யார் தவறு-சிறுகதை

திருச்சியில் நடைபெற்ற ‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா’-முதல்பரிசு வென்ற சிறுகதை

0

திருச்சியில் நடைபெற்ற
‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா’
சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு வென்ற சிறுகதை… தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறுகதைகளை வாரவாரம் வெளிவரும்…

மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள்! என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணி பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ போனாப்போகுது, ஆதரவில்லாத பெண்ணாச்சே, நாமளும் ஒதுக்கிட்டா, வாழவழியில்லாமல் தவிச்சு நிப்பியேன்னு யோசனை சொன்னோம்னா ரொம்ப தான் ராங்கு காட்டிக்கிட்டு நிக்கிறியே !
இசையின்பன் கண்ணம்மா கண்கலங்கி நின்று கொண்டு இருந்தாள். திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டது. கண்ட பெண்களிடமெல்லாம் வம்பு செய்து கொண்டு ஊருக்குள் மைனர் என்று பெயா் வாங்கித் திரிந்த தனக்கு கல்யாணம் செய்து குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து கண்ணம்மாவை மனம் முடித்து வைத்தாள் மாதாமாதம் வீட்டுக்கு விலக்கானாளே தவிர விசேடமாக எதுவுமில்லை.

மாமியாருக்கு எப்படி விளக்குவது? அவன்தான் இரவானால் புறமுதுகைப் காமிச்சுகிட்டுப் புரண்டு படுத்துவிடுகிறானே! பிறகு எங்கிருந்து குழந்தை பெத்துக்கிறது? மகன் சிங்கமாம். வெளியில் சொன்னா அசிங்கம்.

வெளியில் டபடப என்று டீசல் புல்லட் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு வந்து மகனிடம்” இந்தாப்பா கனகு ஒம் பொண்டாட்டி நான் சொல்றதைக் கேட்கமாட்டீங்கிறா. ஒன்னு இவளை அறுத்துவிட்டுட்டு வேற ஒருத்தியக் கட்டு. இல்லைன்னா நான் சொல்றபடி கேட்கச் சொல்லு ஆஸ்தியெல்லாம் ஆள்றதுக்கு ஒரு புள்ள வேண்டாமாயா?

இன்று இரவு ஆண்வடனின் அருள் உன் மருமகளுக்குப் பரிபூரணமாகக் கிட்டும் என்று கூறிய சாமியாரின் வாக்கு மாமியாருக்கு இன்னும் நம்பிக்கையைக் கூட்டியது மாமியாருக்கு தங்குவதற்குத் தங்குவதற்கு வேறு பக்கம் இடம் கொடுத்தார்கள்

‘‘மலடியைக் கட்டி வச்சுட்டு வயிறு வீங்கலையான்ன அவ எப்படி பதில் செல்லுவா? நீங்க சொல்றபடி கேட்கலைன்னா பிறகு எதுக்கு அவ இங்க இருக்கணும்?”

கைகால்களை அலம்பிக் கொண்டே கனகு அம்மாவிற்க்கு பதில் சொன்னான். அதே நேரத்தில் பக்கத்து வீட்டு மாமி கண்ணம்மா வீட்டிற்கு வருகிறாள். ஏன்டியம்மா எப்ப பார்த்தாலும் அவளை திட்டிகிட்டே இருக்க. யாரிடம் பிரச்சனை இருக்குள தெரிஞ்சுக்க டாக்டர பார்க்கலாம்ல என்றாள்.

மாமி. கண்ணம்மாவின் அத்தைக்கு கோபம் தலைக்கு ஏறி ” என் மகனுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது” என்று சொல்லி கொண்டே முகத்தை சுழித்தாள். உடனே மாமி கோபப்படாதீங்க அவ பாவம் என்ன பண்ணுவா. பைய மேலயும் தப்பு இருக்கலாமுல? என்றாள் மாமி

இன்றைய நாட்களில் மருத்துவ துறையில் நிறைய டெக்னாலஜி வளா்ந்திருச்சி” செயற்கை கருத்தரிப்பு போன்றவை உண்டு அவளை திட்டாதீங்க கண்ணம்மாவின் அத்தைக்கு மிளகாயை திண்றது போல முகம் சிவந்து கோபத்துடன் மாமியிடம் ” அடுத்தவன் பிள்ள எங்களுக்கு எதுக்கு அப்படி எல்லாம் பிள்ளை பெத்துக்கணும்னு அவசியம் இல்ல”

நீயெல்லாம் அப்படி தான் பிள்ளைய பெத்துகிட்டியா என்று செருப்பை சாணியில் முக்கி அடிச்சது போல கேட்டாள் உடனே மிகுந்த மனவருத்தத்துடன் ஏன்டா இவங்ககிட்டலாம் வச்சுகிட்டோம் என எண்ணினாள் மாமி கொஞ்ச நேரம் எல்லாம் அமைதியா இருந்தாங்க

பின்பு கண்ணம்மா அழுகையுடன் மாமியை பார்த்து வீட்டுக்கு போங்க என்று கூறி தன் அத்தையிடம் கண்ணம்மா ஆத்திரமும் அழுகையுமாக வெடித்துச் சொன்னாள் வாங்க அத்தை சாமியாரைப் பார்த்துவிட்டு வந்துடலாம் இதைத்தாண்டி நானும் இம்புட்டு நேரமா கத்திக்கொண்டு இருக்கேன் கனகு நாங்க போய் சாமியாரைப் பார்த்துவிட்டு
வந்துறோம்பா !”

போய்ட்டு வாங்க….. இதுலையும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கழுதையைக் கழட்டி விட்டுவிட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கட்டிக்கொள்ள வேண்டியது தான் நம்ம பரம்பரையில் ஐந்தாறு பொம்பளையுடன் வாழ்வது எல்லாம் சகஜம்தான் !”

எகத்தாளமாக கண்ணம்மாவை பார்த்தான் ச்சே! என்ன ஆம்பளை இவன்? எப்படி வாய்கூசாமல் இவனால் இப்படி எல்லாம் பேசமுடிகிறது? எப்போதுமே தண்டனை பெண்களுக்குத்தானா? அழுதழுது கண்கள் சிவந்து போயின.

மதுரையிலிருந்து சக்கிமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி கருப்பாயூரணியில் இறங்கினார்கள். பேருந்து நிறுத்தத்திலேயே சாமியாரின் ஆசிரமத்திற்கும் செல்லும் வழிக்கு அம்புக்குறி போட்டிருந்தார்கள்.

மாலை நேரமாக இருந்தாலும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் சாமியாரிடம் தங்கள் பிரச்சனைக்குத் தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருந்தார்கள் அதில் பாதி போ் சாமியாருடைய ஆட்கள் என்பதும், இவா்களுடைய குறைகளைத் தெரிந்துகொண்டு சாமியாருக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள் என்பதும் மீதப் பேருக்குத் தெரியாது.

உள் அறையில் தன்னைத் தரிசிப்பவா்களுக்கு அவா்கள் கொடுக்கும் பொன்னுக்கும் பொருளுக்கும் பதிலாக திருநீறையும், குங்குமத்தையும், பூவையும் கொடுத்து ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார்கள் சுவாமி மாயானந்தா !

food

40 வயதுக்கு மேல் இருந்தாலும் நல்ல பளபளப்பாக இருந்தார். பன்னீரில் குளித்து நல்ல பசு நெய் கலந்த உணவுகளைத் தின்று கொழுத்து போய் ஒரு காளையை போல காட்சியளித்து கொண்டு இருந்தார்.

மாலை மயங்கி இரவு தொடங்கிய நேரம் ! சாமியாருக்கு முன்னால் கண்ணம்மாவும் அவரது மாமியாரும் நின்று கொண்டு இருந்தார்கள். சாமியார் தன்னுடைய வலதுகை விரல்களை மடக்கி நெற்றிக்கு நேராக வைத்து ஏதோ செய்தியை தெரிந்து கொள்வது போல சிறிது நேரம் இருந்துவிட்டு ” இந்த பொண்ணுக்கு குழந்தை பாக்கியமில்லை என்பதற்காக ஆண்டவனின் அருள்நாடி வந்திருக்கிறீா்கள் நான் சொல்வது சரிதானே என்றார் !

மாமியாரும் மருமகளே மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் உறைந்து போய் இருந்தார்கள். சாமிகளுடைய ஞான திருஷ்டியைக்கண்டு பரவசமடைந்து ”சாமி நீங்கதான் இந்த குறையைத் தீா்த்து வைக்கணும் என்று பவ்யமாக வேண்டினார்கள் ” எல்லாம் இறைவனுடைய சித்தம் அவனால் இயக்கப்படும் ஒரு கருவிதானம்மா நான் என்று சொல்லி கொண்டே கண்ணம்மாவின் கையை பிடித்து நாடி பார்த்தார்.

பின் அவளுடைய இமைகளை மேலே தூக்கி கண்களை நன்றாக பார்த்தார். அவளுடைய நாக்கை நீட்டச் சொல்லி பார்த்தார். உடல்வாகை தலையிலிருந்து கால்வரை நோட்டமிட்டவா் இன்னும் கைபடாத கன்னியாகத்தான் உள்ளாள். என்பதைத் தெரிந்து கொண்டார். ( இதுக்கு மட்டும் நல்ல டிரெயினிங் எடுத்துக்குவானுங்க)

” வீட்டுக்கு விலக்காகி எத்தனை நாளம்மா ஆளிற்று?” ” 10 நாள் ஆச்சி சாமி என்றாள் கண்ணம்மா. பத்திகொள்கிற காலம்தான் என்பதை தெரிந்து கொண்ட மாயானந்தா மண்டபத்திற்க்கு பின்னால் உள்ள சிறிய குளத்தில் மூழ்கி வரச்சொன்னார்.
சீடனிடம் ஏதோ ஒரு பொடியை எடுத்து வர சொன்னார். மூழ்கி வந்தவளுக்கு சீடன் கொடுத்த பொடிதூளை பசும்பாலில் கலந்து குடிக்க வைத்தார். மாமியாரிடம் இன்று ஓர் இரவு மட்டும் உன் மருமகள் இந்த உள் அறையில் தூங்கட்டும் என்று அறையை காட்டினார். மாமியார் உள்ளே கூட்டிக்சென்று அங்குள்ள ஒரு கட்டிலில் படுக்க வைத்தார். சீடனிடம் அறையின் கதவை பூட்டி சாவியை மாமியாரிடம் கொடுக்கச் சொன்னார்.

எதுக்கு சாமி என்னிடம் போய் சாவி கொடுக்குறீங்க ? சாமியார்களை நம்பாத காலமாயிற்றே இது. எனவே சாவி உன்னிடம் இருப்பது தான் சரியானது. இன்று இரவு ஆண்டவனின் அருள் உன் மருமகளுக்கு பரிபூரணமாக கிட்டும் என்று கூறிய சாமியாரின் வாக்கு மாமியாருக்கு இன்னும் நம்பிக்கையை கூட்டியது. மாமியாருக்கு தங்குவதற்கு வேறு பக்கம் இடம் கொடுத்தார்கள்.

மகனிடம் சாமியாரின் அருமை பெருமையெல்லாம் செல்பேசியில் அளந்தாள் காலையில் ஊருக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு சீடன் கொடுத்த ஜாதிக்காய் ஊறிய பாலைக்குடித்துவிட்டு என்ன நடக்கும் என்பது பற்றி ஏதும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்க்குள் போனாள்.

இரவு 11 மணி இருக்கும் மாயானந்தா கட்டிலில் தூங்கும் கண்ணம்மாவின் அருகில் இருந்தார். போதை கலந்த பாலை குடித்தவளுக்கு எல்லாம் கனவு போல தோன்றியது. சாமியாரின் உடலில் பூசியிருந்த வாசனைத் திரவியங்களின் மணம் அவளின் நாசித்துவாரங்களில் ஏறி, அவளை கிளா்ச்சியடைய வைத்தது. இதுவரை அவள் எதற்காக ஏங்கி கொண்டு இருந்தாளோ அந்த ஆசைகள் எல்லாம் மாயானந்தாவின் மூலமாக போதை மயக்கத்திலே நிறைவேறியது.

எல்லாம் முடிந்ததும் கிறக்கத்தில் இருந்த கண்ணம்மாவின் ஆடைகளை சரி செய்துவிட்டு தான் வந்த நிலவறைப்பாதை வழியாக தன் அறைக்கு சென்றுவிட்டார். காலையில் கண்விழித்து மாமியார் மருமகள் இருந்த அறையை திறந்தார். கூடவந்த சீடன் மருமகளை குளிக்க வைத்து சாமியாரின் அறைக்கு அழைத்து வர சொன்னான்.

சாமியாரின் அறையெங்கும் ஊதுபத்தி சாம்பிராணி வாசனை குளித்துவிட்டு வந்த கண்ணம்மாவிடம் 10 பொட்டலங்கள் கொடுத்து இதில் உள்ள மருந்தை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்துவா உனக்கு நிச்சயம் பிள்ளை பிறக்கும் என்று சொன்ன மாயானந்தாவிடம் அவளை அறியாமலேயே ஒர நாணத்தோடு பெற்று கொண்டாள். மாமியாருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சாமிக்கு என்ன தட்சணை கொடுக்க வேண்டும் என்று கேட்டாள்.

ஒன்றும் வேண்டாம் எல்லாம் கடவுளுடைய கைவண்ணம். என்று அமைதியாக சொன்னார். அவா் தான் மொத்தமாக மருமகளிடம் இரவில் வாங்கிவிட்டாரே?

ஒன்றரை மாதம் கழித்து திடீரென்று மயக்கமடைந்து கண்ணம்மாவின் கையை பிடித்து நாடி பார்த்து கண்ணம்மா உண்டாகி இருக்கிறாள் என்று பக்கத்து வீட்டு கிழவி கூறினாள்.

பாவம் கனகு மாடுபிடி சண்டையில் ஒரு மாடு தன் கொம்புகளால் அவனைத் தூக்கி வீசி ஓங்கி ஒரு மிதிமிதித்தது குழந்தை பெற்றுக் கொள்ளவே தகுதியில்லாதவனாய் ஆக்கிவிட்டது. என்பதை எப்படி சொல்வான்? என்ன இருந்தாலும் ஆண் பிள்ளையாயிற்றே ஆண்மை பறிபோனதை ஒப்புக்கொள்வானா?

இப்போதெல்லாம் மாமியார் மருமகளைத் தாங்கு தாங்குனு தாங்குறாங்க கண்ணம்மா மகழ்ச்சியுடன் வீட்டை வளைய வளைய வருகின்றாள்
குழந்தை பிறக்கும் காலம் நெருங்கிவிட்டது. கனகு பித்து பிடித்தவன் போல் தாடியுடன் அலைந்து கொண்டு இருந்தான். போதாகுறைக்கு பக்கத்தில் உள்ள டீக்கடையில் எப்போது பார்த்தாலும் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் என்ற பாட்டையே போட்டு கொண்டு இருந்தார்கள்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது கனகுவின் நிலைமை!
மாயானந்தா ஆசிரமத்தில் சாமியார் தியானம் செய்வதற்காக இமயமலை சென்றுவிட்டார். என்று கூறி அவரை நிலவறையில் போட்டு மூடி அவா் கதையை முடித்துவிட்டு கிரானைட் கற்களை பதித்து ஊரை ஏய்த்து இப்பொழுது கார்ப்பரேட் சாமியாராக வலம் வருகிறான் அவரது சீடன் கா்ப்பானந்தா என்ற பெயரில் எவ்வளவு தான் அறிவியல் வளா்ந்தாலும் மருத்துவம் முன்னேறி இருந்தாலும் கடவுள் அருளால் தான் குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கை மக்கள் மனதிலிருந்து விலகாத வரை இந்த மாதிரி சாமியார்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

அ. ஜோன் டெல்பி
முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி.

gif 4

Leave A Reply

Your email address will not be published.