செய்திகள் மக்களுக்கானதாய் மாற வேண்டும்

0
full

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பல திருப்புமுனைகளை உண்டாக்கிய மையப்புள்ளி.

திருச்சி மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் அல்ல, ஆனால் தேசிய கல்வி நிறுவனங்களான என்,ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்டவையும், தொழில் நிறுவனங்களான துப்பாக்கி தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே பணிமனை, பி.எச்.இ.எல். ஆகியன அமைந்துள்ள திருச்சி, “இந்தியாவின் கட்டுமானம் மற்றும் ஆற்றல்சார் தலைநகரம்’’ என அழைக்கப்படுவது திருச்சிவாசிகளான நமக்கு பெருமையே.

ஈடுஇணை இல்லாத நம் மக்களின் உழைப்பால் உருவாகி, உயர்ந்து நிற்கும் திருச்சி மாவட்டத்தின் வாசகர்களாகிய உங்களுக்கு ”நம்ம திருச்சி” செய்தி இதழின் வணக்கங்களும் வாழ்த்துக்களும்,
செய்திகள், ஒரு நாளில் அரை மணி தொகுப்பாக இருந்தபொழுது, நமக்கிருந்த ஆர்வம், இன்று 24மணிநேரமும் செய்திகளாகிவிட்ட இப்பொழுது ஏனோ, நம்முள் ஒரு வித சலிப்பை உண்டாக்கிவிட்டன.

poster

இதற்கு காரணம் இன்றைய ஊடகங்கள் வெகுஜன மக்களிடமிருந்து வெகுதூரம் போய்விட்டதால்தான். தொழில்நுட்ப வளர்ச்சியால் விரல் நுனியில் குவிந்துவிடும் தகவல்களில், தேவையானவற்றை பத்திரப்படுத்தி வைத்திட நினைத்தாலும் அது பலநேரங்களில் கடந்துபோகும் சம்பவங்களாகிவிடுகின்றன.

ukr

”என்திருச்சி” செய்தி இதழின் நோக்கம் நாம் தொலைத்துவிட்ட ஊர்பாசம், மலைக்கோட்டை மாநகரின் கலச்சாரம், வரலாறு, சாதனை மற்றும் சாதனையாளர்கள் இவற்றைத் தேடி அதன் வேர்களை இன்றைய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்துவதே ஆகும்.

நம் திருச்சி மாவட்டத்தின் விவசாயம் – விவசாயிகள் – கிராமங்கள் – கல்வி நிறுவனங்கள் – கல்வியாளர்கள் –மாணவர்கள் – தொழிற்சாலைகள் – தொழிலாளர்கள் – சிறுதொழில் – தொழில் முனைவோர்-அரசு – அரசியல்வாதிகள் – ஆட்சியாளர்கள் – மாநகராட்சி – பொதுமக்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்ற சமூக தொடர்புள்ள அனைத்து தளங்களையும் செய்திகளாக, தகவல்களாக ”என் திருச்சி” நாளிதழ் வழியாக உங்களோடு இணைக்கும் ஒரு பெரும் முயற்சியை தொடங்குகிறோம்.

“செய்திகள் மக்களுக்கானதாய் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்பட வேண்டும் என்கிற தோழமை உணர்வில் உதித்ததே ”என் திருச்சி” இதழ்.. வாசகர்களாகிய உங்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் புதியவர்களாகிய எங்களுக்கும் தொடர வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனும் இணையில்லாத இயற்கையும் நம்மை வழிநடத்தட்டும் நன்றி !

– ஆசிரியர்

half 1

Leave A Reply

Your email address will not be published.