இப்படியும் மாநாடு நடத்தலாமா ?

0
D1
ஆர்ப்பாடங்களில்லை, வெறுப்பு,துவேஷ பிரச்சாரங்கள் இல்லை. அரசியல் இல்லை.
ஆனால், கலை மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆரோக்கிய முன்னெடுப்புகளை பார்க்க முடிந்தது!
D2
மக்கள் ஒற்றுமை மேடை நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடத்திய மத நல்லிணக்க மாநாடு உண்மையில் கவனப்படுத்த வேண்டிய முக்கிய நிகழ்வே!
எந்த விதத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றால்;
பாஜக,ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் மீதான துவேஷப் பிரச்சாரம் இல்லாதது!
வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அர்த்தமுள்ள மனித நேய அணுகுமுறை தூக்கலாக சொல்லப்பட்ட வகையில்!
காந்தியை முன்னிறுத்தி கட்டமைக்கப்பட்ட ஒரு மாநாடு அதற்கான கண்ணியத்தை கடைசி வரை காப்பாற்றிய வகையில்!
சிபிஎம் சார்பான அமைப்பு என்ற போதிலும் கட்சியின் ஆதிக்கம் துளியும் இல்லாதவாறு பொதுத் தன்மையுடன் நடத்தப்பட்ட வகையில்!
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மத நல்லிணக்கம் குறித்த கட்டுரை போட்டி நடத்தி அவர்களையும் காந்தியப் பாதையில் பயணிக்க வைத்த வகையில்!
N2
கம்யூனிச கருத்துக்கு அப்பாற்ப்பட்ட மத நம்பிக்கையுள்ள, ஆரோக்கியமான  சத்தியவேல் முருகானார் போன்ற ஆன்மீக பெரியோர்களை அழைத்ததன் மூலம் அவர்களை பின்பற்றும் ஆன்மீக ஆதரவாளர்களிடம் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விதத்தில்!
நாத்திகர்களே மத நல்லிணக்கத்தை பேசி வலியுறுத்தி தங்களுக்குள்ளாக பேசிப் பிரிந்து செல்லாமல் புதிய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்தவகையில்!
மேடையின் வலது புறமாக வைக்கப்பட்டிருந்த  பேனரில் அடையாளபடுத்தப்பட வேண்டிய ஆளுமைகளின் படங்கள் சிறப்பு. ஆனால்,அதில் அப்துல்கலாம் மற்றும் அன்னை தெரசா படங்கள் இணைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
தோழர்கள் அருணன்,உதயக்குமார்,பிரளயன்,ஆர் டி முத்து,தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் போன்ற பல முக்கிய தோழர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் பின்னணியில் இருந்து செயல்பட்ட வகையில்!
மேலும் தோழர்கள் ஜவாஹிருல்லா,காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன்,மற்றும் கிறிஸ்த்துவ,இஸ்லாமிய முக்கியஸ்தர்கள் தீர்மானத்தை வாசித்து,அளவோடு பேசிய வகையில்!
நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும், பேராசிரியர் பர்வீன் சுல்தானாவும் பேசிய நடைமுறை சார்ந்த கருத்தாழமிக்க உரையின் சிறப்புக்காக!
இப்படியாக பலவகைகளில் கவனப்படுத்தப்பட வேண்டிய நிகழ்வே இது!
இதே அமைதி,அடக்கம் அர்த்தம் செரிந்த வகையில் தொடர்ந்து இது போன்ற முயற்சிகள் மாநிலம் தழுவிய அளவிலும்,தேசம் தழுவிய அளவிலும் மக்கள் பங்கேற்புடன் நடக்கட்டும்!

 

–  சாவித்திரி கண்ணன்…

N3

Leave A Reply

Your email address will not be published.