ஸ்ரீரங்கம் சென்டிமெண்ட்

0
Business trichy

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 1977க்கு முன்னாள் மொட்டைக் கோபுரமாக இருந்தது. அப்போதெல்லாம் ராத்திரி வேளையில் கோயிலை பூட்டுவார்கள். ராஜகோபுரத்திற்கும் இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டால் கூட இரண்டு அரசுக்கும் ஆபத்து என்பது ஐதீகம். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அகோபில மடத்தின் ஜீயரின் ஆலோசனையை கேட்டு 13 நிலைக்கல்லை புனரமைக்கவும், மொட்டை கோபுரத்தை ராஜகோபுரமாக கட்டுவதற்கு உத்தரவிட்டார்.

இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இதற்கான பணிகளை செய்து முடித்தார். எப்போது ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டதோ அதிலிருந்துதான் இலங்கையில் போர் தீவிரம் அடைந்தது.25.3.87ல் ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது.

web designer

அந்தவிழாவில் எம்.ஜி.ஆரும், இந்திய குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் கலந்துகொண்டார்கள். எம்.ஜி.ஆர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலந்துகொண்ட இந்த விழாதான் கடைசிவிழா, இந்நிலையில் கடந்த ஆட்சியில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிகளை துவக்கி வைத்தார்.

loan point

அவரது போறாதகாலம் ரெங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் முடிவதற்குள் சிறைக்கு சென்றார். அடுத்து கடந்த 2015 செம்டம்பர் 8ந்தேதி முதல்கட்டமாகவும், அடுத்து நவம்பர் 18-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிசேஷகம் நடந்து முடிந்து ஒருவருடம் நிறைவு பெறுவதற்குள் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, அடுத்த சில வாரங்களில் மரணமடைந்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.