திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை.

0
gif 1

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் மார்ச் 13 அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வீட்டினுள் தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gif 4

இதைத்தொடர்ந்து விசாரிக்கையில் திருச்சி திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி வீதி மூன்றாவது தெருவில் வசித்து வந்தவர் சகயராஜ் (46) ஆட்டோ ஓட்டுனராக இருந்துவந்தார். இவருக்கு நந்தகுமார்(22), முத்துலட்சுமி(25) நர்சிங் படிப்பு படித்துள்ளார். என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மகன் நந்தகுமார் தீடீரென மரணமடைந்தார்.  இதில் மனமுடைந்த சகயராஜ் குடும்பத்தினர் மண வருத்தத்தில் இருந்துவந்துள்ளனர். தற்போது சகாயராஜ் குடி இருந்து வருகின்ற வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி சமீபத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டு வாடகை கேட்பதற்காக தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. எனவே இன்று மாலை வீட்ற்கு வாடகை கேட்பாதற்காக வந்த வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி வீட்டினை சென்று பார்க்கையில் சகாயராஜ் , அவரது மனைவி யுவராணி (39),மற்றும் அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் வீட்டினுள் தூக்கில் தொங்கியபடி கிடைந்துள்ளனர். இதனை பார்த்த விஜயலெட்சுமி அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து கத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கப்பக்கத்தினர் திரண்டு அவரிடம் விசாரித்து உடனே பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீடுகளை சோதனையிட்டு பார்க்கையில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் சகாயராஜ் அவருடைய அக்கா சுசிலா என்பவரிடம் 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளதாகவும், அவற்றை தனது ஆட்டோவை விற்று எடுத்துக்கொள்ளுமாறும், தாங்கள் இறந்த செய்தியினை தனது அப்பாவிற்கோ, உறவினருக்கோ தெரிவிக்கவேண்டாம் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாக தெரிகிறது. மேலும் பொன்மலை காவல் துறையினர் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

gif 3

திருச்சி மாநகரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

செய்தி – ஜெ.கே

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.