முறையா மேட்டுப்பாளையத்துல நான் ப்ராக்டிஸ் செஞ்சப்ப, இவ்ளோ சின்ன பார்ட்ட ஹேண்டில் பண்ணி எப்படி ஆப்ரேஷன் பண்றது, என்னால முடியாது வேற ஃபீல்ட்க்கு மாறிடலாம்னு நெனச்சு தியேட்டரை விட்டு வெளிய வந்துட்டேன். அப்புறம் என்னோட சீனியர் பிலிப் குருவிலா தான் ஸ்டெப் பை ஸ்டெப்பா போங்க. பழகிட்டா ஈஸிதான்னு நம்பிக்கை கொடுத்தார். அப்படி நான் ஒரு சர்ஜரி முழுசா பண்ண கிட்டத்தட்ட ஒரு வருஷம் கத்துக்கிட்டேன். இன்னைக்கு நான் ஒருமணி நேரத்துல கிட்டத்தட்ட 12-13 ஆப்ரேஷன் வரை பண்ணிக்கிட்டு இருக்கேன்னா அதற்கு அவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம்.

உங்களுடைய சர்வீஸில் நீங்கள் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது?
6 மாசத்துக்கு முன்னாடி என்னை அழுக வைக்கக்கூடிய ஒரு சம்பவம் நடந்துச்சி. 21/2 வயசு ஆண் குழந்தயை தூக்கிக்கிட்டு அவங்க பெற்றோர் என்கிட்ட வந்தாங்க. அந்த பையனை பார்க்குறப்ப ‘ரெட்டினோ பிளாஸ்டோமா’ எனப்படும் மிகவும் அறிதான கண்ணில் ஏற்படக் கூடிய கேன்சர் இருப்பது எனக்கு தெரியவந்தது. முதல்ல அவங்களை ஸ்கேன் எடுத்துட்டு வரச் சொன்னேன். அவங்ககிட்ட ஸ்கேன் எடுக்கக் கூட காசு இல்லை. ஸ்கேன் செண்டர்ல பேசி டிஸ்கவுண்ட் கொடுக்கச் சொல்லி ஸ்கேன் பார்த்தாங்க. ஸ்கேன் ரிப்போர்ட்ல அந்த கேன்சர் மூளை முழுவதுமா பரவியிருந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தெரிஞ்சதும், அந்த பையனோட அம்மா அப்பா ‘என்ன பண்லாம் டாக்டர்ன்னு” என்கிட்ட கேட்டாங்க. அடையார் கேன்சர் செண்டர்க்கு வேணுமுன்னா கூட்டிட்டு போங்க. ஆனா, பையனை காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னேன்.

ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணவங்க. வீட்ல எந்த சப்போர்ட்டும் இல்லை. அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷத்து அப்புறமா பொறந்த கொழந்தை அது. ஏன் இவ்ளோ நாள் கொண்டு வரலைன்னு கேட்டா, அந்த குழந்தையோட அப்பாவுக்கு ஏதோ ஆக்ஸிடண்ட் ஆகி 6 மாசம் பெட்ல இருந்திருக்காரு. தன் குழந்தைக்கு ஏதோ பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சும் அவங்களால அந்த குழந்தையை கூட்டிக்கிட்டு வர முடியலை.
நான் வீட்டுக்கு கிளம்பி போறப்ப என்னோட கார் கண்ணாடியில பாகுறேன், ஹாஸ்பிட்டல்க்கு வெளியே அந்த குழந்தயோட அழுதுக்கிட்டு ரோட்ல உட்காந்திருக்காங்க. என்னன்னு நான் கேட்டப்ப, ‘ என் குழந்தை பிழைக்க வாய்ப்பிருக்குன்னு நீங்க சொன்னா நான் என் குழந்தையை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்.

இல்லைன்னா நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்’ன்னு அவங்க சொல்றப்ப அன்னைக்கு உண்மையாகவே நான் அழுதுட்டேன். என்னால எந்த பதிலும் சொல்ல முடியலை. என் சர்வீஸ்ல மறக்க முடியாத சம்பவம் அது.

உங்களோட அடுத்த இலக்கு என்ன?
இந்த மருத்துவ திறமைகள் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் விதத்தில் கொண்டு செல்லணும். என்னோட மனைவியும் ஐ ஸ்பெஷல்ஸ்ட். நானும் அவங்களும் வருஷத்துக்கு ஒரு தடவை மருத்துவ வசதி இல்லாத பல இடங்களுக்குச் சென்று, இலவசமாக ஐ ஆப்ரேஷன் செய்து வருகிறோம். குறிப்பா பீகார், உத்திரப் பிரதேஷத்துல இப்பவும் வருஷத்துக்கு ஒருதடவை கேம்ப் நடத்திக்கிட்டு இருக்கோம். சமீபத்துல கூட அந்தமான்ல ஒரு கேம்ப் நடத்திட்டு வந்தோம். இன்னும் நிறைய மக்களுக்கு நம்மால் முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யணும்” என்றார்.
மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து, பலருக்கு வெளிச்சம் கொடுத்து வரும் டாக்டர் சிபு வர்கி அவர்களுடைய சேவை இன்னும் தொடர நம்ம திருச்சி இதழ் வாழ்த்துகிறது…

ஆல் தி பெஸ்ட் சிபு வர்கீஸ் சார்!…

– நவீன்

3

Leave A Reply

Your email address will not be published.