கொஞ்சம் கோபக்காரர்… ரொம்ப பாசக்காரர்…

0
gif 1

கே.என்.நேரு – அவரைப் பற்றி சக தி.மு.க நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டவை!…

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன், “நேரு மிகவும் பண்பானவர். சட்டமன்றத்திலே பல கேள்விகளை கேட்டு எதிரணியினரை திணறடிப்பவர். அவ்வப்போது கோபப்பட்டாலும், அதை ஐந்து நிமிடங்களுக்குள் மறந்துவிடுவார்.

கட்சிக்கு தீவிர உழைப்பாளி. மேலும், சென்னையில் நகர்ப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே பேருந்துகள் சென்றுவந்த நிலையில், அதனை 40 கி.மீக்கும் அதிகமாக புறநகர்ப் பகுதிகள் வரை நீட்டித்து மக்களுக்கு செளகரியம் செய்து கொடுத்தவர். சுற்றுலாப் பயணிகளுக்காக உயர்ரக சொகுசுப் பேருந்துகளையும் அறிமுகம் செய்துவைத்து, தமிழக பேருந்துகளின் தரத்தை மெச்சத்தக்க வகையில் செய்தார்” என்றார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏவுமான தா.மோ.அன்பரசன், “சட்டென கோபப்படுவார்.

gif 3

ஆனால், அடுத்த நிமிடமே தோளில் கைபோட்டு சகஜமாகிவிடுவார். அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளுக்கு கூட பாரபட்சம் பார்க்காமல், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தருவார். தலைவர் மற்றும் தளபதி மீது மிகுந்த பற்றுடையவர். மற்ற மாவட்டத் தலைவர்களைக் காட்டிலும் தான் பிரமாண்டமாக செய்ய வேண்டும் என, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், மாநாடாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வார்” என்றார்.

gif 4

முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி, “கட்சியின் சீனியர் நிர்வாகிகளுள் நேருவும் ஒருவர். கட்சி நிர்வாகிகளுடன் சகஜமாக பழகக் கூடியவர். எந்தவேலையாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்துமுடிப்பவர். கொஞ்சம் கோபக்காரர். எந்தளவிற்கு கோபப்படுவாரோ அந்தளவிற்கு கலகலப்பாகவும் இருப்பார்” என்றார்.

ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன், “எங்கள் பகுதிகளில் உள்ள ஒருசில கிராமங்களுக்கு பேருந்து வசதியில்லை, என நாங்கள் கோரிக்கை வைத்தபோது அதை செய்துகொடுத்தார். இந்த செயலால், அடுத்துவந்த தேர்தல்களில் மக்கள் செல்வாக்கால் நான் வெற்றி பெற்றேன். நான் என்று அல்ல, கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலிப்பார். தேர்தல் நேர களப்பணிகளில் சிறப்பாக செயல்படக் கூடியவர்” என்றார்.

திருப்பட்டூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பன், “நேரு ஒரு சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை என்னால் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டுபவர். கட்சிக்காக தீவிரமாகவும், உண்மையாகவும் உழைக்கக் கூடியவர். தன்னுடைய தம்பியின் இறப்பிற்குப் பின்னரும், தொய்வில்லாமல் கட்சிப் பணியாற்றியவர்.

அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் போக்குவரத்துத் துறையாக சிறப்பாக நடத்தி வந்தார். தனியார் பேருந்துகளின் வசதிகளுக்கு நிகராக டீலக்ஸ் பேருந்துகள், வால்வோ மற்றும் ஏ.சி பேருந்துகள் என பல புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இப்படி போக்குவரத்துத் துறையில் பல வசதிகளையும், முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாத அளவிற்கு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தவர்” என்றார்.
-நவீன் இளங்கோவன்

gif 2

Leave A Reply

Your email address will not be published.