காணாமல் போன ஏற்றம்

0
1

கவளை ஏற்றம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்தது எல்லாம் மோட்டார், ஆழ்துளை கிணறுகள் தான் ஆனால் கவளை ஏற்றம் என்பது விவசாயத்தின் மிகமுக்கிய பாசன முறையாக இருந்துவந்தது. ஆனால் இன்று அந்த பாசன முறை காணாமல் போனது சற்று வருந்ததக்கது.

50 ஆண்டுகாலத்திற்க்கு முன் இந்த பாசன முறையை விவசாயிகள் பின்பற்றி பல ஏக்கா் நிலங்கள் நீா் பாய்ச்சி உள்ளனா். இந்த முறையால் தண்ணீா் வீணாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிணறுகளில் இருந்து தண்ணீா் இரைக்கும் போதெல்லாம் கிணறுகளில் தண்ணீா் ஊற ஆரம்பிக்கும். இந்த நீா் ஏற்றம் முறை என்பது தற்போது காட்சி பொருளாக உள்ளது. அதோடு விவசாய கிணறுகள் மூடப்பட்டு மழையை நம்பியும், ஆற்றில் திறந்துவிடும் தண்ணீரை நம்பியும் வாழும் மோசமான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் இந்த கவளை ஏற்றம் என்பதே இல்லை. ஆற்றுபாசனம், ஏரிபாசனம், என்று விவசாயிகளும் தங்களுடைய விவசாய முறையை மாற்றி அமைத்துள்ளனா். இந்த முறையில் செலவு என்பது குறைவு மின்சார செலவு மிச்சம், மோட்டார் தேவையில்லை, பம்புசெட் தேவையில்லை.

2


மோட்டார் இயங்க பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் தேவையில்லை. கிளி மரம் தயாரித்து அதனை சருக்கலாக கிணற்றுக்கு அருகில் ஊன்றி தகரத்தினால் ஆன தொட்டி போன்ற அமைப்பின் மூலம் தண்ணீா் இறைத்து ஊற்ற முடியும், இதுக்குறித்து விவசாயி சிவசூரியன் பேசுகையில்… இந்த பாசன முறையை விவசாயிகள் கைவிட்டு பல வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது. இன்று ஒருஏக்கா் நிலத்திற்க்கு அரை மணி நேரத்தில் தண்ணீா் பாய்ச்சிவிட முடியும், ஆனால் நீா் ஏற்றம் முறையில் அரைபொழுது அதற்கே செலவிட வேண்டி இருக்கும், தொழில்நுட்ப வளா்ச்சி சுவிட்சை தட்டினால் தண்ணீா் கொட்டும் நிலைக்கு மாறிவிட்டனா்.

ஆனால் தற்போது அந்த நிலையும் நீடிக்கவில்லை. மழையை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார். இதில் இரண்டு முறை உண்டு ஒன்று கிளி மரம் கட்டி அதில் ஒருவா் ஏறி இறங்கவும், மற்றொருவா் அந்த தொட்டியினை கிணற்றுக்குள் செலுத்து தண்ணீர் எடுக்கும் முறை, மற்றொன்று காளை மாடுகளை கயிற்றுடன் கட்டி முன்னும், பின்னும் நடக்க வைத்து தண்ணீா் இரைக்கும் முறை உண்டு. இந்த நீா் ஏற்றம் இன்றை காலகட்டத்தில் எங்காவது ஒன்று தான் இருக்கும், அப்படியே இருந்தாலும் அது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும். கிணறுகளில் தண்ணீா் இல்லை, தண்ணீா் இருந்தாலும் இந்த ஏற்றம் முறை இல்லை. பாரம்பரிய விவசாய முறைகளில் பல நன்மைகள் இருந்தது. ஆனால் மோட்டார், மின்சாரம், பம்ப் செட், என்று விவசாயத்தில் தொழில்நுட்ப யுக்திகள் மனிதனை முடமாக்கிவிட்டது என்று கூறுகிறார்.

முன்னோர்கள் கூறுவார்கள் கிணற்றில் உள்ள நீரை இரைத்தால் மட்டுமே நீா் ஊரும் என்று ஆனால் இன்று கிணறுகளும் இல்லை, அப்படி இருந்தாலும் அதில் தண்ணீர் இரைக்கபடாமல் விட்டதால் தண்ணீா் ஊருவதும் இல்லை. மொத்ததில் விவசாயத்தில் தொழில்நுட்ப வளா்ச்சியின் பங்கு அதிகமானதால் விவசாயமும் முடங்கியது, விவசாயிகளும் மறைந்து வருகின்றனா்.

தொழில்நுட்பம் தேவை ஆனால் தொழில்நுட்பம் மட்டுமே விவசாயம் அல்ல பாரம்பரியங்களை பின்பற்றுங்கள் என்பது ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நான் வைக்கும் கோரிக்கை என்றார்கள்.

 

3

Leave A Reply

Your email address will not be published.