வலம்புரி சங்கு தோன்றிய வரலாறு

அமிர்தம் பருகுவதற்காக தேவர்களும்,அசுரா்களும், பாற்கடலை கடைந்த போது பதானறு வகை தெய்வீகப்பொருட்கள் தோன்றின, அவற்றில் வலம்புரி சங்கும், திருமகளும் வந்தார்கள். அவர்களை மகாவிஷ்ணு இடக்கையில் சங்கையும், வலக்கையில் தேவியையும் ஏற்று கொண்டார்.
பாஞ்ச சன்னியத்தின் கதை
சென்னையிலிருந்து டெல்லி நோக்கி செல்லும் வழியில் உள்ள போபாலில் இருந்து மேற்கே 20கி.மீ தூரத்தில் உள்ளது. உஜ்ஜைனி, மகாபாரத யுத்தம் நடந்த காலம் கி.மு.3137என்பது ஆய்வாளர்கள் கருத்து.
உஜ்ஜைனியில் தான் சாந்திபனி முனிவா் ஆசிரமம் இருந்தது. இங்கு தான் கிருஷ்ணன், பலராமன், குசேலன், ஆகியோர் பாடம் படித்தனர். சில ஆண்டுகள் கழித்து பயிற்சி முடித்து குருவை வணங்கி குரு தட்சணயாக என்ன தரவேண்டும்? என்று கிருஷ்ணர் கேட்க வீட்டின் உள்ளே இருந்த முனிவரின் மனைவி விசும்பியபடி அழுகையை அடக்க முயற்சித்தாள்.
உடனே கிருஷ்ணா குரு நாதரே ஏன் அன்னையார் அழுகின்றார்கள்? நாங்கள் தான் தங்களுக்கு வேண்டிய குருதட்சணையை தர தயாராக உள்ளோமே என்றார். அப்படியானால் எங்களது ஒரே மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என்றார்.


குருநாதர் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இப்படி ஒரு சோக நிலையா? எல்லாவற்றையும் உள்ளத்தில் அடங்கிய நிலையிலா எங்களுக்கு வில்வித்தை கற்று தந்தீா்கள் சுவாமி? என்ற கிருஷ்ணா் பலராமனையும் அழைத்து கொண்டு ஆவேசத்துடன் உங்கள் மகனோடு வருகிறோம் என்று சொல்லிவிட்டு கடலினுள் சென்று கடல்காக்கும் அசுரனைச் சந்தித்து விபரம் கேட்டு, அந்த கோட்டையை அடைந்து பஞ்ஜசனனுடன் 16 நாட்கள் இடைவிடாமல் போரிட்டனா்.

முடிவில் அவனை கொன்று சாம்பலாகினார் கிருஷ்ணா். சிரஞ்சீவி தன்மை கொண்ட சாந்திபனின் மகனை அவர்களிடம் குருதட்சணையாக ஒப்படைத்து மகிழ்ந்தனர்.
பஞ்சனன் சா்பலாக உருண்டு திரண்டு சங்கு வடிவம் பெற்றான்.
சங்கு பூஜை பற்றிய எந்தவிதமான கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க தயாராக உள்ளார். தொடர்புக்கு 7639235239, 9345177771
