வறுமைக்காக புத்தகம் விற்க ஆரம்பித்தேன்.. – திருச்சி சோமசுந்தரம்

0
1

வறுமைக்காக புத்தகம் விற்க ஆரம்பித்தேன்.. – திருச்சி சோமசுந்தரம்

 

40 வருடமாக நடமாடும் நூலத்தை நடத்தி வருகின்றார் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம்.

கடந்த 1975ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரத்தால் தொடர்ந்து படிக்கவில்லை. படிக்கும்போதே என்ன செய்யலாம் என யோசித்தவர், புத்தகம் வாசிக்கும் ஆர்வமுள்ள அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக முதல் முதலாக அரசியல், சினிமா, கட்டுரைகள், நாவல்கள், உள்ளிட்ட புத்தகங்களை வாங்கி, அதனை ஒரு நாள் வாடகைக்குக் கொடுப்பது, அவர்கள் படித்ததும் புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு மற்றொரு புதிய புத்தகத்தை வழங்குவது என ஆரம்பித்தது இவரின் அடுத்தகட்ட வாழ்க்கை.

நம்மிடம் சோமசுந்தரம்…
வறுமை என்னைத் துரத்தியதால் அதை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்தப் பணியைத் துவங்கினேன். எனக்கென எந்த இலக்கும் இல்லை. ஆரம்பத்தில் இந்தத் தொழில் என் வறுமையைப் போக்க உதவியாக இருந்தது. அதோடு அடுத்தவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது பிடித்திருந்தது. அதனால்தான் இதைத் தொடர்ந்து செய்கிறேன்.

கடந்த 40 வருடங்களான எனக்கு 2000 வாசகர்கள் திருச்சி முழுவதும் இருக்கிறார்கள். ஆரம்பக் காலகட்டத்தில் என்னுடைய வருமானம் சிறிது என்றாலும் அது கொஞ்சம் சேமித்து அதை என்னுடைய தொழிலுக்காக முதலீடாக மாற்றினேன். அதிலும் அதை அப்போதே காப்பீடு மூலம் மாதம் 10 ரூபாய் சேமித்தால் 60 மாதங்கள் கழித்து 600 ரூபாய் மொத்தமாகக் கொடுப்பார்கள் அந்த வகையில் சேமித்து வருகிறேன்.

2

என்னுடைய சேமிப்பின் மூலம் ஒரு நூலகத்தை அமைத்து அதன் மூலம் அன்று முதல் இன்று வரை உள்ள அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள், அவர்களுடைய படைப்புகள், செய்திகள் தொடர்பான வாரப் புத்தகங்கள், செய்தித் தாள்கள், ஆன்மீகம், மருத்துவம், தொழில்நுட்பம் என்று அனைத்து விதமான சேகரிப்பு புத்தகங்களும் தன்னுடைய நுலகத்தில் உள்ளது.

அதில் புத்தகத்தின் தன்மைக்கு ஏற்றது போல வாடகைக்குக் கொடுக்கிறேன்.
வாசிப்பு மிக முக்கியமான ஒன்று அதனை எளிதில் மறக்க முடியாது. ஒரு பதிவை, திரும்பத் திரும்ப வாசிக்கும் போது தான் அவற்றில் பல விவாதங்கள் எழும், கேள்விகள் எழும், அந்தக் கேள்விகள் நான் வழங்கும் புத்தகங்களால் வாசகர்களுக்கு பல ஆக்கப்பூர்வமான தகவல்களைத் தருகிறது. அதுபோதும் என்றார்.

முதன்முதலில் காலை 5.30 மணிமுதல் காலை 8 மணி வரையும், மாலை வகுப்பு முடிந்த உடன் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வாடகைக்கு வீடுவீடாகச் சென்று புத்தகங்களை வழங்கி வந்தவர், அடுத்துப் பத்தாம் வகுப்புடன் வறுமையால் அடுத்து அவரால் படிக்க முடியாமல் போக, முழுநேர தொழிலாக நடமாடும் நூலகமாகவே வாழ ஆரம்பித்துள்ளார்.

தினந்தோறும் காலை 5.30 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் 600 புத்தகங்கள் அடங்கிய கை பைகளை எடுத்து மாட்டிக் கொண்டு திருச்சி முழுவதும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பகுதி எனக் கிளம்பும் இவர், புத்தங்களை விநியோகம் செய்கிறார்.

மாலை 6 மணி வரை இந்தப்பணி. இடையில் கையில் கொண்டுவரும் உணவை, எங்காவது நிழல் கிடைக்கும் இடத்தில் மதிய உணவு உண்டபிறகு, மீண்டும் சைக்கிளை தள்ள ஆரம்பிக்கிறார். முதன்முதலில் மாதச் சந்தாவாக ரூ.2 வசூலித்து வந்த இவர் இன்று மாதம் ரூ.220க்குப் புத்தகங்களை வழங்கி வருகிறார்.

திருச்சி சோமசுந்தரத்தின் தொடர்பு எண் – 9791820213

3

Leave A Reply

Your email address will not be published.