திருச்சி கிரிக்கெட்டின் தந்தை-ரெத்தினவேல் தேவர்

திருச்சியின் அடையாளங்கள் - 5

0
Business trichy

1933-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சிக்கு வருகை புரிந்தார். அவருக்கு திருச்சி நகர்மன்றத்தின் சார்பாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் காந்திக்கு வரவேற்பு கொடுப்பதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், அப்போது, திருச்சி நகரம் முழுக்க, தண்ணீர் பஞ்சம் இருந்தது, குடிதண்ணீருக்கே மக்கள் சிரமப்பட்டார்கள்.

மக்களின் நலனிற்காக சொந்தப்பணம் ரூபாய். 40 ஆயிரத்தை செலவிட்டு காவேரியில் ஆறுகிணறுகளை வெட்டிய பி. ரெத்தினவேல் தேவருக்கு அரசாங்கம் கொடுத்த பரிசுதான் நகரசபை கலைப்பு.
இந்த கிணறுகள் வெட்டுவதற்காக தனது வக்கீல் ராமசாமி ஐயரிடம் வாங்கியக்கடனுக்கு தனக்கு சொந்தமான சவுக்குத்தோப்பை விற்று தீர்த்தார்.

loan point

இன்று திருச்சி மக்கள் குடித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் தேவர் வெட்டிய கிணறுகளிலிருந்து தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவர் தாய் சொல்லை தட்டாதவர். மிகப் பெரிய தலைவராக ஆன போதும் தனது அன்றாட செலவுக்கு தேவையான பணத்தை தாயிடம் கேட்டு தான் பெற்றுக்கொள்வார்.

nammalvar

திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் உள்ளிட்ட அடையாளங்களில் ‘தேவர் ஹாலும்’ ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம். எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ஜெயலலிதா, என பல சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சிகள் நடத்திய அரங்கம் இது.

இப்போது புதுப்பிக்கப்பட்ட பின்பும் அரசியல் நிகழ்வுகள்,பாராட்டுவிழாக்கள் என தொடர்ந்து நடக்கிறது. இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த இடமான தேவர் ஹால் ரத்தினவேல் தேவர் எனும் பெயரை சுமந்து நிற்கிறது.

உறையூரில் வசித்த இவர், அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அரசியலில் கொடிகட்டி பறந்தவர். திருச்சி முனிசிபாலிடி தலைவராக இருந்தார்.

அநீதிக்குத் தலைவணங்காத இவர், இதனாலேயே பல நெருக்கடிகளைச் சந்தித்தார். காந்தி துவக்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்தபோது, அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் சிறை அதிகாரி பரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். அப்படி நீட்டினால், அதிகாரி விசாரிப்பார்.

ஒருமுறை ராஜாஜி, தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி, ராஜாஜியின் கையைத் தனது கைத்தடியால் தட்டிவிட்டதுடன், அவரை கேவலமாகவும் பேசிவிட, இதைபார்த்து கோபமடைந்த தேவர், அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றார்.

web designer

சிறையில் வெளியே வந்த சில வருடங்களில் ராஜாஜி சென்னை மாகாண முதல்வரானார். அதன்பிறகு திருச்சி வந்த ராஜாஜி, பி.ஆர்.தேவர் வீட்டில்தான் தங்கினார். அங்குதான் அதிகாரிகள் பலர் முதல்வரான ராஜாஜியை சந்தித்தனர். சிறையில் ராஜாஜியை அவமதித்த வெள்ளைக்கார அதிகாரியும் வந்திருந்தார்.

அவரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாத ராஜாஜி, சிறை சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றை செய்ய சொன்னாராம். சிறையில் அந்த அதிகாரியை பி.ஆர்.தேவர் அடிக்கப் பாய்ந்ததைவிட வலியாக இருந்தது என அந்த ஆங்கில அதிகாரி புத்தகம் எழுதியுள்ளார். பி.ஆர் தேவர் இந்திய விடுதலைக்காக பலமுறை சிறை சென்றவர்.

திருச்சி நகராட்சித் தலைவராக 5முறையும், 2 முறை சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ, திருச்சி ஜில்லா போர்டு தலைவர், டவுன்ஹால் கமிட்டித்தலைவர், அர்பன் கூட்டுறவு சங்கத்தலைவர், நகரசபை பொழுதுபோக்குத் சங்கத்தலைவர். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டித்தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் செனட் உறுப்பினர்,

தேசியக்கல்லூரி ஆட்சிமன்றக்குழு தலைவர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைத்தலைவர், திருச்சி யுனைடெட் கிரிக்கெட் கிளப், யூனியன் கிளப், ஶ்ரீலங்கா தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றின் நிறுவனத்தலைவர். எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் பி.ஆர். தேவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1931லேயே ஒரு கிரிக்கெட் கிளப்பை ஆரம்பித்தார்.

அதுதான் திருச்சியின் முதல் கிரிக்கெட் சங்கம். பலவெளிநாடுகளுக்கு திருச்சி கிரிக்கெட் கிளப் வீரர்களை சொந்த செலவில் அழைத்துச் சென்றார்.

1948-ம் ஆண்டு ஜுன் மாதம் சிலோனில் உள்ள ‘தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெடிக்கிளப் “அழைப்பின் பேரில் திருச்சி கிரிக்கெட் வீரர்களை பி.ஆர். தேவர் அழைத்துச்சென்றார். அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டின் முடிவில் சிலோன் கிரிக்கெட் கிளப்பிற்கு நிதி திரட்டித்தருவதாக தேவர் வாக்களித்தார். அந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.

அவரின் உடல்நிலை மிக மோசமாக சர்.பி.டி.ராஜா, சண்முகம் செட்டியார் ஆகியோர் உதவியுடன் விமானத்தின் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10.6.1948-ல் மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு திருச்சி நகரமே சோகத்தில் ழூழ்கியது. இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு 10 மாதங்களே உயிரோடு இருந்தார்.

தேவர் இறந்தபிறகு 2.10.1949ல் திருச்சி யுனைடெட் கிரிக்கெட் கிளப், வெளியிட்ட அறிக்கையில், திருச்சியில் திறமையான, தன்னம்பிக்கையுடன் தனக்கு நிகராக யாருமில்லாத அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த மனிதர் இருந்தார்.

பார்வைக்கு எலும்புக்கூடு போல இந்தாலும் மற்றவர்கள் அவரிடம் பயப்படும் அளவுக்கே அவரின் குணாதிசயங்கள் இருந்தது. அதற்கு காரணம் அவருடைய களங்கமில்லாத பொது வாழ்க்கைதான் காரணம் என்றது அந்த அறிக்கை. நிர்வாகத்தில் நேர்மை தேவருக்கு நிகர் தேவரே என புகழ்ந்தார்கள்.

இவ்வளவு பெரிய முக்கியமான ஆளுமையை பதிவு செய்வதில் நம்ம திருச்சி பெருமை படுகிறது.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.