இந்தியாவிற்கே வழிகாட்டும் மணப்பாறை மாணவர்கள்

0
Full Page

இந்தியாவின் மிகமுக்கியமான சவாலாக “பொது சுகாதாரம்” உள்ளது என்றார் மகாத்மா காந்தி. இன்றுவரை பெரும்பாலான மக்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி போய் சேரவில்லை என்பதே எதார்த்தம். இன்னமும் சுமார் 638 மில்லியன் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது புள்ளிவிபரங்கள்.

ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் வயிற்றுப் போக்கினால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் இறப்பதாக அதிர்ச்சி தருகிறது இன்னொரு புள்ளிவிபரம். இந்நிலையில் மணப்பாறை பள்ளி மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிந்தித்து தேசிய அளவில் விருது வாங்கியிருக்கிறார்கள்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள ஏ.குரும்பப்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளியில், மொத்தம் 97மாணவர்கள் படிக்கிறார்கள். இங்குள்ள சிறுநீர் கழிப்பிடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால், மாணவர்களுக்கு நோய் பரவியது. தொடர்ந்து மாணவர்கள் அவதி பட்டநிலையில், பள்ளி ஆசிரியர் கேசவன் மற்றும் மாணவர்கள் இணைந்து சிறுநீர் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்து, பெயின்ட் அடித்துச் சரி செய்ய ஆரமித்தார்கள்.

Half page

அடுத்து குறைந்த செலவில் அதை மேம்படுத்த திட்டமிட்டார்கள், உடனே பழைய, 20லிட்டர் வாட்டர் கேன்களை வாங்கி, அதை மாணவர்களே, பேசின்கள் போல் வெட்டி அதை கழிவறைக்கு ஏற்றவாறு மாதிரி மாற்றி, அதில் சிறுநீர் வெளியே செல்லும் குழாய்களும் பொருத்தினர். வெறும் 600ரூபாய் செலவில் நவீன சுகாதாரமான கழிப்பறையாகப் பள்ளிக் கழிவறை மாறியது. இப்போது இந்த மாணவர்கள், தங்கள் பள்ளியை போல் மற்றபள்ளிகளை மாற்றவும் முயற்சியை எடுத்துவருகிறார்கள்.

மாணவர்களின் கண்டுபிடிப்பை ‘டிசைன் பார் சேஞ்ச்’ எனும் குழந்தைகளுக்கான உலக அமைப்பு விருது வழங்கி கவுரபடுத்தியுள்ளது.
மாற்றம் மாணவர்களிடம் இருந்து உருவாகவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்திய மணப்பாறை மாணவர்களை நம்ம திருச்சி இதழ் பாராட்டுகிறது.

-ஸ்ரீனிவாஸ்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.