திருச்சியில் கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் பலி

0
D1

திருச்சியில் கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் பலி

N2

திருச்சியில் கணவர் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர் மேலவாரித்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர் சோடா கம்பெனி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலெட்சுமி (வயது 47). நேற்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மனோகரன் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டிற்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மனோகரன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, தனலெட்சுமி பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே உள்ள புதுப்பாலத்தில் வந்தபோது, சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துறையூருக்கு சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த தனலெட்சுமி மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோகரன் காயமின்றி உயிர் தப்பினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.