இரவல் வாங்கி பதக்கம் வென்றேன்

0
D1

சாதிக்க இனம்,குலம் தேவையில்லலை திறமை இருந்தால் போதும் மீனவ சமூகத்தை சோ்ந்த துப்பாகி வீராங்கணை கேத்ரின் எஸ்தர்(20) திருச்சி தூய வளனார் கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு இயற்பியல் துறை படித்து வருகின்றார்.

இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் இவர் தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார். வறுமைகோட்டின் கீழ் உள்ள மீனவ குடும்பம் என்பதால் உழைப்பிற்க்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம். அவரை நம்மதிருச்சி இதழ் சார்பில் சந்தித்து பேசிய போது என்னுடைய தந்தை என்னை படிக்கை வைக்க மிகவும் கடினபட்டு உழைத்து வருகிறார்.

அவருக்கு நான் எதாவது செய்ய வேண்டும். எனக்கு சிறுவயதில் இருந்தே துப்பாக்கி சுடுவது என்றால் மிகவும் பிடிக்கும், திரைப்படங்களில் பார்த்த துப்பாகிகளை தாண்டி நிஜத்தில் துப்பாக்கி சுடுவது என்பது சற்று கஷ்டம் தான். துப்பாக்கி தூக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன் கல்லூரியில் 2014-இல் வந்து சோ்ந்தபோதே தேசிய மாணவர் படையில் இணைந்தேன். அதில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் கலந்துக்கொண்டு தேர்ச்சிப்பெற்று மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்டேன்.

D2

முதல்போட்டியிலேயே தோல்வியை சந்தித்தேன். அப்போது தான் உணர்ந்தேன் துப்பாக்கி சுடுவது எளிதல்ல என்று, அதோடு முதல் முயற்சி தோல்வியை தந்தாலும், அடுத்த முயற்சி எனக்கு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தேன். அம்முயற்சின் வெற்றி தான். 2015 –இல் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 8 பதக்கங்களை வென்றேன்.

அதில் 3-சில்வர் ,2- ப்ரான்சும் ,3 – கோல்டு பதக்கங்களையும் வென்றேன். அடுத்து 2016- இல் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் 3- தங்க பதக்கமும்,1- பிரான்ஸ்யும் வென்றேன். இந்த பதக்கங்களை வென்ற எனக்கு சொந்தமாக துப்பாக்கி வாங்க போதிய வசதி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்ள செல்லும்போது ஒவ்வொருதரிடமும் துப்பாக்கி கடன் வாங்கியே போட்டியில் கலந்துக்கொண்டு பரிசுகள் வென்றேன்.

N2

ஒரு துப்பாக்கி வாங்க வேண்டும் என்றால் எனக்கு 4 லட்சங்கள் தேவைப்படும். ஆனால் அவ்வளவு தொகை என்பது என் குடும்ப பொருளாதாரத்திற்கு மிகப்பெரியத் தொகை என் வெற்றிக்கு முன்னே என் வறுமை தான் முன்னே செல்கின்றது. நான் ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்தும் துப்பாக்கிகள் வெவ்வேறு வகையை சார்ந்த துப்பாக்கிகள் என்பதால் அதன்மூலம் எனக்கு கைமூட்டுகளில் அதிக அளவுக்கு அடிப்பட்டுள்ளது .

அதன் பிறகு எனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் வந்துள்ளது . திருச்சியில் முதன் முதலில் ஆம் சுவிட்ச் என்னும் புதியரக துப்பாக்கியை வைத்து போட்டியில் பங்கேற்ற முதல் பெண் வீராங்கனை நான் தான், இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எனது திறமையை வெளிக்கொண்டுவர திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரி தேசிய மாணவர் படை இயக்குனர் திருமதி .விஜி எனக்கு சரியான வழிகாட்டியாக இருந்தார்.

அதேபோன்று எனது குரு புதுக்கோட்டையை சேர்ந்த சிறந்த துப்பாக்கிசுடும் வீரா் திரு. பிரிதிவிராஜ் தொண்டைமான் எனக்கு சரியான பயிற்சியாளராக இருந்து எனக்கு துப்பாக்கி அளித்து உதவி செய்து வருகிறார்கள். என்னுடைய போட்டிக்கு ராயல் புதுக்கோட்டை துப்பாக்கி சங்கம் மற்றும் என் பெற்றோர்கள் எனது உறவினர்கள் பெரும் பக்க பலமாய் இருக்கின்றனர் .

அதுமட்டுமல்லாமல் தற்போது பயின்றுவரும் தூய வளனார் கல்லூரி பேராசிரியர் லூய்ஸ் அவர்கள் என்னை ஊக்கப்டுத்தி வருகிறார்.
ஜா .கேத்ரின் எஸ்தர் (8870781609)

– ஜெ.ஜான்

N3

Leave A Reply

Your email address will not be published.