திருச்சி சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

0
Business trichy

திருச்சி சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

இளங்கனல் தொண்டு நிறுவனம், காமராஜர் படிப்பகம் இணைந்து இந்திய திருநாட்டின் 73 வது சுதந்திர தின விழா திருச்சி, புத்தூர், திரு.வி.க நகர், காமராஜர் படிப்பகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெற்றது.

Kavi furniture

இவ்விழாவை திரு.வி.க நகர் மக்கள் நலச் சங்க தலைவர் சூசை மாணிக்கம் தேசிய கொடியேற்றி துவங்கி வைத்தார்.

அமிர்தாயோக மந்திரம் அறக்கட்டளையின் நிர்வாகியும் யோகா ஆசிரியரும் ஆன விஜயகுமார் சுதந்திர தின சிறப்புரையாற்றினார்

அதனைத் தொடர்ந்து கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்களால் பறை இசை, விழிப்புணர்வு பாடல் மற்றும் பலகுரல் நிகழ்ச்சி மூலம் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

MDMK

மேலும் தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களால் சிலம்பாட்டம் நிகழ்த்திக் காட்டினார். அதன்பின், குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சதீஷ்குமார், தமிழன் சிலம்ப பாசறை நிறுவன கார்த்திக் ரகுநாத், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார்

இந்நிகழ்வில் தாஸ், கருப்பையா, உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்

முன்னதாக இளங்கனல் பொருளாளர் ரஞ்சித்குமார் வரவேற்க,
செயலர் அற்புத சகாய ராஜ் உறுதிமொழி ஏற்க
தலைவர் அந்தோணி ஜெய்கர் நன்றி கூற இயக்குனர் நிர்மலா இந்நிகழ்வினை தொகுத்து வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.