குழந்தைகளைக் கிழிக்காதீர்கள்

0
D1

தமிழகத்தின் பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான பாடல் போட்டியின் தகுதிச் சுற்றில் 8வயது குழந்தை தோல்வி அடைகிறாள். தோல்வியின் வலியில் அழுகிறாள். . . .

குழந்தையின் அழுகையை உருக்கமான பின்னணி இசையுடன் ஒளிபரப்பு செய்கிறது அந்தச் சேனல் தனது டி.ஆர்.பி. ரேட்டுக்காக. காணும் பார்வையாளர்கள் கண்ணும் கலங்குகிறது. இதோடு அந்த சேனலின் ஒளிபரப்பு நிற்கவில்லை. அந்த குழந்தையின் தாய், தந்தையும் அதே உருக்கமான இசையுடன் அழும் காட்சி ஒளிபரப்பாகிறது.

இன்னும் பார்வையாளர்கள் பரிதாபம் அந்தக் குழந்தையின் மேல் விழுகிறது. இதனைப் பார்க்கும் ஒரு முழு ஆளுமைத்தன்மை கொண்ட தாய், தந்தைக்கு சிரிப்புதான் வரவேண்டும். தன் பிள்ளை தோற்று நிற்கும்போது ‘அழாதடா. . . இது கடைசி அல்ல. இன்னும் ஆயிரம் களம் உனக்கு உண்டு’ என்று தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டிய பெற்றோரும் சேர்ந்து அந்தக் குழந்தையின் தோல்வியில் அழுவது அந்தக் குழந்தையை கோழையாய், தான் தோற்றால் தோற்றதுதான் என்ற மனநிலையை உருவாக்கும் போக்குதான் சமூகத்தில் பெருகி வருகிறது.

D2
N2

உணவில், உடையில், கல்வியில், விளையாட்டில், நட்பு வட்டத்தில் ஒப்பீட்டு மனநிலையில் குழந்தைகளை இயந்திரமாய் மாற்றி மதிப்பெண்களிலும், சான்றிதழ்களிலும், கைத்தட்டலிலும் மகிழும் பெற்றோர் அந்த குழந்தையின் தனித்திறமை, கல்வி ஆற்றல், ஆளுமைப் பண்பு இவற்றைக் கண்டுபிடிக்காமல் இன்றைய நுகர்வு கல்வி கலாச்சாரத்திற்கு பலி கொடுத்துவிட்டு நாளைய வேலை வாய்ப்புக்காக தவம் இருந்து வாழ்க்கை கல்வியில் தோற்றுப்போன குழந்தைகளை உருவாக்கி வருகிறோம்.

பெற்றோர் மாற வேண்டிய சூழல் வந்துவிட்டது. குழந்தை வளர்ப்பு, கல்வி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை இவற்றை புதிய கோணத்தில் அணுகி, பெற்றோர்களாகிய நம் வழியாக வந்த புனித ஆன்மாக்களை (குழந்தைகளை) வளர்க்க வேண்டாம்… உயர்த்துவோம். அதுவே குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தமாகும்.
நன்றி.-

ஆசிரியர்

N3

Leave A Reply

Your email address will not be published.