பெட்ரோலுக்கு பதில் புங்கை…

சபாஷ் திருச்சி ஸ்டூடண்ஸ்

0

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக புங்கை எண்ணெய்யை பயன்படுத்தி இயங்கும் ஜென்ரேட்டரை திருச்சி மாணவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கையும், தொழிற்சாலைகள், இயந்திரங்கள் என்று தினந்தோறும் பல லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக ஆராய்ச்சியாளர்கள் எரிவாயுவிற்கு என்று பல புதிய ஆராய்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

இப்படியான முயற்சிகளுக்கு மத்தியில் திருச்சி சிவானி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒரு புதிய ஜென்ரேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களான சகாயராஜ், பிரேம்குமார், ராமர், தமிழழகன் உள்ளிட்டோர் இணைந்து புங்கை ஆயிலை பயன்படுத்தி இயங்கும் ஒரு ஜென்ரேட்டரை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாணவர்கள், கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த பொழுதே டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக ஒரு புதிய எரிவாயுவை கண்டுபிடித்து, அதன் மூலம் இயந்திரங்களை இயக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து. தொடர்ந்து பல முயற்சிகளை செய்து புங்கை ஆயிலை எரிவாயுவாக பயன்படுத்தலாம் என்கிற இந்த இஞ்சினை கண்டுபிடித்து. அதனை ஆட்டோ மொபைல்ஸ், இருசக்கர வாகனங்கள், உள்ளிட்டவற்றில் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்ததில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில் பழைய டீசல் ஜென்ரேட்டர் மோட்டரை விலைக்கு வாங்கி அவற்றி தேவையான புதிய உதிரி பாகங்களை பொருத்தி அதில் புங்கை ஆயிலை எரிபொருளாக பயன்படுத்தியதில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவற்றின் செயலை அதிகரிக்க தேவையான அனைத்து பணிகளை மேற்கொண்டு புங்கை ஆயிலை பயன்படுத்தி இயங்கும் ஒரு முழுமையான ஜென்ரேட்டரை கண்டுபிடித்தோம்.

இந்த ஜென்ரேட்டரில் பயன்படுத்தும் புங்கை ஆயில் 1 லிட்டர் எண்ணெய் 15 ரூபாய் மட்டுமே. ஜென்ரேட்டரின் குதிரை திறன் 10கிலோவாட், மற்ற டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை பயன்படுத்தினால் அரை மணி நேரம் ஓடும் ஜென்ரேட்டர், புங்கை ஆயிலை பயன்படுத்தினால் 1 மணி நேரம் அதிகரிக்கும். குறைந்த செலவு உடைய இந்த ஜென்ரேட்டர் மின்சாரத்தை சேமிக்கவும் உதவும், இதை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றார்கள் நம்பிக்கையுடன்.

food

ஒரு புதிய ஜென்ரேட்டரை தயாரிக்க 30ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். அதேபோன்று பழைய ஜென்ரேட்டர்களில் இந்த புங்கை ஆயிலை பயன்படுத்தும் வகையில் மாற்ற செய்ய வேண்டியிருந்தால் 10ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.

மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் புங்கை மரங்களை வளர்த்து அதில் காய்க்கும் கொட்டைகளை அறைத்து இதை நாம் பயன்படுத்தி கொள்ளலாம் இதனால் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், மின்சாரத்தின் தேவை குறையும் என்றார்கள்.

மேலும் இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால் ஜென்ரேட்டரில் இருந்து வெளிவரும் புகையானது உடலுக்கு நன்மை பயக்கும், இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாக கோளாருகள் நீங்கும் என்றார்கள்.

டீசல், பெட்ரோலை பயன்படுத்தும் போது வெளிவரும் புகை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆனால் இந்த புங்கை எண்ணெயிலிருந்து வரும் புகை உடலுக்கு ஆரோக்கியம் வழங்குவதோடு, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உதவும்.

இனி வரும் காலங்களில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை அமைக்கவும், மனிதர்களுக்கு குறைந்த செலவில் எரிபொருள் பயன்படவும் இந்த புதிய முயற்சி வெற்றியை தந்துள்ளது. ஆனால் இதோடு நிறுத்தி விடாமல் மற்ற இயந்திரங்களிலும் இந்த எண்ணெய்யை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் அதிலும் வெற்றி பெறுவோம் என்றார்கள் .

தொடர்புக்கு : பிரான்க்லின் 9698468222, ராமர் 8220883511, பிரேம் குமார் 7418218578

gif 4

Leave A Reply

Your email address will not be published.