என்னை சாதனையாளராக மாற்றியது என் கணவர்

0
D1

ஒவ்வொரு வராமும் பெண் ஆளுமைகளை பற்றி நம்ம திருச்சி வார இதழ் வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் கட்டுமான தொழில் சார்ந்த கெமிக்கல் உற்பத்தி செய்யும் டெக்னி கெமி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சசிகலாவை நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து பேசிய போது….

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு துவங்கபட்டது தான் இந்த நிறுவனம் என்னுடைய கணவர் ஆரம்பித்த நிறுவனம் 5 நிறுவனங்களை வாடிக்கையாளா்களாக கொண்டு துவங்கபட்டது. என்னுடைய கணவர் செராக் என்ற கெமிக்கல் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர். சொந்தமாக கெமிக்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை துவங்கலாம் என்று என்னிடம் கூறிய போது உடனடியாக சரி என்று கூறியதோடு என்னுடைய பங்களிப்பாக தொழிற்சாலையை கட்டுவதற்கு முன்பே நான் முன்னவர் என்ற மேலாளரை என்னுடைய கணவரை தேர்வு செய்து கொடுத்தேன்.

கடந்த 10 வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். ஆனால் எனக்கும் இந்த துறைக்கும் சம்மந்தம் இல்லை. நான் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.சி.யில் 3 வருட கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை படித்தேன். ஆனால் தற்போது கட்டுமான துறையில் உள்ள பாசிடிவ், நெகடிவ் என்று எல்லாவற்றையும் கற்றுகொண்டேன், அதோடு கட்டுமான வரைபடம் வரையும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். 3 பொறியாளர்களை வைத்து நான் கட்டுமான பணிகளை செய்து வருகிறேன்.

D2

எங்களுடைய தொழிற்சாலையிலும், அலுவலகத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 25 பெண்களை பணியமர்த்தி உள்ளேன். நாங்கள் சொந்தமாக உற்பத்தி செய்யும் கெமிக்கல்களை தமிழகம் முழுவதும் உள்ள 4 என்ஜினியர்ஸ், கட்டிடகலைஞா்கள், என மொத்தம் 800 வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இந்த வாடிக்கையாளா்களை உருவாக்க எனக்கு கிடைத்த முதல் அனுபவம் தான், இந்த துறைக்கு வந்த புதுசுல மார்கெட்டிங்க பத்தி எதுவுமே தெரியாம ஒரு பெரிய இஞ்சினயரிடம் எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து அதிகளவில் பேசியும் அவர் எங்களுடைய பொருளை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். பலமுறை எங்களுடைய மார்கெட் ஊழியா்களை அனுப்பியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை எங்களுடைய பொருள் தரம் இல்லாதது என்ற கருத்துடனே இருந்தார்.

ஆனால் நான் மீண்டும் முயற்சி செய்து எங்கள் நிறுவன கெமிக்கலை பயன்படுத்தி பாக்க சொன்னேன் அதன் பிறகு அவரிடம் இருந்து 100 மூட்டை ஆர்டர் எடுத்தது பெரிய சந்தோஷத்தை தந்தது. அது தான் என்னுடைய முதல் வெற்றி அதனை தொடர்ந்து பல வெற்றிகள் தொடர்ந்து வந்தது. நான் வீட்டில் அலுவலகம் தொடர்பாக எதை பற்றியும் பேசவே மாட்டேன் ஆனால் என்னுடைய எண்ணம் முழுவதும் இதைபற்றியே இருக்கும்.

ஒரு பக்கம் நான் மகிழ்ச்சி அடைந்த நிகழ்ச்சி என்றால் மற்றொரு புறம் என்னை பாதித்த விஷயம் என்னிடம் 10 வரடம் நன்றாக உழைத்து கொண்டிருந்த ஊழியர் தீடீரென ஆயிரம் ரூபாய் அதிகமாக ஊதியம் கிடைக்கும் இடத்திற்க்கு சென்றுவிட்டார். புதிதாக வரும் ஊழியருக்கு நாம் பல விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் அதை காரணம் காட்டி வெளியேறியது என்னை பாதித்தது.

கணவரை பற்றி கூறுகையில்…
கல்லூரி படிக்கும் போது நாங்கள் ஆட்டோவில் சென்று வருவோம் என்னுடைய அப்பா அப்படி தான் என்னை வளர்த்தார். ஆனால் இந்த துறையில் நான் பல மனிதர்களை சந்தித்து பேசுகிறேன். வெளி உலகம் என்ன என்று என்னுடைய கணவர் சொல்லி கொடுத்துள்ளார்.

என்னுடைய பின்னணி என்னுடைய கணவர் தான் நான் எப்போதும் அவரை சார்ந்து தான் இருப்பேன், அவர் சொல்வதை நான் முழுமையாக கேட்பேன். நாங்கள் ஒரே துறையில் இருப்பதால் பணம் தொடர்பான எல்லா பரிமாற்றங்களையம் என்னுடைய கணவர் பார்த்து கொள்வார். ஆனால் அலுவலகத்தில் நிர்வாகம் முழுவதும் என்னுடைய கண்காணிப்பில் இருக்கும். நான் என் கணவரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்.

N2

என்னுடைய பேச்சு, உடை, எல்லாமே என்னுடைய கணவருடைய முழு முயற்சி தான். நான் இப்ப இந்த இடத்தில இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய கணவர் மட்டும் தான், அவர் எனக்கான இடத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அதோடு என்னை செதுக்கினார் அது தான் நான் இந்த அளவிற்க்கு வளர்ந்ததற்க்கு காரணம் என்று புன்னகை மாறாமல் கூறினார். என்னுடைய கணவர் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் விருது பெற்றுள்ளார்.

நிர்வாக திறன்
என்னிடம் வேலை கேட்டு வருபவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை பயிற்சி மட்டும் தான் கொடுப்பேன் அதில் இறுதிவரை நின்று களத்தில் பணியாற்ற தயாரானால் மட்டும் தான் நான் சம்பளம் அவர்களுக்கு நிர்ணயிப்பேன். நான் யாரையும் நிராகரிக்க மாட்டேன் உண்மையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் அவர்களுக்கு நான் பயிற்சி கொடுப்பேன்.

அப்படி பணிக்கு சேர்ந்தவர்கள் தான் இன்று வரை இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

என்னடைய எதிர்கால திட்டம் பெரிய அளவில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு எங்களுடைய கெமிக்கல்ஸ் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கு உள்ளது. தற்போது நாங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அதிகளவில் கிளைகள் துவங்க வேண்டும். என்னுடைய காலத்திலேயே நான் நினைத்த அனைத்தையும் கடவுள் ஆசிர்வாதத்தோடு செய்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த துறையில் என்னுடைய பணியை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கைகளில் இருந்து அதிக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த விருது எனக்கு கிடைத்துள்ளது.

பெண்களுக்கு சொல்ல விரும்புவது…
கடந்த காலங்களை விட தற்போது பெண்கள் அதிகளவில் தாங்களும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.

என்னால் முடிந்த அளவிற்கு நான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆண்களுக்கு நிகராக உழைக்க வேண்டும் என்ற ஆவர்வமும் பெண்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

தற்போது ஆண்கள் பட்டபடிப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்பு தேடி வரும்போதே நீங்கள் என்ன சம்பளம் கொடுப்பிங்க, என்ன மாதிரியான வேலை என்று கேள்வி கேட்டுகிட்டு தான் உள்ளே வராங்க 100 சதவீத உழைப்பை கொடுத்தாலே போதும் வெற்றி நமக்கு கிடைக்கும். இப்ப உலகம் கைக்குள்ள வரும் அளவிற்க்கு செல்போன் வந்துவிட்டது. இதை எல்லாம் தாண்டி வெற்றி பெருவது ஒருசிலர் தான்.

பொழுதுபோக்கு…
என்னுடைய இந்த பயணத்தில் நான் ஒரு 5 நாட்களுக்கு பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு விடுமுறைக்கு வெளியே செல்ல வேண்டும் என்று பலமுறை நினைத்ததுள்ளேன் ஆனால் இதுவரை என்னால் அதை செய்ய முடியவில்லை. நான் டிவி பார்க்க மாட்டேன் அரசியல் குறித்த கில சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் மட்டும் செய்தியை பார்ப்பேன் மற்றப்படி எனக்கு பொழுதுபோக்கு, உலகம் எல்லாம் இந்த நிறுவனம் தான் என்று தெரிவித்தார்.

N3

Leave A Reply

Your email address will not be published.