திருச்சியில் திருவிழாவில் பெண்ணிடம் 5 பவுன் அபேஸ்.

0
1 full

திருச்சியில் திருவிழாவில் பெண்ணிடம் 5 பவுன் அபேஸ்.

மணப்பாறை அருகே கோயில் திருவிழாவையொட்டி நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை பால்குட உற்சவம் நடைபெற்றது. அய்யாகுளம் இரட்டை விநாயகர் கோயிலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைபவம் நடைபெற்றது. திருவிழாவில் அன்னதானம் நடைபெற்ற பகுதியில், போலம்பட்டியை சேர்ந்த நித்யா என்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.