தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு…

திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்த வின்சென்ட் உருவாக்கியது

0
1 full

1905 இல் திருச்சி இரயில்வேயில் வேலை பார்த்து வந்த ‘சுவாமிக்கண்ணு வின்சென்ட்’ என்பவர், ‘எடிசன் சினிமாட்டோகிராப்’ என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது.

‘சுவாமிக்கண்ணு வின்சென்ட்’ பல ஊர்களுக்குச் சென்று ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த ‘ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.

இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை அமைத்து, ‘வள்ளி திருமணம்’ போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.