ஊருக்கு வழிகாட்டும் திருச்சி

கேப்சூல் விவசாயத்தில் சாதிக்கும் இளைஞர்

0
Full Page

வெளிநாடுகளில் உள்ள முறையை அப்படியே உள்வாங்கி, தண்ணீரையும், நேரத்தை சேமிக்கும் புதிய விவசாய முறையை தொடர்ந்து செய்துவருகிறார் பெருகமணி பட்டதாரி இளைஞரான வெங்கடேஷ்.
திருச்சி, தஞ்சை உள்ளடக்கிய காவிரி டெல்டா மாவட்டங்களில், காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன்12ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் படுவது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் சரியான நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை. இதனால் இந்தப் பகுதியில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.


இந்நிலையில்தான் புதிய முறையில் விவசாயம் செய்வது குறித்து நான் தேடி அலைந்தேன். மாத்திரை வடிவிலான குழாய்களின் மூலம் விவசாயம் செய்தால் தண்ணீர் தேவையை குறைக்கலாம், நேரத்தை மிச்சப்படுத்தலாம் என தெரிந்துகொண்டேன்.

இதைச் செய்வதற்கு முடிவெடுத்தபொழுது, பெரிய அளவில் வரவேற்பு இல்லை. கூடவே இதற்கு எதிர்மறையாகவே விமர்சனம் செய்தார்கள். அதையெல்லாம் காதில் வாங்காமல் துணிந்து வேலை செய்ய ஆரமித்தேன்.
இந்த கேப்சூல் முறையில் நெல், தக்காளி, கத்தரிக்காய், எள், உள்ளிட்ட பயிர்களை விதைக்கலாம்.
நிலத்தை நன்றாக உழுது, அதன்பிறகு தண்ணீர் இல்லை என்றாலும் இந்த முறையில் விதைக்க முடியும், மாத்திரை அளவிலான சின்ன சின்ன டியூப்களில் தனித்தனியே மூன்று நெல்மணிகளும், பூச்சிகொல்லியாக வேப்பங்கொட்டை தூள் அல்லது இயற்கை உரங்களை அந்த கேப்சூல்களில் தண்ணீர் படாமல் நிரப்பிக் கொண்டு, விதைக்கும் பணியில் ஈடுபடுவோம்.

பொதுவாக நெல் பயிரிட 135 நாட்கள் ஆகும் எனில் அதைவிட 120நாட்களில் இந்த முறையில் மகசூல் எடுக்க முடியும். நாற்றங்கால் விட 35 நாட்கள் தேவை, ஆனால் இந்த முறையில் நாற்றங்கால் தேவையில்லை நேரடியாக விதைப்பதால் 35 நாட்களுக்கான தண்ணீரும், கூலி ஆட்கள், மின்சாரம், நேரம் உள்ளிட்ட செலவுகள் மிச்சமாகிறது.

Half page

நான், இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் உற்பத்தி சற்று குறைவாக இருக்கும். செயற்கை ரசாயன உரங்கள் போட்டு விவசாயம் செய்யாமல் இயற்கை முறையில் விளைச்சலை பார்ப்பதில் உள்ள சந்தோசமே தனி என்கிறார் வெங்கடெஷ்.

நான் பயன்படுத்தும் கேப்சூல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, ஆயிரம் கேப்சூல்கள் உள்ள ஒரு பாக்கெட் 100 ரூபாய் முதல் 120 வரை சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கிறது.
இதுமட்டுமல்லாமல் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்திக்கு மற்ற முறைகளில் விதை நெல் சராசரியாக 10 கிலோ வரை தேவைப்படும் ஆனால் கேப்சூல் முறையில் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இருந்தாலே போதும்.

இந்த கேப்சூல்களை நிலத்தில் புதைத்தால், தண்ணீர் பட்டவுடன் அவை கரைந்துவிடும். ஆனால் இதற்கு அதிகமான தண்ணீர் தேவையில்லை.இப்படி நாற்றங்கால் விடவும், சேடை ஓட்டவும் என அதிக தண்ணீர் தேவையில்லாத நிலையில், தண்ணீர் இருந்தாலும் இல்லை என்றாலும், இந்த முறையில் விதைக்கலாம்,

விதைத்து 1 மாதம் வரை விதைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளதால் விதைகள் அழுகாது.தண்ணீர் நிலத்திற்கு வரும்போது விதைக்கப்பட்டுள்ள கேப்சூல்கள் கரைந்து பயிர் வளர்கின்றது இதில் வளரும் ஒவ்வொரு கேப்சூல்களிலும் விதைக்கபடும் நெல் 60 தூர்கள் வளரும் இதில் நோய் தாக்கம் இல்லாமல் நல்ல வளர்ச்சி கிடைக்கிறது.

தூர்கள் அனைத்தும் வி வடிவில் வளர்ந்து வருவதால் சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் அனைத்தும் சீராக இருக்கும், இதனால் பூச்சி தாக்குதல் மிகமிக குறைவாக இருக்கும்.

இந்த முறையை பின்பற்றி நல்ல மகசூலை பெற முடியும் என்றும், இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் விரல்களில் பிடித்து நடவு செய்ய முடியாத பயிர்களையும், நாற்றங்கால் விடாமல் பயிரிட முடியும். மொத்தத்தில் செலவு குறைவு, உற்பத்தி கணிசமாக இருக்கும் நட்டம் இல்லை என்றார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.