பொள்ளாச்சியின் வளம் காமராஜரின் முயற்சியே

0
D1

அந்த பெரியவர் பெயர் ரங்கநாதன். திருச்சி மாவட்டம் எட்டரை என்ற ஊரை சேர்ந்தவர். திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே கஜப்ரியா ஓட்டல் எதிரே இளநீர் விற்று கொண்டு இருந்தார். எப்படியும் சென்னைபோல அதிக விலை இருக்காது’ என்ற நினைப்பில் விலை கேட்காமல் செவ்விளநீர் வாங்கி அருந்தினேன். 100 மில்லி இளநீர் கூட இருந்திருக்காது.

’50 ரூபாய்’ என்றார் அதிர்ந்தேன். பச்சை இளநீரும் அதே விலை என்றார் கறாராக. சென்னை விலையே 35 தானே? ‘ஏன் எவ்வளவு விலை?’ ‘இது பொள்ளாச்சி காய். அதான் அந்த விலை. நாங்க என்ன செய்றது. வியாபாரிட்ட வாங்கி 7 ரூபா அதிகம் வச்சு விக்கிறோம்’ ‘ஏன் திருச்சில காய்லாம் கிடைக்காதா?’ ‘திருச்சில காய்கள் விளைந்து 4, 5 ஆண்டுகள் ஆகி விட்டது. தண்ணி கிடைக்காம தென்னை மரங்கள் காய்ந்து கருகிவிட்டன.

இந்த பாருங்க, இதுதான் திருச்சி காய். சுருங்கி, சிறுத்து போய்தான் கிடைக்குது. திருச்சில காய்கள் விளைந்தபோது 7 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்றோம். இப்போ வியாபாரிகள் வைப்பதுதான் விலை…’
வலது கையில் திருச்சியில் காய்த்த இளநீர்களையும், இடது கையில் பொள்ளாச்சி காய்கள் என்று பிடித்து உயர்த்தி காட்டினார்.

D2

காவிரி பாயும் திருச்சியில் விளைந்த காய்கள் பரிதாபமாக பார்த்தன. பொள்ளாச்சி காய்கள் பளபளத்தன.

‘திருச்சில 2,3 வருஷமா தண்ணி கிடையாது. கீரை கட்டு 15, 20 ரூபா. கத்தரிக்காய் கிலோ 60 ரூபா …’ அடுக்கி கொண்டே போனார்.
‘அந்தநல்லூர், முசிறி, லால்குடி, தொட்டியம், மணிகண்டம், திருவெறும்பூர் போன்ற யூனியன் பகுதிகளில் 100 மரங்களுக்கு 20 மரங்கள் தான் உயிரோடு இருக்கின்றன. அதில் வரும் காய்களும் சிறுத்து, காய்ந்து தண்ணீரின்றி வருகின்றன’ என்றார்.

N2

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் மஹாதானபுரம், லாலாபேட்டை பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் வழிநெடுகிலும் தென்னைகள் காய்ந்து கருகி, தலை கவிழ்ந்து மரணித்து கிடக்கின்றன. சாலையின் மறுபுறம் காவிரி ஆறு – பாலைவனம் போல மிரட்டுகிறது.

வரலாறு காணாத வறட்சியை கரூர், திருச்சி தொடங்கி டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருப்பதை அறிய முடிகிறது.

‘தென்னைக்கு அதிக தண்ணீர் வேண்டும். தென்னை இந்த மாவட்டங்களை விட்டு செல்வது நல்லது. அப்போதான் நிலத்தடி நீர் மிஞ்சும். இப்போ பனை வளர்க்க ஊக்க படுத்துறங்க’ என்று புது தகவல் சொன்னார் கரூர் நிருபர்.
ஒருகாலத்தில், பாலைப்போல கிடந்தது பொள்ளாச்சி. காமராஜர் முயற்சியால் கேரளாவுடன் பதமாகப்பேசி பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று பொள்ளாச்சியில் பசுமை கொழிக்கிறது.

காமராஜரின் இந்த தொலைநோக்கு திட்டம் குறித்து தினமலரில் தொடர் எழுதினார் அப்போதைய பொள்ளாச்சி நிருபர் செல்வகுமார்.
தமிழகத்தை காப்பாற்ற இப்போது நமக்கு நிறைய காமராஜர்கள் தேவை.

-முகநூலில் Sethu Nagarajan

N3

Leave A Reply

Your email address will not be published.