பழந்திண்ணி பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

0
1

பழந்திண்ணி பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழந்திண்ணி எனப்படும் வவ்வால்களுக்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிக்காமல், மத்தாப்புகளை கொளுத்தாமல் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

Helios

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அமயபுரம் ஊராட்சியில் உள்ள தோப்புபட்டி கிராமத்தில். உள்ள முனியப்பன் கோவிலில் உள்ள ஆலமரத்தில் பழந்திண்ணி எனப்படும் வவ்வால்கள் நிறைய உள்ளன.
வவ்வால்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டும், அங்கும் இங்கும் பறந்து கொண்டும் இருக்கும்.

மாலை நேரங்களில் இறை தேடிச் செல்லும் வவ்வால்களின் அழகு அவ்வளவு அருமையாக இருக்கும். இரவெல்லாம் வேட்டையாடிய பழந்திண்ணி பறவைகள், அதிகாலையில் மீண்டும் வரும்.

தலைகீழாய் பகல் நேரம் முழுக்க மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும்.
இந்த வவ்வால்கள் இனம் குறைந்து வருவதால், கடந்த சில வருடங்களால் சில வவ்வால்களே இருந்தன.

2

இதைப் பாதுகாக்கும் முயற்சியில் தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்ட இரைச்சலை ஏற்படுத்தும் விழாக்களை தவிர்க்க ஆரமித்ததன்
விளைவு இப்போது வவ்வால்கள் அதிகரித்துள்ளன.

மெல்ல மெல்ல பட்டாசுகள் வெடிப்பதை குறைத்த கிராம பொதுமக்கள், இப்போது தீபாவளி மற்றும் பட்டாசுகளை கொண்டாடுவதைத் தவிர்த்துவிட்டார்கள்.

தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

பறவைகளுக்காக பட்டாசுகளை புறக்கணிக்கும் இந்த கிராம மக்களின் பண்பு பாராட்டதக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.