பள்ளி வாகனங்களில் சிசிடிவி

0
Business trichy

அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை நான்கு வாரங்களுக்குள் பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த மனுவில், “சில மாதங்களுக்கு முன்பு கோவையில், தனியார் பள்ளி வாகனத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு வாகன ஓட்டுநரும் அவரது உதவியாளரும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுபோன்ற சம்பவங்களால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

MDMK

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த உத்தரவிட வேண்டும். இணையத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கானது முன்னதாக நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த மனுவானது ஜூலை 26 மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜூலை 22 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவானது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் தமிழக அரசின் உத்தரவினை 4 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.