திருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

0
ntrichy


திருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 23ம் தேதி துவங்கி ஜுலை 1ம் தேதி வரை நடக்கிறது
திருச்சி, ஜூன் 16: திருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 23ம் தேதி துவங்கி ஜூலை 1ம் தேதி வரை 12 இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. அதன்படி, 23ம் தேதி திருச்சி மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ.கருப்பையா பங்கேற்கிறார். 24ம் தேதி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ.கருப்பையா பங்கேற்கிறார். 24ம் தேதி திருச்சி மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்கிறார்.

25ம் தேதி துவாக்குடி நகரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ. கருப்பையா பங்கேற்கிறார். 25ம் தேதி திருச்சி மாநகரத்தில் நடக்கும் பொதுக் கூட்ட த்தில் ஜெகத்ரட்சகன் பங்கேற்கிறார். 26ம் தேதி காட்டுப்புத்தூர், தொட்டியம் ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஐ.லியோனி பங்கேற்கிறார். 27ம் தேதி துறையூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாசுவிக்ரம் பங்கேற்கிறார். 28ம் தேதி மணப்பாறை நகரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாசுவிக்ரம் பங்கேற்கிறார்.29ம் தேதி லால்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கந்திலி.கரிகாலன் பங்கேற்கிறார். 30ம்தேதி திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கந்திலி.கரிகாலன் பங்கேற்கிறார். 30ம் தேதி புள்ளம்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் வக்கீல் பரந்தாமன் பங்கேற்கிறார். ஜூலை 1ம் தேதி தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.