எம்.ஜி.ஆருக்கு புரட்சி தலைவர் என்ற பட்டம் வர காரணமான எம்.எஸ்.மணி

0
gif 1

திருச்சி திராவிட இயக்க வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருச்சியில் எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டம் வழங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் எம்.எஸ்.,,மணி.

தந்தை எம். மாணிக்க தேவர் தாயார் தங்கச்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாக எம்.எஸ்.மணி 1922ம் ஆண்டில் பிறந்தார். பள்ளி படிப்பை மட்டுமே படித்த இவர், நகர மன்ற ஊழியராக வாழ்க்கையை துவங்கியவர்.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கங்கள் மிக தீவிரமாக வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் மணியும் தன்னை இந்த இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு பெரியாரின் தொண்டராகவே பொது வாழ்க்கையில் இறங்கினார்.

gif 3

இந்த இயக்கங்களில் உள்ள தலைவர்களுக்கு இடையே பல்வேறு கருத்து மாற்றங்கள் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாத்துரை தோற்றுவித்தார். அதில் எம்.எஸ்.மணியும் சேர்ந்தார்.

gif 4

முதல் பொதுக்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் பெற்றார். 1950, 1953, 1956 ஆண்டுகளில் நடைபெற்ற தி.மு.க. மாநாடுகளுக்கு பெரிதும் உழைத்தார். திருச்சி மாவட்டச் நகர செயலாளர் பதவியில் 8 ஆண்டுகள் இருந்து கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுப்பட்டார். 1957ம் ஆண்டு திருச்சியில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்த டாக்டர் இ.பி. மதுரத்தை தோற்கடித்துக் தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட பல்வேறு போரட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்

.
அந்த காலத்தில் திருச்சி நகர மக்கள் சினிமாவையும் ,சினிமா கலைஞர்களையும் மிகப் பெரிய அளவில் போற்றி வளர்த்தனர். தேவர் ஹால் நாடக,சினிமா கலைகள் வளர்வதற்கு மிகப் பெரிய களமாக இருந்தது. தேவர்ஹாலில் உறையூர் உலகப்பன் எழுதிய அரும்பு என்கிற நாடகம் நடந்தது. அப்போது சினிமா ரசிகர்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

ரசிகர்கள் மிகப் பெரிய இடத்தை பிடித்திருந்தார். அந்த நாடகத்திற்கு சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆரை அழைத்து புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடுகள் நடந்தன. இந்த ஏற்பாட்டை செய்தவர்களில் எம்.எஸ்.மணியும் ஒருவர். திட்டமிட்ட படி அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆரை சிறப்பு விருந்தினராக அழைத்து புரட்சி நடிகர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பின்னர் புரட்சி நடிகர் என்ற பட்டம்தான் பின்னாளில் புரட்சித் தலைவர் என்று மாறியது.

பல்வேறு தொழிற் சங்களில் தலைவராக இருந்து தொழிலாளர் நலனுக்காகவும் எம்.எஸ்.மணி பாடுப்பட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை பிடித்தது.
தமிழ்நாடு கதர் வாரியத் தலைவராக நியம்பிக்கப்பட்டார். இவர் 9 ஆண்டுகள் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் கதர் விற்பனை உயர்ந்தது.

கதர் உற்பத்தித் தொழிற் வளர்ச்சியில் இவரது ஆர்வத்தையும் செயல்பாட்டையும் பெருந்தலைவர் காமராஜர் பெரிதும் பாராட்டினார். 1980ம் ஆண்டு எம்.எஸ்.மணி காலமானார். இவருக்கு திராவிடமணி என்கிற மகனும், கலைமணி, அன்புமணி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.