பச்சைமலை குழந்தைகளின் கல்வி ஹீரோ… மாணிக்கம்.

0
full

திருச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், இன்று அடிப்படை வசதிகளுக்கான தேவை உள்ள பகுதியாகவும் இருப்பது துறையூரை அடுத்த பச்சைமலை பகுதி தான், இங்கு மலைவாழ் மக்கள், மற்றும் பிற்படுத்தபட்ட மக்கள் அதிகம் வசிப்பதால் தோ்தலில் கூட தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதியில் உள்ள புத்தூர் தான் மாற்று திறனாளியான மாணிக்கத்தின் சொந்தஊா், பிறக்கும் போதே இரண்டு கால்களும் ஊனமாக இருந்தது. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்து முடித்த அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் போதிய வசதி இல்லை. இருப்பினும் தன்னுடைய முயற்சியால் திருச்சியில் தங்கி இ.எஸ்.எஸ்.எல்.வி வரை படித்துள்ளார்.

இனி மாணிக்கம் நம்ம திருச்சி இதழுக்காக

poster

இ.எஸ்.எஸ்.எல்.சி படிப்புடன் சொந்த கிராமத்திற்க்கு திரும்பிய நான் என்னுடைய கஷ்டத்தை படிக்கும் மாணவா்களுக்கு சொல்ல வேண்டும். அவா்களை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய அண்ணன் எங்கள் ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். அவருடன் அடிக்கடி பள்ளிக்கு சென்று வந்த எனக்கு பள்ளியில் போதிய ஆசிரியா் இல்லாமல் இருந்ததை தெரிந்து கொண்டேன்.

40 வருடங்களுக்கு முன்பு கல்வி அறிவு என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. பள்ளிகளுக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.

ukr

அதையெல்லாம் தாண்டி நான் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவா்களுக்கு கல்வி கற்று கொடுக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக சம்மத்தித்தார். என்னுடைய ஊரில் உள்ள மாணவா்களுக்கு நான் பாடம் சொல்லி கொடுப்பது எனக்கு மனநிறைவும், ஆர்வமும் இருந்தது. நான் படிக்கும் போது உண்டு உறைவிடபள்ளி இருந்தது.

நான் அதில் தங்கி தான் படித்தேன். ஆனால் பலர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவதில்லை. அதனால் நான் ஒவ்வொரு வீட்டிலும் சென்று பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தேன். என்னுடைய வற்புறுத்தலின் காரணமாகவே பல பெற்றோர்கள் தங்களுடை பிள்ளைகளை அனுப்பி வைத்தனா்.

தற்போது குழந்தைகள் ஆா்முடன் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். இந்த பள்ளியில் என்னுடைய கல்வி பணி 34 ஆண்டுகளை கடந்துவிட்டது.
தமிழ், அறிவியல் பாடங்களை எடுத்து வருகிறேன். ஆரம்பத்தில் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே பாடம் எடுத்து கொண்டிருந்தேன்.

அதன் பின்னா் என்னுடைய வீட்டிலேயே மாணவா்களுக்கு மாலை நேர வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். எங்களுடைய பகுதியில் உள்ள மாணவா்கள் மிகவும் வறுமைகோட்டின் கீழ் வாழ்வதால் அவா்களுக்கு இலவமாக தான் கல்வி கற்று தருகிறேன்.

30 வருடங்களுக்கு முன் பள்ளியில் நான் சோ்ந்த போது ஆரம்பத்தில் அங்குள்ள ஆசிரியா்கள் என்னுடைய கை செலவிற்க்கு என்று 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் கொடுப்பார்கள். அது இன்று கொஞ்சம் அதிகமாகி மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. நான் இலசமாக தான் என்னுடைய மாணவா்களுக்கு கல்வி கற்று கொடுக்க விரும்புகிறேன்.

பச்சைமலை குழந்தைகளின் கல்வி ஹீரோ… மாணிக்கம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.