துறையூரின் அடையாளம் ”செச்சை”

திருச்சியின் அடையாளங்கள் -27

0
Business trichy

துறையூர் பெரிய ஏரியின் நடுவில் அமைந்துள்ள செச்சை என்ற ஆன்மீக ஸ்தலத்தில் ஓங்கார குடில் அகத்தியா் சன்மார்க்க சங்கம் சார்பில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இந்த ஆன்மீக ஸ்தலம் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே இந்த ஸ்தலம் குறித்து நம்ம திருச்சி இதழ் விசாரித்ததில்….

துறையூரில் மிக பழமையான ஆன்மீக ஸ்தலம் என்றால் அது இந்த செச்சை தான். முதலில் செச்சை பற்றி கூறும்போது இப்பகுதியில் வாழ்ந்த வீர சைவா்கள் (லிங்கம் கட்டி அய்யா்) தங்கள் கழுத்தில் ஒரு பெட்டகம் கட்டியிருப்பார்கள், அதன் உள்ளே லிங்கம் பொருத்தப்பட்டிருக்கும், இந்த பெட்டகத்துக்கு தினமும் பூஜை வழிபாடு செய்து வந்துள்ளனா். அந்த பெட்டகத்துக்கு பெயர் தான் செச்சை என்று அழைக்கப்படுகிறது. அதே வடிவத்தில் இப்பகுதியில் உள்ள இந்த ஆன்மீக ஸ்தலம்

வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை செச்சை என்றே கூறுகிறார்கள்.
கிபி 14ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆன்மீக ஸ்தலம் ஜமின்தார்கள் துறையூரை ஆண்ட காலத்தில் கட்டிய வசந்த மாளிகை என்றும், உல்லாச பொழுது போக்கு கூடம் என்றும், ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் என்றும் பல வரலாற்றை கூறி வந்துள்ளனா்.

loan point

அந்த காலகட்டத்தில் துறையூரை ஆண்ட மகாராஜா காசி ஸ்தல யாத்திரை சென்ற நேரத்தில் தன்னுடைய தம்பியான லிங்கதுரையை மன்னராக நியமித்து சென்றுள்ளார்.

nammalvar

லிங்கதுரையின் ஆட்சியில் துறையூர் நந்திகேஸ்வரா் ஆலயத்திற்கு தனி தீா்த்த குளம் வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெப்பகுளத்தை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்டது தான் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. அதோடு தன்னுடைய கஜானாவில் இருந்த மொத்த பணத்தையும் அன்னதானத்திற்காகவும், சொர்ணதானதிற்காவும் செலவு செய்தார்.

இதற்கிடையில் காசிக்கு சென்ற மகாராஜா திரும்பியபோது தன்னுடைய அனுமதி இன்றி கஜானாவை காலியானதை கண்டு கோபம் அடைந்து தன்னுடைய தம்பியை சிறைசேதம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

web designer

ஆனால் மக்களுக்காக அரசின் கஜானாவில் எதையும் மிச்சம் வைக்காமல் செலவிட்டு அவா்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததால் மக்களின் அன்பையும், அரசவை மந்திரிகளின் அன்பையும் பெற்றதால் அவா்கள் லிங்கதுரையை தப்பிக்க உதவி செய்தனா்.

தப்பி சென்ற அவா் மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை கண்டு அவரால் ஈா்க்கப்பட்டு சீடரானார். இதனிடையே துறையூரை ஆண்டுவந்த மகாராஜாவிற்க்கு முதுமை தொற்றிகொள்ள அவருக்கு வாரிசு இல்லாததால் தன்னுடைய வாரிசாக இருந்த தம்பியை தான் சிறைச்சேதம் செய்ய சொன்னதை நினைத்து வருத்தபட ஆரம்பித்துள்ளார். மகாராஜாவின் புலம்பலை கேட்ட மந்திரிகள் லிங்கதுரையை நாங்கள் சிறைச்சேதம் செய்யவில்லை. அவர் உயிரோடு திருவண்ணாமலையில் உள்ளார் என்று கூறியதையடுத்து மகாராஜா மனம் மகிழ்ந்து தன்னுடைய தம்பியை அழைத்துவர உத்தரவிட்டார்.

ஆனால் குருநாதரை பிரிய மனமில்லாத லிங்கதுரை அண்ணனுடைய அழைப்பை ஏற்க மறுத்தார். ஆனால் அவரை வர வைக்க வேண்டும் என்று எண்ணிய மகாராஜா மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை வரவழைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதோடு அவரும் அவருடைய சீடா்களும் வந்து தங்க அரண்மனைக்கு எதிரே மடம் ஒன்றை கட்டினார்.

தற்போது பிரசன்னா திருமண மகாலுக்கு அருகே உள்ள பெரிய மடம் தான் அது. அவா் நினைத்தபடி ஆதி சிவபிரகாச சுவாமிகள் சீடர்களுடன் மடத்தில் தங்க வைக்கப்பட்டதோடு, தம்பியை மீண்டும் மன்னராக்கினார்.

மன்னராக பொறுப்பேற்ற லிங்கதுரை மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும், அவா்களும் தம் குருநாதரின் உபதேசங்களையும் ஏற்று வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் வேண்டி அமைக்கப்பட்டது தான் ஏரியின் நடுவே அமைந்துள்ள செச்சை கட்டிடமாகும்.

இந்த செச்சையில் பல மகான்களின் ஆன்மிக சொற்பொழிவுகள், நடைபெற்று கடந்த 600 வருடங்களுக்கும் மேலாக துறையூா் மக்களுக்கு ஆன்மீக ஸ்தலமாக கம்பீரமாக ஏரியின் நடுவில் நிற்கிறது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.