திருச்சிமாவட்டத்தின் 142 வது புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

0
நம்ம திருச்சி-1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 142 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக சு.சிவராசு, இன்று (18.02.2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம். எனது தகப்பனார் பெயர் திரு.சுப்பையன், கடந்த 2004ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தேன். அதன்பிறகு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியராகவும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)வாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், மதுரை மாநகராட்சியில் துணை ஆணையராகவும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் துணை ஆணையராகவும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலராகவும்,   கோயம்புத்தூர் மாவட்டத்தில் வணிகவரித்துணை இணை ஆணையர்(செயலாக்கம்)ஆகவும், இன்று (18.02.2019) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.  கடந்த 2011ஆம் ஆண்டு பதவி மூப்பின் மூலம் ஐ.ஏ.எஸ். பதவி கிடைத்தது.

மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள் மூலம் அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லப்படும்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யாசெந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவருத்ரய்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன்(திருச்சி), பாலாஜி(இலால்குடி), ரவிச்சந்திரன்(முசிறி) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.