செந்தமிழ் செம்மல் கவிதாமணி அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்

0

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார். இலங்கையில் பிறந்த இவர் இவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1920ஆம் ஆண்டு துறையூர் அருகில் உள்ள ரங்கநாதபுரத்தில் குடியேறினார். ரங்கநாதபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். அப்போது துறையூர் வந்த பாபுராஜேந்திரபிரசாத்துக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தார்.


திருச்சிராப்பள்ளியில் “கிராம ஊழியன்” என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த பூர்ணம்பிள்ளை 1942இல் மறைந்த பிறகு அ.வெ.ர. வெளியீட்டாளராகவும், திருலோக சீத்தாராமை ஆசிரியராகவும் கொண்டு “கிராம ஊழியன்” தொடர்ந்து வெளிவந்தது.

‌சந்தா 1

1947ஆம் ஆண்டு கிராம ஊழியனை நிறுத்திவிட்டு திருலோகசீத்தாராமுடன் இணைந்து “சிவாஜி” என்ற இதழை நடத்தினார். 1951இல் திருச்சிராப்பள்ளித் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரானார். 1957ல் எழுத்தாளன் என்ற இதழைத் தொடங்கினார். “புதுப்புனல்” என்ற பதிப்பகத்தை நிறுவி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.

சந்தா 2

பெடரல் அரசியல், அவதூத விஜயம், சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி, வாழ்க்கைக் கலை, வயலூர் வரலாறு, மலைக்கோவில் வரலாறு உள்ளிட்ட 19 நூல்களை எழுதி வெளியிட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த ஜீவானந்தத்திற்கு 6 மாதம் அடைக்கலம் கொடுத்தார். பல்வேறு கோவில் திருப்பணிக் குழுத் தலைவராக இருந்தார். வியாபாரக் கழகத் தலைவர் தமிழ்ச் சங்கச் செயலாளர் எனப் பல பதவிகளை வகித்தார்.

காஞ்சி சங்கராச்சாரியார் இவருக்கு “கவிதாமணி” என்ற பட்டம் வழங்கினார். சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் “உபய பாஷப்ரவீணா” என்ற பட்டம் வழங்கினார். தருமபுரம் ஆதீனகர்த்தரால் “செந்தமிழ்க் கவிதைச் செம்மல்” என்று பட்டம் சூட்டப்பட்டார்.
மீண்டும் அடுத்தவாரம் இன்னொரு ஆளுமை குறித்து தெரிந்துகொள்வோம்…

ஒருங்கிணைந்த திருச்சியின் அடையாளங்கள் பற்றின முந்தைய தொகுப்புகளை ஆன்லைனில்
http://ntrichy.com இணையதளத்தில்
பார்த்து படித்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.