வேலைக்கு வெளியே செல்ல அனுமதிக்காததால் கைகொடுத்த தேனி வளர்ப்பு

0
Business trichy

ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று தொழில் முன்னேற்றத்தில் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். அதிலும் விவசாயம், இயற்கை உணவு பொருள் உற்பத்தி, ஆடை தயாரிப்புகள் என்று தங்களுடைய பங்களிப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி அவர்களும் சிறந்த தொழில் முனைவோர்களாக சமூகத்தில் இடம்பெற்று வருகின்றனர்.

அப்படிபட்ட தொழில் முனைவோர்களில் திருச்சி ரங்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஜானகி இளங்கலை கணித துறையில் படித்துவிட்டு வேலைக்கு வெளியே செல்ல விரும்பிய நிலையில் பெற்றோர்கள் வெளியே பணிக்கு செல்ல அனுமதிக்காததால் தனக்கு சொந்தமான நிலத்தை கொண்டு சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்து முதல்கட்டமாக தேனீ வளர்ப்பு பற்றி அறிந்து கொண்டு ஆயிரம் ரூபாயை முதலீடாக வைத்து சிறிய அளவில் தேனீ வளர்ப்பு பெட்டியையும், தேனீக்களையும் தொழிலை துவங்கியுள்ளார்.

முதல் முயற்சியில் கனிசமான வருமானம் ஈட்டபட்டது. நாளுக்கு நாள் கடின உழைப்பு அவருக்கு கைகொடுத்தது. தேனி வளர்ப்பு பற்றி ஜானகி கூறுகையில் தேனீக்கள் வளர்வதற்க்கு ஏற்ற சூழ்நிலை தேவை. அருகாமையில் இயற்கையான சூழ்நிலை தேவை. தேனீக்கள் பூக்களை சென்று வெகுதூரம் செல்லாமல் அருகாமையில் அதற்கான கட்டமைப்பு இருந்தால் தேனீக்கள் நெடுந்தூரம் பயணித்து செல்லாமல் தடுக்கலாம் என்று கூறுகிறார். மாதத்திற்க்கு 1.5 லிட்டர் தேன் எடுக்க முடியும்.

loan point
web designer

மலைகாலங்கள் போக ஜனவரியில் இருந்து 3 மாதங்களுக்கு அதிகபடியான தேனீக்களை உற்பத்தி செய்யும். வருடத்திற்க்கு ஒருமுறை ராணி தேனீயை மாற்ற வேண்டும். உற்பத்தி செய்யப்படும் தேன் கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேனீக்களில் பல வகை உண்டு மலைத்தேனீ, அடுக்குத்தேனி (இந்தியதேனி), கொசுத்தேனீ உள்ளிட்டவைகள் உள்ளன.

nammalvar

அதில் அடுக்கு தேனீக்கள் மட்டுமே அனைவராலும் வளர்க்கப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன்கள் விவசாய கண்காட்சிகள், சுய உதவிகுழுக்கள் நடத்தும் கண்காட்சி போன்றவற்றின் மூலம் விற்பனை செய்வதோடு, பல மருத்துவர்களும் மருத்துவ பயன்பாட்டிற்காக வாங்கி செல்கின்றனர்.

ஜானகி -9788546688

IAS academy

Leave A Reply

Your email address will not be published.