பார்வையற்ற எங்களுக்கு கல்வி தான் வெளிச்சம்

0
Business trichy

பெண்கள் என்ற பாலினம் தொடர்ந்து சமூகத்தில் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சந்தித்து கொண்டே இருக்கிறது. அதிலும் மாற்றுதிறனாளிகள், மனநல பாதிப்படைந்த பெண்கள், பார்வையற்றவர்கள், என்று பல்வேறு குறைபாடுகளோடு இந்த சமூகத்தில் வாழும் பெண்களுக்கான வாழ்க்கை பிரச்சனை அவர்களுடைய பெற்றோர்களாலும், சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளபடுகிறதா என்ற கேள்விக்கு நம்மால் பதில் கூற இயலாது.

நம்முடைய நோக்கம் இந்த சமூகத்தில் வாழும் எல்லா நிலைகளை சேர்ந்த பெண்களுக்கான மரியாதையும், பாதுகாப்பையும் நம்மால் உறுதி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டால் தான் நல்ல சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை கொடுக்கும். சமுதாயத்தில் எங்களால் முடியும் என்ற குறிக்கோளுடன் களத்தில் ஓடும் பெண்கள் தான் சாதனையாளராக முடியும் என்று நிரூபித்து வருகின்றனா் பார்வையற்ற மாணவிகளான மணிமேகலை, வித்யா, ஜெயலட்சுமி, மேகலா உள்ளிட்டவர்கள்.

அரசு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தற்போது சென்னை மாநில கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துவரும் மணிமேகலை என்ற மாணவிக்கும், குயின்மேரிஸ் கல்லூரி மாணவி வித்யா மற்றும் ஜெயலட்சுமி, ஞானோதயா பவுண்டேசன் மூலம் பயின்று வரும் மேகலா உள்ளிட்டவல்களுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் நேரில் அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி உள்ளது.
சாதனை மகளிராக வேண்டும் என்ற இலட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மணிமேகலையிடம் பேசுகையில்… என்னுடைய சொந்த ஊர் சேலம் அம்மா கூலி வேலை தான் செய்றாங்க என்கூட பிறந்தவங்க மொத்தம் 3 பேர், 8ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்பை என்னுடைய சொந்த ஊரிலேயே படிச்சேன்.

Image
Rashinee album

அதன்பிறகு திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து 12ஆம் வகுப்பு வரை படித்து 1040 மதிப்பெண்கள் எடுத்தேன். தற்போது சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிச்சிகிட்டு இருக்கேன். நான் எதிர்பார்க்கவேயில்ல திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி என்னை போன்ற மாணவிகளை அழைத்து பரிசும் பாராட்டும் வழங்கியது.

என்னால் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்று கூறினார். கண்டிப்பா நான் நல்லா படிச்சு ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசை இருக்கு, என்னுடைய அம்மா நான் நல்லா பாத்துக்கணும் என்று தன்னுடைய எதிர்காலத்தை விவரித்தார்.

அவரைபோன்று பார்வையற்ற மாணவி ஜெயலெட்சுமியிடம் பேசிய போது… எனக்கு சொந்த ஊர் தர்மபுரி பள்ளிபடிப்பைில் பாதியை தர்மபுரியிலும், மீதம் உள்ள படிப்பை திருச்சி பார்வையற்றவர்கள் பள்ளியில் சேர்ந்து படிச்சேன் 12ஆம் வகுப்பில் 1040 மதிப்பெண் எடுத்த எனக்கு சென்னை குயின்மேரிஸ் கல்லூரியில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. கூலி வேலைக்கு செல்லும் குடும்பத்தில் இருந்து தான் நான் வந்தேன், கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அப்பா இறந்தாரு கஷ்டத்தில் உள்ள எங்க குடும்பத்துக்கு இந்த பணம் உதவியா இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் எங்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் , ஆசிரியா்கள், நண்பா்கள், அதிகாரிகள், என எல்லோருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுடைய வாழ்க்கையை வாழவும், வெளிச்சத்தை தரவும் கல்வி என்ற கைத்தடி உள்ளது. நாங்கள் சிகரம் தொட அந்த கைத்தடி போதும் என்று புன்னகை மாறா முகத்துடன் தெரிவித்தனா்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.